எதிர்நீச்சல் 2வது பாகம் தொடக்கம்? அதுவும் அதே வீட்டில் ஷூட்டிங்? ரகசியத்தை உடைத்த ஜனனி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்த நடிகை மதுமிதா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார். அப்போது எதிர்நீச்சல் சீரியல் இரண்டாவது பாகம் தொடங்க போகிறதா? என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியல் சின்னத்திரையில் பெரும் புரட்சியை செய்தது. இதுவரைக்கும் சீரியலே பார்க்காத ரசிகர்களையும் கூட இந்த சீரியல் விரும்பி பார்க்க வைத்தது. சீரியல் தொடங்கி ஒரு சில வாரங்களிலேயே இந்த சீரியல் டிஆர்பியில் அதிகமான புள்ளிகளை பெற்று வந்தது. அதனாலயே இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் மவுசு கூடிவிட்டது.

அதுபோல இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டனர். அந்த வகையில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை மதுமிதாவிற்கும் அதிகமான ரசிகர்கள் தொடங்கி விட்டனர். அதுபோல சீரியலின் மையப்புள்ளியாக ஜனனி கேரக்டரில் நடிகை மதுமிதா நடித்து வருந்தார். மதுமிதா இதற்கு முன்பு கன்னட சீரியல்களில் நடித்திருந்தாலும் முதன் முதலில் தமிழில் எதிர்நீச்சல் சீரியல் மூலமாகத்தான் அறிமுகம் ஆகி இருந்தார்.
ஆனாலும் ஆரம்பமே இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இப்போது இன்ஸ்டாகிராமிலும் தமிழ் ரசிகர்கள் அதிகமானோர் அவரை பாலோ செய்து வருகிறார்கள். ஆனாலும் கன்னட சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த மதுமிதாவிடம் எதிர்நீச்சல் சீரியலில் ஆரம்பத்தில் நடிப்பதற்காக கேட்டபோது அவருக்கு ஆரம்பத்தில் தயக்கமாகத்தான் இருந்திருக்கிறது. பிறகு தன்னுடைய நண்பர்களிடம் இயக்குனர் திருச்செல்வம் பெயரை சொல்லி இருக்கிறார்.
அதற்கு பிறகு அவர்கள் தான் இயக்குனர் திருசெல்வம் ஏற்கனவே இயக்கிய சீரியல்கள் பற்றி எடுத்து சொல்லி இந்த சீரியலில் நடிக்க சொல்லி இருக்கிறார்கள். அதற்கு பிறகு தான் எதிர்நீச்சல் சீரியலில் மதுமிதா கமிட்டாகி இருக்கிறார். ஆனாலும் இந்த சீரியல் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் ஒளிபரப்பாகி கடந்த ஜூன் 8-ம் தேதியோடு திடீரென்று முடிவுக்கு வந்தது. இது ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்த சீரியலில் நடிகர்களையும் பெரிய அளவில் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சீரியலில் என்னதான் இவர்கள் ஒருவருக்கொருவர் எதிராக இருந்தாலும் கூட சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரும் ஜாலியாக ரீல்ஸ் வீடியோக்கள் புகைப்படங்கள் எடுத்து கொண்டிருந்தார்கள். அதுபோல இந்த சீரியலில் நடித்த எல்லோருமே ஒரே குடும்பமாக பழகி வந்த நிலையில் திடீரென்று சீரியல் முடிவடையும் செய்தி அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது என்று எல்லோரும் வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சீரியல் முடிவடைந்து ஒரு வாரம் கழித்து மதுமிதா இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். அப்போது ரசிகர் ஒருவர், "எதிர்நீச்சல் சீரியல் இரண்டாவது பாகம் தொடங்க போகிறது என்றும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறதே அது உண்மையா?" என்று கேட்ட கேள்விக்கு மதுமிதா, "இதுவரைக்கும் அப்படி எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை" என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதுபோல இன்னொரு ரசிகர், நீங்கள் புது சீரியலில் நடிக்க இருந்தால் அந்த சீரியல் எதிர்நீச்சல் சூட்டிங் வீட்டில் எடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்ட கேள்விக்கு, "அது எதிர்பார்க்காத விதத்தில் இருக்கும்" என்று மதுமிதா பதில் கொடுத்திருக்கிறார். அதுபோல இன்னொரு ரசிகர், "நீங்கள் புது சீரியலில் கமிட் ஆகி விட்டீர்களா?" என்று கேட்ட கேள்விக்கும் மதுமிதா, "இப்ப வரைக்கும் எந்த சீரியலிலும் கமிட்டாகவில்லை. ஆனால் விரைவில் உங்களுக்கு குட் நியூஸ் சொல்கிறேன்" என்று சொல்லி இருக்கிறார்.
-
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications