மாரி செல்வராஜை தொடர்ந்து.. "ரஜினி” ரகசியத்தை உடைத்த "எதிர்நீச்சல்” மாரிமுத்து.. அப்பவே அப்படியாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிகர் மாரிமுத்து, குணசேகரன் கேரக்டரில் நடித்து வருகிறார். அதே நேரத்தில் அவர் பல திரைப்படங்களிலும் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தான் நடித்த திரைப்பட அனுபவங்கள் குறித்தும் தன்னோடு நடித்த பல நடிகர்கள் பற்றிய ரகசியங்களையும் மாரிமுத்து பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கிறார்.

Ethirneechal serial actor Marimuthu revealed the secret about actor Rajinikanth

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பே அவர் நடித்த அனுபவங்கள் பற்றி தன்னிடம் பேசியதாக சில ரகசியங்களை மாரிமுத்து பகிர்ந்து இருக்கிறார். அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

வெள்ளி திரையிலிருந்து சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த மாரிமுத்துவிற்கு தற்போது 2k கிட்ஸ்களின் "சூப்பர் ஸ்டார்" என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். பல இளம் ரசிகர்களையும் சீரியல் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிக் கொண்டிருக்கும் குணசேகரன் கேரக்டரில் மாரிமுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார்.

யம்மா..ஏய்... என்று இவர் பேசும் வசனங்கள் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து அதிகமான நபர்கள் சரளமாக பேசப்படும் வார்த்தையாக மாறிக் கொண்டிருக்கிறது. அதோடு வில்லனாக இருந்தாலும் இவருக்கும் அதிகமான ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கிறது. சின்ன திரையில் இவருக்கு நிகர் இவர்தான் என்று சொல்ல வைக்கிறது. அந்த அளவிற்கு எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து பலருடைய மனதை கவர்ந்து கொண்டிருக்கிறார்.

Ethirneechal serial actor Marimuthu revealed the secret about actor Rajinikanth

மாரிமுத்து முதல்முறையாக எதிர்நீச்சல் சீரியலில் தான் அறிமுகம் ஆகி இருக்கிறார். ஏற்கனவே சில வருடங்களாக இவருக்கு சின்னத்திரை வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் தான் இப்போதே சின்னத்திரைக்கு போய்விட்டால் நன்றாக இருக்காது இன்னும் கொஞ்ச நாள் வெள்ளி துறையில் பயணிக்கலாம் என்று காத்திருந்த இவர் ஆரம்பத்தில் சினிமாவில் நுழைந்தது இயக்குனராகத்தான்.

இன்ஜினியரிங் படிப்பை படித்து முடித்து இவர் திரைப்பட வாய்ப்புகளுக்காக பல பிரபலங்களோடு ஆரம்ப காலகட்டத்தில் பயணித்திருக்கிறார். நடிகர் மாரிமுத்து இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராகவும், வைரமுத்துவிடம் உதவியாளராகவும் இருந்தவர்தான். அதுபோல சில திரைப்படங்களை இயக்கியிருக்கும் மாரிமுத்து தற்போது பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் நடித்த திரைப்படங்கள் குறித்தும் தன்னோடு நடித்த நடிகர்கள் பற்றிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் "ஜெயிலர்" திரைப்பட அப்டேட் குறித்து கேட்கப்பட்டிருந்தது. அப்போது அதில் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்து நடிகர் ரஜினிகாந்த் பற்றி சில தகவல்களை கூறியிருக்கிறார்.

Ethirneechal serial actor Marimuthu revealed the secret about actor Rajinikanth

அதில் அவர் பேசுகையில், சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பெங்களூரில் ரஜினிகாந்த் நடத்துனராக வேலை பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு நாடகம் போட்டிருந்தார்களாம். அப்போ அதில் பீஷ்மராக நடிக்க யாருமே வரவில்லையாம். இதனால் அந்த கதாபாத்திரத்தில் ரஜினியே நடித்திருக்கிறார். அப்போது வழக்கமான தனது ஸ்டைல் மற்றும் வேகமான நடையில் நடந்து வந்து பீஷ்மராக அமர்ந்திருக்கிறார். அமர்ந்தது மட்டுமல்லாமல் அங்கே அவருடைய வழக்கமான ஸ்டைலான சிரிப்பையும் சிரித்திருக்கிறார்.

அதை பார்த்த அங்கிருந்த அனைவருமே கைத்தட்டி ரசித்திருக்கிறார்களாம். கூடவே இவரை பாராட்டவும் செய்து இருக்கிறார்கள். இது குறித்து ரஜினியே தன்னிடம் பகிர்ந்து கொண்டார் என்று மாரிமுத்து கூறியிருக்கிறார். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு தான் நடித்த "பரியேறும் பெருமாள்" திரைப்படத்தில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் பற்றியும் பல வெளிப்படையான கருத்துக்களையும் நடிகர் மாரிமுத்து கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+