அப்பா சொன்னது இதுதான்.. ஜோசியர்களின் சாபத்தாலா மரணம் வந்தது? நடிகர் மாரிமுத்துவின் மகன் விளக்கம்
சென்னை: நடிகர் மாரிமுத்து நேற்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருந்த நிலையில் இன்று அவருடைய உடல் அவருடைய சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டிருக்கிறது.
மாரிமுத்து இறந்ததற்கு அவர் தமிழா தமிழா நிகழ்ச்சியில் ஜோதிடர்களை ஒருமையில் பேசியதும், ஜாதகத்தை நம்ப மாட்டேன் என்று சொன்னதும் தான் காரணம் என்று ஒரு தரப்பினர் வருகின்றனர்.

அது குறித்து நடிகர் மாரிமுத்துவின் மகன் தன்னுடைய தந்தையின் தகனத்திற்கு பிறகு பேட்டியில் பல தகவல்களை பேசி இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக நாம் ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடத்தில் நாம் இறந்ததற்கான அடையாளத்தை சிறப்பாக செய்துவிட்டு போக வேண்டும். அதுவே பின்னாடி நாம் இல்லை என்றாலும் நம்மைப் பற்றி பலரும் நினைக்கத் தோன்றும் என்று சொல்வார்கள். அந்த மாதிரிதான் நடிகர் மாரிமுத்து வாழ்ந்து விட்டு மறைந்திருக்கிறார். அவர் மனதில் பட்டதை டக்கென்று பேசிவிடும் கேரக்டராகவே இருந்து வந்தார்.
அவர் கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பெண் அடிமைத்தனத்தில் ஊறிப் போன ஒரு நபராக நடித்திருந்தார். ஆனால் நிஜ வாழ்க்கையில் முற்போக்கு வாதியாகவும் பல மூடநம்பிக்கைகளை எதிர்த்து குரல் கொடுத்தவராகவும் தான் இருந்து வந்தார். அந்த வகையில் தான் சமீபத்தில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட போது கூட "இந்தியா இந்த அளவிற்கு நாசமா போவதற்கு காரணம் ஜோதிடர்களும் ஜோதிடத்தை நம்புவர்களும் தான்" என்று கூறியிருந்தார்.
அது அந்த நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது போல ஜோதிடர்கள் பற்றியும் அந்த நிகழ்ச்சியில் ஒருமையில் பேசி இருந்தார். ஆனால் நிகழ்ச்சியிலேயே பிறகு மாரிமுத்து தான் ஒரு எமோஷனலில் அப்படி பேசி விட்டேன் என்று மன்னிப்பும் கேட்டிருந்தாராம். இந்த நிலையில் நேற்று மாரிமுத்து திடீரென மாரடைப்பினால் மரணம் அடைந்திருந்த நிலையில் இது ஜோதிடர்களை தரக்குறைவாக பேசியதால் அவர்கள் விட்ட சாபத்தால் தான் இப்படி ஆகிவிட்டது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் மாரிமுத்துவின் மகன், தன்னுடைய தந்தையின் உடலை எரியூட்டி விட்டு வந்த பிறகு பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார். அதில் தன்னுடைய தந்தை தனக்கு பல விஷயங்களை சொல்லி தந்து விட்டு போயிருக்கிறார். எந்த விஷயத்திலும் முற்போக்காக இருக்க வேண்டும். எந்த மூடநம்பிக்கையும் ஏற்கக் கூடாது என்று கூறி இருக்கிறார். இறுதி சடங்கில் கூட அவர் பெரிய அளவில் எல்லாம் செய்யக்கூடாது என்று கூறியிருக்கிறார்.
அவருடைய கனவுகள், அவர் ஆசைப்பட்டது எல்லாவற்றையும் நான் இனி செய்து முடிப்பேன். அப்பா என்னிடம் பேசும்போது பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதை நாங்கள் கடைபிடிப்போம் என்று கூறி கூறியிருந்தார். அதுபோல ஜோதிடர்கள் சாபத்தால் தான் இப்படி ஆகிவிட்டது என்று சொல்வதும் ஒரு மூட நம்பிக்கைதான். அதையும் நாங்கள் நம்ப மாட்டோம் என்று மாரிமுத்துவின் மகன் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications