எதிர்நீச்சல்: குணசேகரனுக்கு விழுந்த அடி.. மணமேடையில் காத்திருந்த அதிர்ச்சி.. இந்த முறையும் இப்படியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஏப்ரல் 26 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் மணமேடையில் இருக்கும் தர்ஷினிக்கு சித்தார்த் தாலி கட்ட போவது போன்ற காட்சிகள் இருக்கிறது. அதே நேரத்தில் இந்த திருமணத்தை நிறுத்துவதற்காக எதிர்நீச்சல் பெண்கள் எல்லோரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி கதை இருந்து வந்தாலும் இந்த சீரியலில் பெண்கள் ஒவ்வொரு முறையும் தோற்றுப் போவது போன்று தான் காட்சிகள் இருக்கிறது. இதனாலேயே இந்த சீரியல் மீது சீரியலின் தீவிரமான ரசிகர்கள் கூட அதிருப்தி ஏற்பட்டு வருகிறார்கள்.

Ethirneechal Serial April 26th 2024 promo and episode full update

ஏற்கனவே ஆதிரை திருமணம் ரசிகர்களுக்கு பெரிய அளவில் அதிர்ச்சியை கொடுக்கிற வகையில் நடைபெற்றது. ஆனால் அதற்குப் பிறகு சீரியலின் போக்கே மாறிவிட்டது. ஒரு பக்கத்தில் புதியதாக வந்திருக்கும் ஆதி குணசேகரனுக்கு அதிகமாக பில்டப் கொடுக்கப்பட்டு அவர் மட்டுமே ஜெயித்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் எதிர்நீச்சல் பெண்கள் ஒவ்வொரு முறையும் காரசாரமாக சவால் விடுகிறார்கள். ஆனால் கடைசியில் தோற்றுப் போய் தலையை தொங்க போட்டு கொண்டு நிற்கிறார்கள்.

இது பார்க்கும் ரசிகர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இந்த நிலையில் இப்போது தர்ஷினியின் திருமணம் டிராக் சில மாதங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே தர்ஷினி காணாமல் போன காட்சிகள் இரண்டு மாதங்களாக ஓடிவிட்ட நிலையில் இப்போது தர்ஷினியின் திருமணத்தை வைத்து அடுத்த இரண்டு மாதங்கள் இழுத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இப்போது தர்ஷினி திருமணம் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

Ethirneechal Serial April 26th 2024 promo and episode full update

ஆரம்பத்தில் தர்ஷினி காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு எதற்கெடுத்தாலும் பயந்து கொண்டு இருந்தார். ஆனால் இப்போது அப்பா சொல்வதற்கு மட்டுமே தலையை ஆட்டிக் கொண்டு இருக்கிறார். ஆனால் சீரியலின் கதைப்படி தர்ஷினி பாக்ஸராக இருக்கிறார் ஆனால் இப்போது பயந்து பயந்து பதறி கொண்டு இருப்பதை பார்த்து ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.

இப்படியான நிலையில் இன்று வெளியான பிரமோவில் தர்ஷினிக்கு சித்தார்த் தாலி கட்ட போவது போன்று காட்டி இருக்கிறார்கள். ஆனால் சித்தார்த்த தாலி கட்டும் நேரத்தில் மேடையில் ஏதோ பிரச்சனை நடந்தது போன்று எல்லோரும் அதிர்ச்சியோடு இருக்கின்றனர். இது ரசிகர்களை எதிர்பார்ப்பில் வைத்திருக்கிறது. ஒரு பக்கம் இந்த முறையும் ஆதிரையின் திருமணத்தில் நடந்தது போன்று ரசிகர்களுக்கு ஏமாற்றம் நடந்து விடுமோ? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Ethirneechal Serial April 26th 2024 promo and episode full update

இன்னொரு பக்கம் தர்ஷினி கடைசி நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்தி விட்டாரா? என்று எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். ஆனால் இந்த முறை தர்ஷினிக்கு மட்டும் சித்தார்த்துடன் திருமணம் நடந்தால் இது மக்கள் மத்தியில் தவறான முன் உதாரணமாக மாறிவிடும். என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+