நடிகர் மாரிமுத்து 15 நாளா வீட்டுக்கு வரல.. 10 வருஷமா வீட்டில் வேலை செய்யும் பெண் சொன்ன பல ரகசியங்கள்
சென்னை: பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வந்த நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருந்தார். அவருடைய மறைவிற்கு பல பிரபலங்களும், ரசிகர்களும் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர் வீட்டில் வேலை செய்யும் பவானி என்கிற பெண் நடிகர் மாரிமுத்து பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

நடிகர் மாரிமுத்து 15 நாட்களாகவே வீட்டிற்கு வரவில்லை. நேற்று தான் வீட்டிற்கு வந்தார் என்று அந்தப் பெண் கூறி இருக்கிறார். அதோடு மேலும் சில தகவல்களையும் கூறியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சீரியலில் வில்லனாக மிரட்டி கொண்டிருக்கும் நடிகர் மாரிமுத்து நிஜ வாழ்க்கையில் அப்படி இல்லை. ஒரு ஜாலியான கேரக்டர் என்பது அவருடைய பல பேட்டிகளில் பலருக்கும் தெரிஞ்சதுதான். சீரியலில் மட்டும் தான் குணசேகரனாக பெண்களை அடிமைத்தனத்தோடு நடத்தும் நபராக இருப்பார். ஆனால் பெண்கள் முன்னேற்றத்திற்காக பேசுபவராகவும் முற்போக்கு சிந்தனையாளராக தான் நடிகர் மாரிமுத்து இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவருடைய திடீர் மரணம் அவருடைய தீவிரமான ரசிகர்கள் மட்டுமல்லாமல் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர்கள், நடிகர்கள் என பலரும் அதிர்ச்சி அடைய வைத்து விட்டது. இந்த நிலையில் அவருடைய வீட்டில் 10 வருடங்களாக பணி செய்து வரும் பவானி என்கிற பெண் நடிகர் மாரிமுத்து பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அதில் நடிகர் மாரிமுத்து சினிமாவில் மட்டும்தான் கோபக்காரராக நடிக்கிறார். ஆனால் வீட்டில் ரொம்பவே ஜாலியான கேரக்டர். என்னிடம் தங்கச்சி என்கிற வார்த்தைக்கு மறுபேச்சு பேசினதே கிடையாது.
என்னை எப்போதும் வீட்டில் வேலை பார்க்கிற பெண் என்று நடத்துனதும் கிடையாது. என்னை பார்க்கும்போதெல்லாம் சாப்டியா பவானி என்ற வார்த்தை தான் முதலில் கேட்பார். பிறகு தான் வேறு எதுவும் சொல்லுவார். ஆனால் சீரியலில் அவர் மிரட்டிக் கொண்டிருக்கிறார் தவிர நிஜத்தில் அப்படியெல்லாம் கொஞ்சம் கூட கிடையாது. வீட்டில் அவ்வளவு பொறுப்பாக நடந்து கொள்வார். நமக்கும் நல்லது கெட்டது எல்லாமே சொல்லித் தருவார். அவரிடம் கொஞ்ச நேரம் பேசினால் கூட பல விஷயங்கள் நம்மிடம் பேசிக் கொண்டே இருப்பார்.
மனதில் பட்டதை டக்கென்று சொல்லிவிடுபவர். மனதுக்குள் ஒன்று வைத்துக் கொண்டு வெளியே எங்கேயுமே வேறு விதமாக பேசவே மாட்டார். நான் பத்து வருஷங்களாக இந்த வீட்டில் இவர் அவரை பார்த்து இருக்கேன். ஆனால் இப்படி ஒரு நபரை வேறு எங்கும் பார்த்ததும் கிடையாது. ஆனால் இப்போ 15 நாளாக சூட்டிங் போயிருந்த மாரிமுத்து சார் வீட்டிற்கு வரவில்லை. நேத்து காலையில் தான் வீட்டிற்கு வந்தார். வந்ததும் மறுபடியும் வேலைக்கு போயிருந்தார். ஆனால் அவருக்கு அப்போதே லேசாக வலி இருந்திருக்கு.
அதை பத்தி எதுவுமே வெளியே சொல்லாம இருந்திருக்காரு. ஆனா இப்படி ஆகணும் நாங்க எதிர்பார்க்கல. நான் இதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்து விட்டேன். என்னுடைய பொண்ணு கல்யாணத்துக்கு கூட மாரிமுத்து சார் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து உதவுனாரு. ரொம்பவே தங்கமான மனுஷன். அவருடைய குடும்பத்தை இந்த மாதிரி ஒரு நிலைமையில என்னால பார்க்க முடியல, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஏற்கனவே மாரிமுத்து சாருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருந்து பிறகு சிகிச்சை எடுத்து குணம் ஆகிவிட்டார். என்று அந்த பேட்டியில் பவானி என்கிற பெண் பேசி இருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications