தர்ஷினியை கடத்தியது ஜான்சி ராணியா? ஜெயிலுக்கு போகும் பெண்கள்! அம்பலமாகும் குணசேகரன் ரகசியம்?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பிப்ரவரி ஒன்பதாம் தேதிக்கான ப்ரோமோவில் நடந்த நிகழ்வுகளை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கப் போகிறோம். அதாவது தர்ஷினியை யார் கடத்திருக்கிறார்கள் என்று கேள்விகள் அனைவருக்கும் இருக்கும் நிலையில் குணசேகரன் கொடுத்த போலீஸ் கம்ப்ளைன்ட் காரணமாக இன்று எதிர்நீச்சல் பெண்களுக்கு நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.
அதிக நேரத்தில் நேற்றைய எபிசோடில் நடந்த நிகழ்வுகள் குறித்தும் அதில் ஜான்சி ராணியின் நடவடிக்கையால் மக்களுக்கு வரும் சந்தேகங்கள் குறித்தும் தெளிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக தர்ஷினி கடத்தப்பட்டு இருக்கும் நிலையில் தர்ஷனியை கடத்தியது யார் என்று இப்ப வரைக்கும் தெளிவாக தெரியவில்லை. ஆனால் தர்ஷினியை கடத்தி வைத்திருக்கும் அடியாள்களில் தலைவன் 'குதிரை' அடிக்கடி ஒரு பெண்ணிடம் போனில் பேசி நாங்க இந்த பொண்ணை ரொம்ப பத்திரமா வைக்க முடியாது. இங்கு கூட இருக்கிற பசங்க எல்லாம் ரொம்ப மோசமா இருக்காங்க நீ எப்ப வர என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அதனால் தர்ஷினியை கடத்தி வைத்திருப்பது ஒரு பெண்தான் என்று தெரிகிறது. அதே நேரத்தில் குணசேகரனின் நடவடிக்கையும் பெரிய அளவில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதாவது நேற்று முன்தினம் எபிசோடில் போலீஸ் குணசேகரனுக்கு போன் பண்ணி நீங்க கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்த பெண்களை கண்டுபிடிச்சாச்சு என்று சொல்ல குணசேகரன் அதிர்ச்சி அடைந்திருப்பார். எல்லாரையும் கண்டுபிடிச்சிட்டீங்களா? என்று மீண்டும் மீண்டும் கேட்டார்.

அப்போது போலீஸ் உங்க வீட்டு மருமகள்க நாலு பேரையும் அந்த ஜீவானந்தத்தையும் கண்டுபிடித்து இருக்கோம் என்று சொல்ல, அதற்கு பிறகு குணசேகரின் முகத்தில் ஒரு மாற்றம் தெரிந்தது.. அப்போதுதான் அந்த பொம்பளைங்கள விட்டுறாதீங்க அவளுகளை அங்கேயே பிடிச்சு வைங்க, நான் இப்ப வரேன் என்று சொல்லி இருந்தார். அதுபோல நேற்று போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து இவளுங்க தான் என் பொண்ணை கடத்தி வச்சிட்டு நாடகம் ஆடுறாளுக என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அதே நேரத்தில் ஜீவானந்தம் எதற்காக தர்ஷினி காணாமல் போனதை போலீஸிடம் மறைத்தார் என்று இப்போதும் சந்தேகமாக இருக்கிறது. உண்மையை சொல்லி இருக்கலாம் ஆனால் ஜீவானந்தம் போலீஸ் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று தவறாக காட்ட முயற்சிக்கிறாரா? என்றும் தெரியவில்லை. ஜீவானந்தத்தின் மீது குணசேகரன் கம்பளைண்ட் கொடுத்ததால் போலீசார் எதைப் பற்றியும் யோசிக்காமல் குணசேகரன் பேச்சுக்கே ஆடிக் கொண்டிருப்பார்கள் என்று எதிர்நீச்சல் சீரியலில் காட்டப்படுவது தான் வேதனையாக இருக்கிறது.

போலீசுக்கு என்று சொந்த அறிவு கிடையாதா? ஒரு பொண்ணை கடத்தி வைத்து இருப்பதை பற்றி அந்தப் பெண்ணின் குடும்ப பெண்கள் சொல்வதை காது கொடுத்து கேட்காமல் கண்டமேனிக்கு பேசிக் கொண்டிருக்கிறார். அதுபோல இன்று வெளியான ப்ரோமோவில் எதிர்நீச்சல் பெண்கள் எல்லோரும் நீதிமன்றத்தில் கூண்டுகளில் நிற்கின்றனர். அப்போது அங்கு வழக்கறிஞர் குணசேகரனுக்கு ஆதரவாக குணசேகரனின் மகளை அவருடைய குடும்ப பெண்களே கடத்தி வைத்திருக்கிறார்கள்.
அதனால் இவர்களை காவலில் வைக்க வேண்டும் என்று வாதிடுகிறார். அதற்கு நீதிபதி தீர்ப்பை எழுதிக் கொண்டிருக்கிறார். இதனால் எதிர்நீச்சல் பெண்கள் எல்லோரும் ஜெயிலுக்கு போகப் போகிறார்களா? என்ற கேள்விகளும் எழுகிறது. அப்படியானால் தர்ஷினியை யார் தான் காப்பாற்றுவார்கள் என்று பெரிய கேள்வியும் வருகிறது. அதே நேரத்தில் நேற்று ஞானம் மட்டும் தர்ஷினியை தேடி வீட்டிலிருந்து கிளம்பி போகிறார்.

அதனால் அந்த காட்டுப்பகுதியில் ஞானத்தால் தர்ஷினி கண்டுபிடிக்கப்பட்டு ஞானம் கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்து தன்னுடைய அம்மா என்னை கடத்தவில்லை என்பதை பற்றி தர்ஷினி சொல்வாரா என்பதும் யோசிக்க வைக்கிறது. அதே நேரத்தில் நேற்றைய முன்தினம் எபிசோடில் குணசேகரன் ஜான்சி ராணியை வீட்டை விட்டு துரத்தும் போது ஜான்சி ராணி உங்களை எங்க தட்டுனா வழிக்கு வருவீங்களோ அங்க தட்டுறேன் என்று பஞ்ச் வசனம் பேசிவிட்டு போயிருந்தார்.
அதனால் அவர் தான் குணசேகரனின் புத்தியை தெரிந்து தர்ஷினியை கடத்தி வைத்து பிளாக் மெயில் பண்ணலாம் என்று பிளான் போட்டு இருக்கிறாரா? என்ற குழப்பமும் வந்திருக்கிறது. சரி என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அதுபோல நீங்கள் தர்ஷினியை யார் கடத்தி இருப்பார்கள் என்று நினைக்கிறீர்களோ அதை கமெண்டில் சொல்லிட்டு போங்க.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications