எதிர்நீச்சலில் முக்கியமான தருணம் வந்தாச்சு.. இதை கவனிச்சீங்களா? மாஸ் காட்டிய கதிர்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஏப்ரல் பதினாறாம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் சித்தார்த் மற்றும் வந்தனா திருமணத்தை நடத்தி வைப்பதற்காக ஜனனியோடு சேர்ந்து மொத்த குடும்பத்தினரும் குணசேகரனுக்கு தெரியாமல் பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை திருமணத்தின்போது எப்படி எதிர்நீச்சல் பெண்கள் எல்லோரும் குணசேகரனை எதிர்த்து ஆதிரைக்கு அவர் ஆசைப்பட்ட அருணுடன் கல்யாணம் நடத்தி வைப்பேன் என்று சபதம் கேட்டுக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்களோ? அதுபோல இப்போது ஜனனியின் தங்கச்சி வந்தனா மற்றும் சித்தார்த்துக்கு திருமணம் செய்து வைக்கிறதுக்காக எதிர்நீச்சல் பெண்களோடு சக்தி மற்றும் கதிரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே சில மாதங்களாக எதிர்நீச்சல் சீரியலில் கடத்தல் நாடகம் மட்டும்தான் வந்து கொண்டே இருக்கிறது என்று ரசிகர்கள் மத்தியில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடத்தல் சீனுக்கு முற்றுப்புள்ளி வைக்காமலேயே இப்போது மீண்டும் திருமண டிராக்கில் ஓடிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் தான் எல்லா இடத்திலும் ஜெயித்துக் கொண்டிருக்கிறார் என்பது ரசிகர்களின் வருத்தமாக இருக்கிறது.
இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் முதல் முறையாக குணசேகரனுக்கு அவமானம் கிடைப்பது போன்று காட்சிகள் வைத்திருக்கின்றனர். இது ஒரு பக்கம் பாராட்டப்பட்டாளும் மீண்டும் ஜனனி குரூப் அவருடைய தங்கை மற்றும் சித்தார்த்துக்கு கல்யாணம் பண்ணி வைப்பதற்காக பல போராட்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே எதிர்நீச்சல் பெண்கள் ஆதிரை கல்யாணத்தில் ஒன்று சேர்ந்து போராடி கடைசியில் தோற்றுப் போயிருந்தனர்.
அது போல இந்த முறையும் ஆகுமா? அல்லது இந்த முறை எதிர்நீச்சல் பெண்கள் ஜெயிக்கப் போகிறார்களா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். அதே நேரத்தில் ஆதிரைக்கும் அருணுக்கும் காதல் உருவான கதை பெரிய அளவில் அழுத்தம் இல்லாமல் இருந்தது போல தான் இப்போது வந்தனா மற்றும் சித்தார்த் கதையும் இருக்கிறது.

சித்தார்த் எந்த இடத்திலும் ஸ்ட்ராங்காக இல்லை. ஆனால் அவருக்கு போய் வந்தனாவை கல்யாணம் பண்ணி வைப்பதற்காக ஜனனி குரூப் பெரிய போராட்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் இவர்கள் கஷ்டப்பட்டு வந்தனாவிற்கு சித்தார்த்தை கல்யாணம் பண்ணி வைக்கவே வேண்டாம். அவர் எதுக்கெடுத்தாலும் வீட்டுக்கு போகணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகும் இப்படித்தானே இருப்பார் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் சத்தி மற்றும் கதிர் இருவரும் சித்தார்த்தை காரில் கூட்டிக்கொண்டு வரும்போது ஜனனி போன் பண்ண, ஜனனியிடம் நாளைக்கு காலையில் வந்தனாவுக்கும் சித்தார்த்துக்கும் கல்யாணம் நடத்தி வைத்து விடலாம் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்.

மறுபக்கத்தில் குணசேகரனுக்கு தெரியாமல் எல்லோரும் வீட்டில் இருந்து எப்படி வெளியே போவது என்று நந்தினி தலைமையில் பிளான் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications