டிஆர்பியில் மீண்டும் முதலிடத்தில் "எதிர்நீச்சல்” காரணம் இவங்க 2 பேரு தானா? இதை கவனிச்சீங்களா..?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
கிராமப்புறங்கள் மற்றும் நகரப்புறங்களில் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்பட்ட சீரியல்களின் டாப் 10 இடத்தில் முதல் இடத்தை தொடர்ந்து இரண்டு வாரங்களாக எதிர்நீச்சல் சீரியல் பிடித்திருப்பதால் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த வெற்றிக்கு காரணமே இந்த சீரியலில் இரண்டு நடிகர்கள் தான் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்து பல எதிர்ப்பாராத திருப்பங்கள் கொண்டு வந்து கொண்டிருப்பதால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றனர். மற்ற சீரியல்களை போலவே இந்த கதை இல்லாமல் பெண் அடிமைத்தனத்துக்கு எதிராக சில வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே பிரதிபலிப்பதால் இதை பலர் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் எப்போதும் டாப் 10 இடங்களை பிடிக்கும். சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்கள் வந்து கொண்டு இருந்தாலும் இந்த பிரைம் டைம் சீரியல்களை அடிச்சுக்க முடியாது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் ஒன்பதரைக்கு மணிக்கு எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வந்து கொண்டிருக்கும் நிலையில் இதுவும் டாப் ஐந்து இடங்களுக்குள் வந்து கொண்டிருந்தது.
ஆனால் கடந்த வாரத்தில் ஆதிரை மற்றும் கரிகாலனின் திருமணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து அதிகமான டிஆர்பியை பெற்றிருந்தது. அதனாலயே கடந்த வாரம் இந்த சீரியல் முதல் முறையாக டிஆர்பியில் முதலிடத்தை பிடித்திருந்தது. இந்த நிலையில் தற்போது ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணத்திற்கு பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டிருப்பதால் மீண்டும் இந்த வாரமும் இந்த சீரியல் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
அதுபோல இந்த சீரியலில் வெற்றிக்காக அனைவரும் உழைத்துக் கொண்டிருந்தாலும், அதிகமான ரசிகர்களை கவர்ந்தவர்கள் என்றால் குணசேகரன் மற்றும் கரிகாலன் தான் என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக மீம்ஸ் வெளியிட்டு கருத்து கூறி வருகிறார்கள். இந்த சீரியலில் வில்லனாக இருந்தாலும் குணசேகரனுக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். தற்போதைய 2k கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகராக குணசேகரன் மாறி இருக்கிறார்.
அதுபோல டைமிங்காக பேசும் கரிகாலனும் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி ஜாலியாகவும் விறுவிறுப்பாகவும் போவதற்கு இவர்கள் ரெண்டு பேரும் அதிகமான முக்கிய காரணம். இவர்களுக்காகவே பலர் சீரியல் பார்த்து வருவதாக கூறி வருகின்றனர். ஆனாலும் இந்த சீரியலின் இயக்குனர் மற்றும் சக நடிகர்கள் கொடுக்கும் சப்போட்டால் தான் இவர்கள் இருவராலும் அதிகமாக ரசிகர்களை கவரும் விதத்தில் பேச முடிகிறது.
இந்த நிலையில் இன்று facebook பக்கத்தில் பிரபல எழுத்தாளர் ஒருவர் எதிர்நீச்சல் சீரியல் குறித்து பாராட்டி பகிர்ந்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் அதில் கூறுகையில் சீரியல்கள் பார்ப்பது ஒன்றும் கேவலமானது கிடையாது. தற்போது அதிகமான சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தாலும் நான் இந்த "எதிர்நீச்சல்" சீரியலை தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன். ஒருநாள் பார்க்கவில்லை என்றாலும் என்ன நடந்தது என்பதை என்னுடைய மனைவியிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன்.
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அதிகமானோர் நடிப்பை தத்ருபமாக காட்டுகின்றனர். அவர்களுக்கு உரிய கேரக்டருக்கு தகுந்த மாதிரியே அவர்களுடைய வார்த்தைகள் மட்டுமல்லாமல் கண் அசைவு கூட அழகாக நடிக்கிறது. எதார்த்தமாக இருக்கும் இந்த சீரியலுக்கு நானும் இப்போது ஒரு ரசிகராக மாறிவிட்டேன் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதை எதிர்நீச்சல் சீரியலின் ரசிகர்கள் பலர் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களிலும் பகிர்ந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications