மாரிமுத்துவின் இறப்பிற்கு கரிகாலன் சொன்ன அந்த வார்த்தை.. வருத்தத்தில் ரசிகர்கள்..கனிகாவின் ரியாக்சன்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடித்து பிரபலம் அடைந்த நடிகர் மாரிமுத்து நேற்று மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார்.
இன்று அவருடைய சொந்த ஊரில் அவருடைய உடல் தகனம் செய்யப்படுகிறது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் ரசிகர்களும் பல பிரபலங்களும் தொடர்ச்சியாக தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலனாக நடிக்கும் நடிகர் விமல் குமார் தன்னுடைய வருத்தத்தை உருக்கமாக பகிர்ந்து இருக்கிறார். அது பலரையும் கண்கலங்க வைத்திருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடிகர் மாரிமுத்து நேற்று மரணம் அடைந்திருந்தாலும் நேற்று இருந்தே பல சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும், ரசிகர்களும் தொடர்ச்சியாக தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் அவரோடு நடிக்கும் பிரபலங்கள் பலரும் நேற்று அவருடைய உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி விட்டு அங்கேயே கண்கலங்கி கதறி அழுதபடி இருந்தனர்.
இந்த நிலையில் இந்த சீரியலில் கரிகாலனாக நடிக்கும் நடிகர் விமல் குமார் தன்னுடைய வருத்தத்தை நீண்ட பதிவுகளாக வெளியிட்டு இருக்கிறார். அதில்,
ஏமாற்றத்தில் இதயம் வலிக்கிறது ஏன் மாமா பாதியிலேயே நிறுத்திட்டீங்க.
மண்வாசனை மிக்க உங்களின் பேச்சுக்கு எத்தனையோ கோடி ரசிகர்கள்..
அதில் நானும் ஒருவன்.
"பரியேறும் பெருமாள்" படத்தின் மூலம்தான் நான் உங்களை முதலில் பார்த்தது.
எதிர்நீச்சல் சீரியல் நம்மை மாமா- மாப்பிள்ளையாக இணைத்தது.
நடிப்பு ராட்சசரே!
நரம்பு முறுக்கேற கௌர்ஜிப்பவரே!
உன்னுடைய தொண்டைச் செறுமல்...
ஒரு புலியின் உறுமல்.
பக்கம் பக்கமான வசனத்தையும் படித்த வேகத்தில் நடித்து முடித்து நடையை கட்டுபவரே
இன்று உங்களை பார்க்க வந்த படையை பார்த்தீரா?
வீட்டை விட்டு, காட்டை விட்டு, அப்பன் ஆத்தாளை விட்டு தேனியில் இருந்து சென்னைக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு வந்தீர்.
பரியேறும் பெருமாள்- எதிர்நீச்சல் மூலம் உலக தமிழர்கள் இதயத்தில் தேனை விட இனிப்பான கூட்டை கட்டியவர் நீர்.
உதவி இயக்குனர் மாரிமுத்துவாய் நீங்கள் பட்ட கஷ்டம், நடிகர் ஆதி குணசேகரன் நீங்கள் பெற்ற பட்டம், சாலிகிராமத்தில் இன்று கூறிய கூட்டம், சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடிய ஓட்டம்.
மக்களுக்கு மனம் கவர்ந்த வில்லனாக, மனைவிக்கு அன்புள்ள கணவனாக, மகன் மகளுக்கு அக்கறையுள்ள தந்தையாக, எல்லோரையும் மகிழ்ச்சிக்கடலில் ஏற்றிவிட்டு.. நீங்கள் மட்டும் ஏன் கண்ணீர் கடலில் சென்று விட்டீர்!
நீங்கள் அமர்ந்திருந்தது ஆதி குணசேகரன் வீட்டு நாற்காலியில் மட்டுமல்ல, தொலைக்காட்சி பெட்டி உள்ள அனைத்து வீட்டாரின் இதய சிம்மாசனத்தில் தான்.
குறுகிய காலத்தில் நிறைய கற்றுக் கொடுத்தீர். என் சந்தேகங்களுக்கு எல்லாம் விளக்கமளித்தீர். வேட்டைக்கு பாயும் வேங்கையாய் நடித்தீர். எல்லாம் வேகமாய் செல்லாதானா...
கரிகாலா என்று கம்பீரமாய் அழைக்கும் சிம்ம குரலை இனி எப்போது கேட்பேன்..
நான் கண்ட இரும்பு மனிதர், இனி எங்களுடன் இல்லை.
ஆலமரம் நீ!
உனது விதைகள் நாங்கள்.
என் மூளை சிந்தனையச்சு வெடிச்சோடி கிடைக்கிறது. ஏமாற்றத்தில் இதயம் வலிக்கிறது. ஏன் மாமா பாதியில நிறுத்திட்டீங்க.... என்று கரிகாலன் பதிவு வெளியிட்டிருக்கிறார்.
அதற்கு எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் மனைவியாக ஈஸ்வரி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் கனிகா இரு கை எடுத்து கும்பிடுவது போன்றும், இதயம் உடைந்து விடுவது போன்ற இமேஜ்களை அனுப்பி தன்னுடைய வருத்தங்களை தெரிவித்து இருக்கிறார். அதுபோல அதிகமான ரசிகர்களும் தங்களுடைய கனவில் கூட மாரிமுத்துவின் நினைவுகள் வருகிறது. ஆதி குணசேகரனை நாங்கள் ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம் என்று வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications