எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. மீண்டும் அப்பத்தா வந்தாச்சி! அப்போ கதை இதுதானா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் வந்திருக்கிறது. அதாவது இந்த சீரியலில் அப்பத்தா(பட்டம்மாள்) மீண்டும் சூட்டிங்கு வந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே இந்த சீரியலில் பில்லராக அப்பத்தா இருந்து வந்தார். ஆரம்பத்தில் அமைதியாக இருந்த அப்பத்தா பிறகு தான் யார் என்பதை பற்றி வாய் திறந்து பேசிய எபிசோடு பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குப் பிறகு எதிர்நீச்சல் பெண்களுக்கு முக்கிய துணையாகவே அப்பத்தா இருந்து வந்தார். ஆனால் திடீரென்று அவர் ஹாஸ்பிடலுக்கு போகும்போது காரில் குண்டு வெடித்து இறந்து விட்டார் என்று குணசேகரன் கதை சொல்லிக் கொண்டிருந்தார்.

இது உண்மையா? அல்லது குணசேகரன் அப்பத்தாவை வேறு எங்கேயாவது அடைத்து வைத்திருக்கிறாரா? என்ற கேள்விகள் ரசிகர்களுக்கு இருந்து வந்தது. அதுபோல ஒருவேளை இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் அப்பத்தா தப்பித்து ஜீவானந்தத்தின் உதவியோடு வேறு எங்கேயாவது இருக்கலாம்... அப்படி இருந்து கொண்டு எதிர்நீச்சல் பெண்கள் சுயமாக முன்னேறுவதற்கு உதவி செய்து கொண்டிருக்கிறாரா என்றெல்லாம் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.
ஆனால் இது பற்றிய காட்சிகள் இதுவரைக்கும் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று இந்த சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை கனிகா அப்பத்தா உடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் அப்போ மீண்டும் அப்பத்தா எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.
அதே நேரத்தில் இப்போது குணசேகரனுக்கு எதிராக வீட்டு பெண்கள் மட்டுமல்லாமல் அவருடைய தம்பிகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் இனி அப்பத்தாவும் மீண்டும் சீரியலுக்கு வந்து விட்டால் குணசேகரன் தோற்றுப் போவது உறுதியாகிவிடும். ஏற்கனவே இந்த சீரியலில் பல பிரச்சனைகள் தொடங்கி அதற்கு முடிவுக்கு காணப்படாமல் இருக்கும் நிலையில் முதல் முறையாக அப்பத்தா இறந்து போய்விட்டார் என்று நடித்துக் கொண்டிருக்கும் நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலே இனி பெண்கள் அடுத்தடுத்து வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகமாக இருக்கிறது.
கடந்த வார எபிசோடில் குணசேகரனின் சாமியாடி மாமா அருள் வந்து பேசுகையில் குணசேகரன் நீ இத்தனை நாட்களாக ஜெயித்துக்கொண்டே இருந்த... ஆனால் நீ தோற்றுப் போக வேண்டிய நாள் வந்துவிட்டது. இனி உனக்கு தோல்விதான் வரப்போகிறது என்று கூறி இருந்தார். இந்த நிலையில் இப்போது பட்டம்மாள் மீண்டும் சூட்டிங் வந்திருப்பதால் சீரியல் பற்றி எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
அதே நேரத்தில் இப்போது கல்யாணம் கல்யாணம் என்ற பேச்சும் கடத்தல் காட்சிகளும் தான் அதிகமாக இருக்கிறது. மீண்டும் அப்பத்தா சீரியலுக்கு வந்தால் பழையபடி 60% சொத்து யாருக்கு என்று பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதும் ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications