எதிர்நீச்சலில் கடத்தல் ட்ராக் முற்றுப்புள்ளி.. தொடங்கிய புது கதை.. குணசேகரனுக்கு விழுந்த முதல் அடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஏப்ரல் 8ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ஈஸ்வரி தான் சபதம் போட்டபடி தர்ஷினியின் திருமணத்தை நிறுத்துவதற்காக சில பெண்களை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்து இருக்கிறார். அதே நேரத்தில் இதுவரைக்கும் ஜெயித்துக் கொண்டிருந்த குணசேகரனுக்கு இப்போது அடி விழ தொடங்கி இருக்கிறது.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் ஆரம்பத்தில் இருந்து குணசேகரன் தான் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். இது பார்க்கும் ரசிகர்களை கடுப்படைய வைத்திருக்கிறது. அதிலும் ஆரம்பத்தில் இந்த சீரியலில் சண்டை சச்சரவுகள் ஒரு பக்கம் இருந்தாலும் காமெடி மற்றும் அடுத்த கட்டத்தில் பெண்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்போடு சீரியல் நகர்ந்து கொண்டிருந்தது.

Ethirneechal Serial April 8th 2024 promo and episode full update

ஆனால் சமீபகாலம் ஆகவே இந்த சீரியலில் ஒரே கடத்தல் காட்சிகளும், அழுகாச்சி காட்சிகளும் தான் பெற்று இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் எதிர்நீச்சல் பெண்கள் தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள். சீரியல் தொடங்கி கிட்டதட்ட இரண்டு வருடங்களை தாண்டி விட்டது. ஆனால் இதுவரைக்கும் ஒரு இடத்தில் கூட எதிர்நீச்சல் பெண்கள் ஜெயிக்கவில்லை. இது பார்க்கும் ரசிகர்களை சலிப்பு அடைய வைத்திருக்கிறது.

என்னதான் சீரியலாக இருந்தாலும் கொஞ்சம் கூட லாஜிக் வேண்டாமா? எப்போதும் வில்லன் மட்டும்தான் ஜெயித்துக் கொண்டிருப்பாரா? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் பெண்கள் முன்னேற்றத்தை முக்கியமாக கொண்டு இருந்தாலும் இதில் தொடங்கப்படும் பிரச்சனைகள் ஒன்று கூட முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. அதனாலேயே பிரச்சனைகள் இடியாப்பசிக்கலை போல சுத்தி சுத்தி கிடக்கிறதே தவிர எதையும் முழுமையாக முடித்து வைக்கப்படாமலே இருக்கிறது.

Ethirneechal Serial April 8th 2024 promo and episode full update

ஆரம்பத்தில் அப்பத்தா காணாமல் போனார், அதற்கு பிறகு தர்ஷினி காணாமல் போனார். இப்போது ஜனனியின் அம்மாவும் தங்கச்சியும் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களை தேடிப்போன ஜனனியும் காணாமல் போய்விட்டார். இதே நேரத்தில் ஜனனியின் தங்கச்சியை காதலித்த உமையாளின் மகனும் காணாமல் போயிருக்கிறார். ஒரே கடத்தல் நாடகமாக இந்த சீரியல் இருந்து வரும் நிலையில் போலீஸ் ஸ்டேஷனும் கடத்தல் காட்சியிலுமே பல மாதங்களாக அடிக்கடி வந்து கொண்டிருப்பதால் ரசிகர்கள் இதுகுறித்து அதிகமாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்போது குணசேகரனின் அழிவு காலம் நெருங்கி விட்டது. அவருக்கு இனி தோல்விதான் கிடைக்கும் என்று கடந்த சனிக்கிழமை எபிசோடில் குணசேகரின் மாமா சாமியாடி குறி சொல்லியிருந்தார். ஏற்கனவே இதற்கு முன்பு அவர் குறி சொல்லியது போல தான் கதை போய்க்கொண்டிருக்கிறது. உதாரணமாக "ஜனனிக்கு திருமண வாழ்க்கை போராட்டமாக தான் இருக்கும் என்று சொல்லியிருந்தார்". அதுபோல ஆதிரைக்கு "யாருக்குமே நடக்காத மாதிரி உனக்கு கல்யாணம் நடக்கும்" என்று சொன்னார். அது போல தான் நடுத்தெருவில் வைத்து தான் ஆதிரைக்கு கல்யாணம் நடந்தது.

Ethirneechal Serial April 8th 2024 promo and episode full update

அந்த வகையில் இனியாவது இந்த கதையில் குணசேகரன் தோற்று எதிர்நீச்சல் பெண்கள் ஜெயிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இப்படியான நிலையில் இன்றைய எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் உமையாள் தன்னுடைய மகன் காணாமல் போன விஷயத்தை பற்றி குணசேகரனிடம் சொல்ல, குணசேகரன் அதிர்ச்சி ஆகிறார்.

அதே நேரத்தில் சக்தி, கதிருக்கு போன் போட்டு அந்த உமையாள் பொம்பள ஜனனியிடம் அதுக்கு உங்க அம்மாவும் தங்கச்சியும் இருக்கணுமேனு சொல்லுச்சு.... என்று சொல்ல, அதற்கு கதிர் அந்த பொம்பள பேசியதை வெச்சே நம்ம அண்ணனை ஜனனியின் அம்மாவையும் தங்கச்சியும் தூக்கி இருந்தா என்ன பண்ண என்று கேள்வி கேட்கிறார்.

Ethirneechal Serial April 8th 2024 promo and episode full update

மறுபக்கத்தில் குணசேகரன் வீட்டிற்கு தர்ஷினியை கூட்டிக்கொண்டு வர அந்த நேரத்தில் ஈஸ்வரி அங்கு சில பெண்களோடு வழி மறைத்து நிற்கிறார். அதோடு இந்த இந்த பெண்கள் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லிட்டு நீங்க போங்க என்று குணசேகரனை நிறுத்தி வைக்கிறார். அதை பார்க்கும் போது அந்த பெண்கள் குழந்தை திருமணத்தை நிறுத்துவதற்காக வந்தவர்கள் என்று தெரிகிறது.

இனி இதை காரணமாக வைத்து தர்ஷினியை மீண்டும் பள்ளிக்கு ஈஸ்வரி கூட்டிட்டு போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஈஸ்வரி தர்ஷினியின் டிரைனரிடம் என் பொண்ணு மீண்டும் அந்த டோனாமெட்டில் கலந்துக்க வேண்டும் அவள் அந்த டோனாமெட்டில் கலந்துக்காததால் தான் அவளுக்கு இப்படி ஆகிடுச்சுன்னு நான் நினைக்கிறேன்.

Ethirneechal Serial April 8th 2024 promo and episode full update

அதனால அந்த டோனாமெண்டில் தர்ஷினி கலந்து கொண்டால் அவன் மீண்டும் பழைய நிலைமைக்கு மாறி விடுவாள் என்று அதற்கான முயற்சிகளை நான் எடுக்கிறேன் என சொல்லி இருக்கிறார். அதனால் இனி குணசேகரனை தாண்டி எதிர்நீச்சல் பெண்கள் எப்படி ஜெயிக்கப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+