நடிகர் மாரிமுத்து பகிர்ந்த அதிர்ச்சியான விஷயம் இதுதான்.. முதல் முறை பகிர்ந்த நடிகர் கமலேஷ்
சென்னை: நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார். இது ரசிகர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுவரைக்கும் மாரிமுத்துவை எதிர்நீச்சல் குணசேகரனாக பார்த்து ரசித்த ரசிகர்களால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கூறிவரும் நிலையில் இந்த சீரியலில் அவரோடு ஒன்றாக நடித்து வந்த நடிகர்களும் இதை எங்களால் இப்ப வரைக்கும் நம்ப முடியவில்லை என்று கூறி வருகின்றனர்.

அதே நேரத்தில் நடிகர் மாரிமுத்துவுடன் கடைசியாக கூட இருந்த நடிகர் கமலேஷ் மாரிமுத்து பற்றி பல தகவல்களை சமீபத்தில் பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடிகர் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலுக்கு டப்பிங் பேசுவதற்காக காலை ஆறு முப்பது மணி வாக்கில் டப்பிங் ரூம்க்கு போயிருக்கிறார். அதைத்தொடர்ந்து அந்த இடத்திற்கு நடிகர் கமலேஷ் அதாவது எதிர்நீச்சல் சீரியலில் ஞானமாக நடிப்பவர் எட்டு மணி வாக்கில் போனாராம். அதுவரைக்கும் மாரிமுத்து டப்பிங் பேசிக் கொண்டிருந்தாராம். ஆனால் கமலேஷ் உள்ளே போகும்போது மாரிமுத்துவிற்கு முகம் எல்லாம் வேர்த்து போய் இருந்தாராம்.
அப்போ என்னவென்று கேட்கும் போது ஒரு மாதிரி அசௌகரியமாக இருக்கிறது என்று மாரிமுத்து சொன்னாராம். ஏற்கனவே உள்ளே டப்பிங் பேசும்போது ஏசி ஆப் செய்வதால் பலருக்கும் இதுபோல வேர்க்குமாம். அதுபோல இருக்கும் என்று முதலில் நினைத்திருக்கிறார்கள். பிறகு மாரிமுத்து நான் வெளியே காற்று வாங்கிட்டு வருகிறேன் என்று சொல்லி வெளியில் நின்று இருக்கிறார். அப்போது சரி நான் டப்பிங் பேசுகிறேன் என்று தமிழில் டப்பிங் பேசிக் கொண்டு இருந்திருக்கிறார்.
அப்போது வெளியே நின்று கொண்டிருந்த மாரி முத்துவை காணவில்லையே? அப்போ ஒருவேளை அவர் பாத்ரூம் ஏதாவது போயிருப்பாராக இருக்கும் என்று கமலேஷ் நினைத்துக் கொண்டு சரி அடுத்த நான் பேச வேண்டியதை பேசி முடித்து விடலாம் என்று பேசிக் கொண்டிருந்தாராம். ஆனால் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக அவர் காணவில்லை என்பதால் ஒருவேளை பாத்ரூம் போன இடத்தில் ஏதேனும் மயக்கம் போட்டு விழுந்து விட்டாரா? என்று யோசித்து அங்கு போய் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அங்கு அவர் இல்லையாம். அப்போது வெளியே பார்க்கும்போது மாரிமுத்துவின் காரும் இல்லையாம்.
அதே நேரத்தில் மாரிமுத்துவை காணாமல் இருந்த நேரத்தில் ஏற்கனவே இரண்டு முறை போன் செய்திருக்கிறார்கள். மாரிமுத்து போனை எடுக்கவில்லையாம். பிறகு வெளியே வந்து பார்த்துவிட்டு போன் செய்திருக்கிறார்கள் அப்போதும் போன் எடுக்கப்படவில்லையாம். சிறிது நேரம் கழித்து மாரிமுத்துவின் போனில் இருந்து அவருடைய மகள் கமலேசுக்கு கூப்டு இருக்கிறார். அப்பா போய்விட்டார் என்று அழுது கொண்டு சொன்னாராம் அதை கேட்டு அதிர்ச்சியான கமலேஷ் உடனே ஹாஸ்பிடலுக்கு போயிருக்கிறார்.

அங்கு டாக்டர்கள் செக்கப் எல்லாம் செய்து பார்த்து அவருக்கு பம்பிங் எல்லாம் கொடுத்து பார்த்தும் எல்லாம் முடிந்துவிட்டது என்று டாக்டர்கள் கூறிவிட்டார்களாம். பிறகு இன்னும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் என்று கெஞ்சினாராம். ஆனால் டாக்டர் முயற்சி செய்தும் எல்லாம் முடிந்து விட்டதாம். அப்போதுதான் மாரிமுத்து கார் ஓட்டிட்டு வராமல் வேறு யாராவது கார் ஓட்டிட்டு வந்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம் என்று சொன்னார். எனக்கு அப்போது மாரிமுத்து சார் மேல தான் அவ்வளவு கோபம் வந்தது.
பிறகுதான் எங்கள் சீரியல் டீம் எல்லாருக்கும் நடந்த விஷயத்தை பற்றி சொன்னேன். எல்லோரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அதுபோல மாரிமுத்து சார் நல்லா இருக்கும்போது சூட்டிங் ஸ்பாட்டில் அவ்வளவு சந்தோசமாக இருப்பார். அவருடைய உடல்நிலை பிரச்சினைகளை பற்றி எங்களிடம் ஒரு முறை கூட ஷேர் செய்வது கிடையாது. அவருக்கு சுகர் இருக்கிறது மட்டும் எங்களுக்கு தெரியும். அது போல அவர் இப்போது புகழின் உச்சத்தில் இருப்பதை குறித்து சொல்லி அடிக்கடி சந்தோஷப்படுவார்.
எனக்கு ரசிகர்கள் இவ்வளவு பாசம் கொடுக்கிறார்களே என்று அவருக்கு இன்ப அதிர்ச்சியாக தான் இருந்தது. அது குறித்து அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார். அவரைப் பற்றிய மீம்ஸ்களை எல்லாம் எங்களிடம் காட்டி சிரித்துக்கொண்டே இருப்பார். என்னை அந்த நடிகரோடு கம்பர் செய்திருக்காங்க என்றெல்லாம் சிரித்த முகமாக சொல்லிக்கொண்டே இருப்பார். அதை இப்போதும் எங்களால் மறக்க முடியவில்லை என்று கமலேஷ் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications