ஒரு நாள் முழுக்க அழுது இருக்கேன்.. மூன்று மாதம் தான் டைம் இருக்கு.. எதிர்நீச்சல் ஜனனி விளக்கம்
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் மதுமிதா சமீபத்தில் அந்த சீரியல் பற்றி பல தகவல்களை கூறி இருக்கிறார்.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் இனி என்ன மாதிரி கதை இருக்கப் போகிறது என்ற ரகசியத்தை ஜனனி கூறி இருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் ஒரே ஒரு சீனில் தான் நடித்ததால் இரவு முழுக்க தூங்காமல் அழுதிருக்கிறேன் என்ற உண்மையை பகிர்ந்து இருக்கிறார்.

ஜனனிக்கு பெருகும் ஆதரவு
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் சீரியலின் கதாநாயகியாக ஜனனி கேரக்டரில் நடிக்கும் நடிகை மதுமிதா தற்போது பல பெண்கள் கொண்டாடும் கேரக்டராக இருந்து வருகிறார். ஆதி குணசேகரனை துணிச்சலாக எதிர்த்து நிற்கும் ஜனனிக்கு பெண்களின் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஜனனி தற்போது சமீபத்தில் ஒரு பேட்டியில் எதிர்நீச்சல் சீரியலில் அனுபவங்களை பகிர்ந்து இருக்கிறார்.

ஜனனியின் அழுகை
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் தான் இதுவரைக்கும் நடித்ததில் ஒரே ஒரு எபிசோடு நடித்ததை என்னால் மறக்கவே முடியாது என்று கூறியிருக்கிறார். தான் பொதுவாக கிளிசரின் போடாமல் தான் நடிப்பேன் என்றும் கிளிசரின் போட்டால் என்னுடைய கண்கள் எரியும். அதனால் நான் அதிகமாக யூஸ் பண்ணுவது கிடையாது என்றும் கூறியிருக்கிறார். இந்த நிலையில் ஜனனி வீட்டிற்கு வந்த அவருடைய அப்பா அவமானப்பட்டு வெளியே செல்லும்போது ஜனனி அழுது கொண்டிருப்பார். அந்த சீனில் நடிக்கும் போது தான் நான்
என்னை அறியாமலே அழுதேன்.

தூக்கம் இல்லாமல் தவிப்பு
ஆரம்பத்தில் அந்த சீனில் நடிக்கும் போது கிளிசரின் போட்டும் என்னுடைய கண்களில் கண்ணீர் வராமல் இருந்தது. பிறகு இந்த கதையில் நீங்கள் இருப்பது போன்று கற்பனை செய்து கொள்ளுங்கள் என்று என்னிடம் கூறினார்கள். அதற்கு பிறகு நான் எனக்கு அது நடப்பது போன்ற நினைத்துதான் அந்த இடத்தில் நான் அழுதேன். பிறகு அதை நினைத்து நினைத்து இரவு முழுக்க எனக்கு தூக்கம் கூட வரவில்லை. அந்த அளவிற்கு அந்த சீன் என்னுடைய மனதில் பதிந்து விட்டது என்று கூறி இருக்கிறார்.

இனி வரும் மாற்றங்கள்
அதுபோல நான் அந்த சீரியலில் சக்தியிடம் மூன்று மாதம் டைம் கேட்டிருக்கிறேன். அதற்குள் வீட்டில் பல மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது. இனி ஆதிரையின் திருமணத்தை நான் மற்ற அண்ணிகளுடன் சேர்ந்து தைரியமாக புது முடிவை எடுத்து திருமணத்தை நடத்தி வைக்க போகிறேன். அதைத்தொடர்ந்து குணசேகரனையும் மாற்றப் போகிறேன். அவருக்கு அடுத்தடுத்து கொடுக்கும் பிரச்சனைகளால் அவருடைய கேரக்டர் மாற தான் செய்ய வேண்டும். அதற்கு தான் டைவர்ஸ் வரைக்கும் சென்று பிறகு மூன்று மாதம் டைம் கேட்டு அந்த வீட்டில் இருந்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications