எதிர்நீச்சல்: ஜனனியின் ஆசையை நிறைவேற்ற முடிவு எடுக்கும் மற்ற மருமகள்கள்.. குணசேகரனுக்கு விழும் அடி!
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி அப்பத்தாவின் ஊருக்கு செல்வதற்காக முடிவெடுத்து இருக்கிறார்.
தன்னுடைய ஆசைக்காக ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி மூவரும் தன்னோடு வரவேண்டும் என்று ஜனனி வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
குணசேகரனின் எதிர்ப்பையும் மீறி மற்ற மூன்று மருமகள்களும் ஜனனியோடு செல்ல இருக்கின்றனர்.

இதுதான் கடைசி பொங்கலா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவின் திடீர் மாற்றத்தால் குணசேகரன் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே அப்பத்தா திடீரென காணாமல் சென்றிருந்த நிலையில், என்ன வேலையை செய்து வைத்திருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் அப்பத்தாவிடம் நேரடியாக உனக்கு இதுதான் கடைசி பொங்கல் என்று குணசேகரன் கூறி இருக்கிறார். ஏற்கனவே அப்பத்தா காணாமல் போனதும் அதற்கு காரணம் குணசேகரன் தான் என்று நம்பும் படியாக தான் பல செயல்கள் நடைபெற்றது. ஆனால் கடைசியில் மீண்டும் அப்பத்தா வந்து விட்டார்.

ஒரே சஸ்பென்ஷா இருக்கு
இந்த நிலையில் அடுத்ததாக குணசேகரன் என்ன பிளான் வைத்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடியாமலும் அதே நேரத்தில் அதைப் பற்றி எதிர்பார்ப்போடும் ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் அப்பத்தா நான் உனக்கு சளைத்தவள் அல்ல என்று சொல்லும் விதமாக அப்பத்தாவும் பல ரகசியமான வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார். அதைப்பற்றி ஜனனியிடம் கூட வெளிப்படையாக பேசாமல் அப்பத்தா காத்திருக்கும் நிலையில் பொங்கல் பண்டிகையில் என்ன நடக்கப்போகும் என்று எதிர்பார்ப்பு இப்போதே கூடியிருக்கிறது.

அப்பத்தாவின் புது ப்ளான்
இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் பட்டம்மாள் தன்னுடைய சொந்த ஊருக்கு வீட்டில் இருக்கும் மூன்று மருமகள்களையும் கூப்பிட, அதற்கு அனைவரும் நாளைக்கு தானே வருவதாக இருந்தது எதற்காக இவர்களையும் மட்டும் முந்தின நாளே கூட்டிக்கொண்டு செல்கிறீர்கள் என்று குணசேகரனின் அம்மா கேட்க, வீட்டில் கொஞ்சம் துப்புரவு வேலை இருக்கிறது அதனால் நாங்கள் ஒரு நாளைக்கு முன்பு செல்ல வேண்டும் என்று பட்டம்மாள் கூற அதற்கு குணசேகரனும் பதில் சரி என்று ஒப்புதல் கொடுக்க பெண்கள் எல்லோரும் இன்று பட்டம்மாள் அப்பத்தாவுடன் கிளம்பி செல்கின்றனர்.

வாயை அடைக்க வச்சுட்டாங்களே
ஜனனி இன்று ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி என மூவரிடமும் நீங்கள் எனக்காக என்னோடு வரவேண்டும் என்று தன்னுடைய ஆசையை கூற, நந்தினியும் ஈஸ்வரியும் ஜனனிக்கு சத்தியம் செய்து கொடுக்கின்றனர். ரேணுகா மட்டும் யோசித்துக் கொண்டிருக்கும் போது, நந்தினி நீங்க டம்மி பீஸை கட்டிக்கிட்டு எதுக்கு அக்கா யோசிக்கிறீங்க? என கேட்க அனைவரும் குபிரென சிரித்துக் கொண்டு இருக்கின்றனர். பின்பு எல்லோரும் கிளம்பி போகும்போது நந்தினி இடம் கதிர் என்னைய கேட்காமல் எப்படி என் பிள்ளையை கூட்டிகிட்டு போற என கேட்க? தொடை இல்லாம என்ன பண்ணு என்று நந்தினி பதில் சொல்ல, எங்களை எல்லாம் பார்த்தா உனக்கு மனுஷங்க மாதிரி தெரியலையா? என நந்தினி மாமியார் கேட்க, பார்ப்பதற்கு மட்டும் மனுசங்க மாதிரி இருந்தா போதுமா? என்று அப்பத்தா பாட்டி பேச இதற்கு மேல பேசினா நமக்கு மரியாதை இல்லை என குணசேகரன் கூறி வாயை மூடுகிறார். இந்த பிரமோ தற்போது பரபரப்பாக வலம் வருகிறது.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications