எதிர்நீச்சல்: தெறி எபிசோடு நேற்று.. ஆனால் இன்று? ஜனனி & கோ சபாஷ்.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஏப்ரல் 26 ஆம் தேதிக்கான எபிசோடில் ரசிகர்கள் இத்தனை நாட்களாக எதிர்பார்த்து இருந்த தருணம் நிறைவேறியது. இதுவரைக்கும் குணசேகரன் எல்லா முறையும் ஜெயித்துக்கொண்டு இருப்பது போன்ற கதை இருந்தது. ஆனால் முதல் முறையாக இப்போது எதிர்நீச்சல் பெண்கள் ஜெயித்திருக்கின்றனர்.
அதே நேரத்தில் எதிர்நீச்சல் பெண்கள் இனி தொடர்ச்சியாக ஜெயிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பி வரும் நிலையில் குணசேகரின் தோல்வியை ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

சினிமாவாக இருந்தாலும் சரி, சீரியல் ஆக இருந்தாலும் சரி அதை மக்கள் தங்களுடைய வாழ்க்கையோடு பொருத்திப் பார்ப்பது இயல்பாக இருக்கிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் பெண்கள் அடிமை தனத்தில் இருந்து முன்னேறி வருவதை மையமாகக் கொண்டிருக்கும் நிலையில் இதையே பல பெண்களும் தங்கள் வாழ்க்கையோடு ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதனாலேயே இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருக்கிறது. ஆரம்பத்தில் இந்த சீரியல் ஆண்களும் கூட விரும்பி பார்க்கும் சீரியலாக இருந்தது. ஆனால் இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு கதையில் ஏற்பட்ட மாற்றத்தால் புதிய குணசேகரன் பெரிய ரவுடி போலவும், வில்லனாகவும் மட்டுமே மாறிக்கொண்டிருக்கிறார். அதுபோல எதிர்நீச்சல் பெண்கள் ஒரு இடத்தில் கூட ஜெயிக்காமல் எல்லா இடத்திலும் தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.
இதுவும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. இப்படியான நிலையில் இப்போது ஜனனியின் தங்கை அஞ்சனா ஜனனியின் அத்தை மகன் சித்தரத்தை காதலித்து வந்திருந்தார். அதே நேரத்தில் குணசேகரன் தன்னுடைய மகள் தர்ஷினியை சித்தார்த்துக்கு கல்யாணம் பண்ணி வைக்க போகிறேன் என்று ஏற்பாடு செய்திருந்தார். இந்த திருமணத்தை நிறுத்தி சித்தார்த் அஞ்சனா திருமணத்தை நடத்துவேன் என்று ஜனனி மற்றும் எதிர்நீச்சல் பெண்கள் சபதம் போட்டிருந்தனர்.
ஆனால் இந்த முறையும் எதிர்நீச்சல் பெண்கள் வழக்கம் போல தோற்றுப் போய் விடுவார்களா? குணசேகரன் ஜெயித்து விடுவாரோ? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தனர். ஆனால் நேற்றைய எபிசோடில் முதல் முறையாக குணசேகரன் தோற்றுப் போய் பல போராட்டங்களுக்குப் பிறகு சித்தார்த் மற்றும் அஞ்சனா திருமணம் நடைபெற்று இருக்கிறது. ஒரு வழியாக எதிர்நீச்சல் பெண்கள் போட்ட சபதத்தில் ஜெயித்திருக்கிறார்கள்.
இது குறித்து ரசிகர்கள் இந்த சீரியலை மீண்டும் பாராட்ட தொடங்கி இருக்கிறார்கள். அதே நேரத்தில் இதே போலவே எதிர்நீச்சல் பெண்கள் அடுத்தடுத்து ஜெயிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். ஏற்கனவே இந்த சீரியலில் ஒரு சிலபிரச்சனைகள் தொடங்கினால் அது முடிவு அடைவதற்கு முன்பு அடுத்த சிக்கல் வந்து விடுகிறது.
இந்த நிலையில் இதுவரைக்கும் தொடங்கிய பல பிரச்சினைகள் முடிவுக்கு வராமல் இருக்கும்போது அதை எல்லாம் அடுத்தடுத்து முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதுவரைக்கும் எதிர்நீச்சல் புரோமோ வெளியாகும் போதெல்லாம் அதில் அதிகமான நெகட்டிவ் கமெண்ட் தான் இடம் பிடித்திருக்கும்.
ஆனால் இன்று வெளியான ப்ரோமோவில் நேற்றைய எபிசோட்டை பாராட்டி பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் "நேற்று நடந்தது ஒன்றும் பெரிய சாதனை கிடையாது". இனி தர்ஷினி ஜீவானந்தத்தோடு சேர்ந்து டோனாமெண்டுக்கு போயிருக்கிறார் என்று ஈஸ்வரி சொல்லி இருக்கிறார். அது போலவே இனி தர்ஷினி ஜெயிக்க வேண்டும். அதுபோல தன்னை கடத்தியது தன்னுடைய அப்பா தான் என்பதை சொல்ல வேண்டும்.

வழக்கம்போல எல்லா உண்மைகள் தெரிந்தாலும் அதை மூடி மறைத்துக் கொண்டு அடுத்த பிரச்சனையை தொடங்காமல் இருக்கிற பிரச்சனைக்கு முடிவு வரவேண்டும். ஏற்கனவே ஜீவானந்தத்தின் மனைவியை கதீர் மற்றும் குணசேகரன் தான் கொலை செய்தார் என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் அந்த பிரச்சனையை அப்படியே முடித்து விட்டார்கள்.
அதுபோல தர்ஷினியை கடத்தியது குணசேகரன் தான் என்று தெரிந்தாலும் அதை முடித்து விடாமல் குணசேகரனுக்கு தண்டனை கிடைப்பது போன்று காட்சிகள் வைத்தால் தான் சிறப்பாக இருக்கும்... ஆனால் என்ன முடிவெடுத்து இருக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications