“பெரியப்பா எழுந்திருங்க” மாரிமுத்துவின் உடலை பார்த்து.. ஸ்கூல் யூனிபார்மில் கதறி அழுத தாரா பாப்பா
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து இன்று காலை திடீரென்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்திருக்கிறார்.
அவருடைய உடல் மருத்துவமனையில் இருந்து சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

அதில் சீரியல் பிரபலங்கள் பலரும் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். அப்போது எதிர்நீச்சல் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து வரும் ஐஸ்வர்யா ரத்தினம் குணசேகரன் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்கும் பலரையும் கண் கலங்க வைத்திருக்கிறது.
சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களால் பாராட்டப்படும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியல் நடிக்கும் நடிகர்கள் பலரும் ரசிகர்களின் மத்தியில் தற்போது அதிகமாக பிரபலம் அடைந்திருக்கின்றனர். இந்த சீரியல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தாலும் இதை பார்க்க வேண்டும் என்று அதிகமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதனாலே இந்த சீரியல் டிஆர்பி யில் முன்னணியில் இடத்தில் இருக்கிறது.
அதுபோல எதிர்நீச்சல் சீரியலின் முக்கிய பலமாக குணசேகரன் கேரக்டர் தான் இருந்து வருகிறது. இந்த சீரியலில் முதல் முறையாக வெள்ளித்திரையில் இருந்து சின்ன திரையில் குணசேகரன் ஆக நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார். இவர் ஏற்கனவே பல திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் வந்திருந்தாலும் முதல் முறையாக சீரியலில் நடித்திருந்த நிலையில் அவரே எதிர்பார்க்காத வகையில் அவருடைய தனித்துவம் காரணமாக அதிகமான ரசிகர்கள் இவரை ரசிக்க தொடங்கியிருந்தனர்.
இந்த நிலையில் சற்று எதிர்பார்க்காத வகையில் இன்று அவர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருக்கிறார். இது சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளி திரையிலும் பல நடிகர்கள் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. அத்தோடு இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ஒரு குடும்பமாக தான் நடித்து வருகிறார்கள். சீரியலில் மட்டும் தான் கேரக்டருக்கு தகுந்த மாதிரி இவர்கள் நடித்து வருகிறார்கள்.

ஆனால் நிஜத்தில் இவர்கள் ஜாலியாக ஒருவருக்கொருவர் சப்போர்ட் பண்ணி இருப்பது பற்றி பல பேட்டியில் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் இன்று நடிகர் மாரிமுத்துவின் இறப்பிற்கு அவரோடு சீரியலில் நடிக்கும் மொத்த நடிகர் நடிகைகளும் கதறி அழுது கொண்டு இருப்பது காண்போரை கண்கலங்க வைத்திருக்கிறது. அந்த வகையில் இந்த சீரியலில் நந்தினி மற்றும் கதிரின் மகளாக தாரா கேரக்டரில் நடிக்கும் குழந்தை "பெரியப்பா எழுந்திருங்க பெரியப்பா" என்று ஸ்கூல் யூனிபார்மில் அந்த இடத்தில் அழுது கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே பேட்டியில் ஐஸ்வர்யா குணசேகரன் நிஜத்தில் ஒரு டம்மி பீசு அவர் சீரியலில் இருப்பது போன்றெல்லாம் எங்களிடம் இருக்க மாட்டார். எங்களோடு குழந்தை போல தான் விளையாண்டு கொண்டு இருப்பார் என்று பேசி இருக்கிறார். இந்த நிலையில் அவருடைய இழப்பை தாங்க முடியாமல் அந்த குழந்தையும் அந்த இடத்தில் கதறி அழுது கொண்டிருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications