திடீரென வீடியோ வெளியிட்டு நன்றி கூறிய எதிர்நீச்சல் டீம்.. ஜனனி மிஸ்ஸிங்.. எதிர்பார்க்காத வார்த்தை!

எதிர்நீச்சல் சீரியலின் ஒரு வருடம் முடிவடைந்த மகிழ்ச்சியை அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி ரசிகர்களுக்கு நன்றி கூறியிருக்கின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியல் தொடங்கி ஒரு வருடம் முடிவடைந்து விட்டது என்று சீரியல் அணியினர் மகிழ்ச்சியை கொண்டாடி இருக்கின்றனர்.

இதுவரைக்கும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி கூறி இயக்குனர் திருச்செல்வம் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

இரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் எதிர்நீச்சல் சீரியல் இன்னும் பல வருடம் தொடரும் என்று கூறி இருக்கின்றனர்.

இந்த கொண்டாட்டத்தில் ஜனனி மட்டும் கலந்து கொள்ளவில்லை என்று ரசிகர்கள் பீல் பண்ணி வருகிறார்கள்.

பெண்களுக்கான எதிர்நீச்சல்

பெண்களுக்கான எதிர்நீச்சல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை அதிகமாக கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது. பெண் அடிமைத்தனத்தையும் ஆண்களின் வரட்டு கவுரவத்தையும் வித்தியாசப்படுத்தி பெண்கள் எப்படி தங்களுடைய வாழ்க்கையில் தங்களுக்கே தெரியாமல் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை தோலுரித்து, அவர்கள் எப்படி சுயமாக எதிர்நீச்சல் போட்டு வாழ்க்கையில் சாதிக்க போகிறார்கள் என்பதை பற்றியதாக இந்த சீரியல் இருந்து வருகிறது.

கோலங்கள் தொல்காப்பியன்

கோலங்கள் தொல்காப்பியன்

எதிர்நீச்சல் சீரியலை இயக்குனர் திருச் செல்வம் இயக்கி வருகிறார். இவர் இதற்கு முன்பு பல சீரியல்களை இயக்கியும் அந்த சீரியலில் முக்கியமான கேரக்டரிலும் நடித்து வருகிறார். அந்த வரிசையில் கோலங்கள் சீரியல் இப்ப வரைக்கும் அதிகமான ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. அந்த சீரியலில் திருச்செல்வம் தொல்காப்பியன் என்கிற தொல்ஸ் ஆக இப்ப வரைக்கும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். அதே வரிசையில் இந்த எதிர்நீச்சல் சீரியலில் இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாகவும் ஆசையாகவும் இருந்து வருகிறது.

ஜனனியால் மாறப்போகும் நிலை

ஜனனியால் மாறப்போகும் நிலை

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் வீட்டின் குடும்ப தலைவராக இருந்து மொத்த குடும்பத்தையும் ஆட்டி படைத்து பெண்களை சமையல் கட்டில் வேலை செய்வதற்கும் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கும் மட்டுமே வைத்து வழி நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடைசி மருமகளாக ஜனனியால் இந்த குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் பிரச்சனைகள் பிறகு ஜனனி மட்டுமல்லாமல் மீதம் இருக்கும் மூன்றும் மருமகள்களும் எப்படி தங்களுடைய வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடிக்க இருக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்காக அதிகமான ரசிகர்கள் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

ஜனனி எங்கப்பா

ஜனனி எங்கப்பா

ரசிகர்களின் ஆதரவினால் இந்த சீரியல் மொத்த சீரியல்களின் டிஆர்பி அளவில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்துவிடுகிறது. குறிப்பாக இந்த சீரியலுக்கு கிராமப்புறங்களிலும் நகர்புறங்களிலும் அதிகமான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது இந்த சீரியல் முதல் வருடத்தை முடிவடைந்து இரண்டாவது வருடத்தில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த நேரத்தில் இந்த மகிழ்ச்சியை சீரியல் அணியினர் அனைவரும் அதே குணசேகரனின் வீட்டிற்குள் கேக் வெட்டிக் கொண்டாடி இருக்கின்றனர் தற்போது இந்த வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், இந்த கொண்டாட்டத்தில் ஜனனி மற்றும் இல்லையே என்று அவருடைய ரசிகர்கள் பலர் பீல் பண்ணி வருகிறார்கள். எங்கள் எதிர்நீச்சல் டீம் சார்பாக உங்கள் அனைவருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துக்கள் என்று சீரியல் இயக்குனர் அவருடைய ரசிகர்கள் அனைவருக்கும் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+