நடிகர் மாரிமுத்துவுக்கு ஜோதிடர்களை தொடர்ந்து நடிகர் பாலா கொடுத்த பிரச்சனை.. இப்படி ஒரு அக்கப்போரா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடிகர் மாரிமுத்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் ட்ரெண்டிங் ஸ்டாராக மாரிமுத்து வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் எதிர்நீச்சல் சீரியலில் பேசும் "யம்மா ஏய்" என்ற வார்த்தை பெரிய அளவில் பிரபலமாகி கொண்டிருக்கிறது.

ஏற்கனவே தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாரி முத்துவுக்கு அடுத்தடுத்து ஜோதிடர்களால் பிரச்சனை வந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாலாவாளும் மாரிமுத்துவுக்கு புது பிரச்சனை வந்திருக்கிறது.
பொதுவாக சிலர் என்ன செய்தாலும் அது கடைசியில் தப்பாக போய் விடுவது வழக்கமாக இருக்கும். அந்த மாதிரி தான் தற்போது எதிர்நீச்சல் குணசேகரன் நிஜ வாழ்க்கையிலும் அடுத்தடுத்து நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு கவர்ச்சியாக உடை அணிந்த பெண் ட்விட்டர் பக்கத்தில் தன்னிடம் போன் நம்பர் கேட்டதற்காக வெளிப்படையாக தன்னுடைய போன் நம்பரை கொடுத்தது பற்றி மாரிமுத்து அந்த நேரத்தில் பெரிதும் பேசப்பட்டார்.
சீரியலில் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறும் குணசேகரன் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் மாரிமுத்து நிஜ வாழ்க்கையில் அந்த கேரக்டருக்கு அப்படியே ஆப்போசிட் ஆக இருந்து வருகிறார். தன்னுடைய நிஜ வாழ்க்கைக்கும் நடிப்பு வாழ்க்கைக்கும் பெரிய அளவில் மாற்றம் இருப்பதாக மாரிமுத்து கூறியிருக்கிறார். தான் எப்போதும் கடவுளே இல்லை என்று சொல்பவர் என்றும் மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர் என்றும் முற்போக்கு சிந்தனையாளர் என்றும் மாரிமுத்து கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் சமீப காலமாகவே வில்லன்களை கொண்டாடும் ரசிகர்கள் எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக இருக்கும் குணசேகரனையும் கொண்டாடி வருகிறார்கள். அந்த சீரியலில் அவர் "யம்மா ஏய்" என்று பேசும் வார்த்தை பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கிறது. அதனாலயே 2கே கிட்ஸ்களும் கொண்டாடும் ட்ரெண்டிங் ஸ்டார் ஆக மாரிமுத்து வலம் வருகிறார்.
அது மட்டுமல்லாமல் சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடர்கள் சொல்லும் நவீன பரிகாரங்கள் மற்றும் அதை ஏற்றுக்கொள்ளாத பொதுமக்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்ட நேரத்தில் சிறப்பு விருந்தினராக அதில் கலந்து கொண்டிருந்தார். அப்போது ஜோதிடர்கள் மற்றும் ஜோதிடத்தை நம்புபவர்கள் பற்றி மாரிமுத்து பேசியதற்கு பல ஜோதிடர்கள் தொடர்ச்சியாக அவர் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து வருகிறது என்றனர்.
இது நிலையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த நடிகர் பாலா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஒரு அறையில் ஒரு பக்கத்தில் மாரிமுத்துவும் இன்னொரு சுவற்றின் அருகில் பாலாவும் நின்று மாரிமுத்து பேசும் அதே டயலாக்கை யம்மா ஏய் என்று பேசி அவரை வம்பு இழுத்து விட்டு பிறகு மாரிமுத்துவோடு விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் கமெண்ட்களை குவிக்கின்றனர். இந்த நிலையில் இந்த வீடியோவிற்கு "ஏய் என்பது ஒரு வார்த்தை. ஆனால் ய்ம்மா ஏய் என்பது ஒரு உணர்வு" என்று நண்பர்கள் தின வாழ்த்துக்களையும் பாலா கூறி இருக்கும் நிலையில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications