எதிர்நீச்சல் சீரியலில் இதை கவனிச்சீங்களா? இயக்குனரின் "உள்குத்து” இதுதான் காரணமா..?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் அதில் நடக்கும் சில புரட்சிகளை ரசிகர்கள் கவனித்திருக்க மாட்டார்கள்.
நாம் என்ன மாதிரி செயலை செய்றோமோ அந்த மாதிரிதான் நமக்கு பலன் கிடைக்கும் என்பதை வலியுறுத்தும் விதத்தில் தான் சில காட்சிகள் எதிர்நீச்சலில் புலப்படுகிறது.

ஜனனி மற்றும் சக்தியின் திருமணத்தை பார்த்த பலருக்கும் ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணத்தில் நடந்த நிகழ்வுகள் ரிவெஞ்ச் என்பது தெரிந்திருக்கும். வாங்க என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்படும் சீரியலின் வரிசையில் எதிர்நீச்சல் சீரியல் பல மாதங்களாகவே இடம் பிடித்திருக்கிறது. சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலில் ஆதிரை மற்றும் அருண் காதல் டிராக் தொடங்கிய பிறகு கதை கொஞ்சம் போர் அடிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் சற்றும் எதிர்பார்க்காத வகையில் கரிகாலன் மற்றும் ஆதிரை திருமணம் நடந்து முடிந்தது பலருக்கும் அதிர்ச்சி தான்.
அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத ரசிகர்கள் இது பிற்போக்குத்தனமாக இருக்கிறது என்று தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். இன்னும் ஒரு சில ரசிகர்கள் இனி தான் கதையே ஆரம்பமாக போகிறது. அதில் எப்படி ஆதிரை வாழ்க்கையில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தன்னிச்சையாக நீச்சல் போட்டு கரை சேர போகிறார் என்பது பற்றி தான் இந்த சீரியல் பயணிக்க போகிறது என்று கணித்து விட்டார்கள்.

ஆனால் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் சிலவற்றை கவனித்தீர்களா? என்று தெரியவில்லை. அதை நானே சொல்கிறேன். என்னன்னா சக்தி மற்றும் ஜனனி திருமணம் நடக்கும் போது ஆதிரையும் மற்றும் விசாலாட்சி நடந்து கொண்டது பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அது எவ்வளவு எரிச்சல் என்றும் கொடுமை என்றும். ஆனால் இப்போது அதுதான் ஆதிரை வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது.
ஜனனிக்கும் சக்திக்கும் கல்யாணம் நடக்கும் போது மண்டபத்தில் வச்சு விசாலாட்சி இடம் சில உறவுக்கார பெண்ணுங்க பேசிக்கொண்டு இருப்பாங்க. அப்போ ஏய் விசாலாட்சி... அந்த பொண்ணு ஒன்னும் அழகு இல்ல. உன் வசதிக்கு ஏத்த மாதிரியும் தெரியல. அப்புறம் எதுக்கு இந்த பொண்ணை எடுத்த என்று கேள்வி கேட்டு விடுவார்கள்.
ஆனால் அதே தான் பல வருடம் கழித்து விசாலாட்சியின் பொண்ணுக்கு நடந்திருக்கிறது. ஆமாங்க ஆதிரை கரிகாலன் கல்யாணத்தன்று ஜான்சி ராணியின் உறவு பெண்கள் சிலர் ஜான்சி ராணி, காசு பணம் இருக்கிறது எல்லாம் சரிதான். ஆனால் பொண்ணு அவ்வளவு ஒன்னும் எடுப்பா இருக்கிற மாதிரி தெரியலையே..!? எப்படி ஜான்சி இதுக்கு ஒத்துக்கிட்ட என்று கேட்பார்கள். இதை நீங்கள் ஞாபகப்படுத்தி பார்க்கலாம்.
அதுபோல சக்தி ஜனனிக்கு தாலி கட்டிய பிறகு ஜனனிக்கு சாப்பாடு ஊட்டி விட சொல்வார்கள். அப்போ ஜனனி சொல்லுவாங்க நான் நான்வெஜ் சாப்பிட மாட்டேன் என்று, அதற்கு விசாலாட்சி நீ எடுத்து கொஞ்சம் ஊட்டு என்று சக்தி இடம் சொல்வாங்க. அப்போ அருகில் இருக்கும் ஆதிரையும் அண்ணே ஊட்டுண்ணே என்று சொல்வார்.

அப்போது சக்தி ஜனனிக்கு சாப்பாடு ஊட்டியதும் ஜனனியால் அதை சாப்பிட முடியாமல் வாந்தி வருகிறது என்று ஓடி விடுவர். அதைப் பார்த்து இதெல்லாம் ரொம்ப ஓவர் அண்ணே என்று ஆதிரை ஏத்திவிடுவார். அதுபோல விசாலாட்சி பக்கத்தில் இருக்கும் பாட்டியம்மாவும் கறி சோறு திங்காத பொண்ணு ஒரு பொண்ணா..? என்று கேட்க, வரட்டும் தன்னால திங்க வைப்பேன் என்று விசாலாட்சியும் வில்லியாக மிரட்டுவார்.
அதுபோலத்தான் ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் எங்கேஜ்மென்ட் நடந்த நாள் அன்று இரவு பந்தியில் வைத்து ஜான்சி ராணி ஆதிரை வாயில் சாப்பாடு அள்ளி திணிப்பார். எனக்கு வேண்டாம் என்று ஆதிரை மறுத்தாலும் ஜான்சி ராணி அள்ளி வாயில் திணித்து விடுவார். அப்போ பார்த்து பதறிப்போன விஷாலாட்சி என்ன பாடு படுத்துறா பாரு என் பொண்ணை என்று சொல்லுவார்.. அந்த சாப்பாட்டை சாப்பிட்ட ஆதிரை எனக்கு வாமிட் வர்ற மாதிரி இருக்கு என்று ஓடிப் போவார் அதையும் பார்த்திருப்பீங்க.
அதுபோல சக்தி, ஜனனி திருமணத்தன்று வசு தன்னுடைய ப்ரண்டுகளோடு சேர்ந்து டான்ஸ் ஆடிக்கொண்டு வருவார். மேடைக்கு ஜனனியை டான்ஸ் ஆடியப்படியே கூட்டிக்கொண்டு வரும்போது அதை பார்த்து கடுப்பான குணசேகரன் நிறுத்துங்கம்மா.. தாலி வாங்க போற பொண்ணை வச்சி டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்கீங்க. கல்யாணம் மேடைங்கிறது கோயில் மாதிரி. நீங்க இதை லேசா நினைச்சுகிட்டு இருக்கீங்களா? இது குணசேகரன் வீட்டு கல்யாணம் என்று கறாராக பேசுவார்.

ஆனால் ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் திருமணத்தன்று முந்தின நாள் இரவு ரிசப்ஷனில் ஜான்சி ராணியும், கதிரும் குடித்துவிட்டு மதுரை குலுங்க குலுங்க எனும் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு இருப்பார்கள். அப்போது இப்படி குடிச்சுகிட்டு ஆடிக்கிட்டு இருக்காங்க? இந்த குடும்பமே லூசா இருக்காங்க என்று குணசேகரன் புலம்பி கொண்டு இருப்பார். இதை எல்லாம் கவனித்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.. "இன்னைக்கு நாம செய்யறது தான் இன்னொரு நாள் நமக்கே திரும்பும்" என்பது. இதை சொல்லாமல் சொல்லித்தான் இயக்குனர் எதிர்நீச்சல் சீரியலில் உள்குத்து வைத்திருக்கிறார்.
நீ அடுத்த வீட்டு பெண்களை கஷ்டப்படுத்தும் போது, நம்ம வீட்டு பொண்ணு இன்னொரு நாள் இதே கஷ்டத்தை அனுபவிக்கும் என்பது இப்போது விசாலாட்சிக்கு மட்டுமல்ல இந்த சீரியலை பார்க்கும் பலருக்கும் புரிந்து இருக்க வேண்டும். இதைத்தான் லாவகமாக இங்கே கதையாக சொல்லப்படுகிறது. பார்ப்போம் இன்னும் எத்தனை விழிப்புணர்வு வரப்போகிறது என்பதை...












Click it and Unblock the Notifications