மெட்டி ஒலி 2 சீரியல் பற்றி மனம் திறந்த எதிர்நீச்சல் இயக்குனர்.. அந்த மூணு மாசம் கூட இப்படித்தானாம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தான் நடித்த மெட்டி ஒலி சீரியல் குறித்து பேசி இருக்கிறார். விரைவில் மெட்டி ஒலி 2 சீரியல் ஒளிபரப்பாக போகிறது என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில் அது குறித்தும் இயக்குனர் திருச்செல்வம் பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களால் உச்சரிக்கப்படும் பெயர் என்றால் அது எதிர்நீச்சல் சீரியலாக தான் இருக்கக்கூடும். இந்த சீரியலுக்கு என்று நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திரைப்படங்களுக்கு இணையாக இந்த சீரியலில் காட்சி அமைப்புகளும், கதைக்களமும் விறுவிறுப்பாக இருப்பது இந்த சீரியலுக்கு கூடுதல் பிளஸ் பாயிண்டாக இருக்கிறது.
இயக்குனர் திருச்செல்வம் எதிர்நீச்சல் சீரியலை இப்போது இயக்கி கொண்டிருந்தாலும் இவர் ஏற்கனவே கோலங்கள் சீரியல் மூலம் பலருக்கும் பரிச்சயமானவர்தான். இந்த சீரியலை இயக்கியும் நடித்தும் இருந்தார்.. அதோடு பல சீரியல்கள் இயக்கியிருந்தாலும், அந்த சீரியலில் எல்லாம் அந்த அளவிற்கு திருச் செல்வம் பிரபலமாகவில்லை. இந்த நிலையில் அவர் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளியான மெட்டி ஒலி சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த வழியில் சமீபத்தில் பேட்டியில் திருச்செல்வம் தான் நடித்த மெட்டிஒலி சீரியல் பற்றி பேசி இருக்கிறார். அதாவது, மெட்டி ஒலி 2 சீரியல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அது குறித்து உங்களுக்கு தெரியுமா? என்ற கேள்விக்கு நானும் அதை கேள்விப்பட்டேன். ஆனால் என்னிடம் யாரும் அது பற்றி அதிகாரப்பூர்வமாக பேசவில்லை. நான் மெட்டி ஒலி சீரியலில் நடித்தது எதிர்பாராத தருணம் தான்.
மெட்டி ஒலி சீரியலில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு நான் நடித்திருந்தேன். அப்போது நான் அதில் நடிக்கவில்லை என்று சொன்ன போதும் கேட்காமல் திருமுருகன் தான் என்னை நடிக்க வைத்தார். ஆரம்பத்தில் எப்படி இருக்கப் போகிறதோ என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய கேரக்டரும் அந்த சீரியலுக்கு நல்ல முக்கியத்துவம் கொடுத்து இருந்தது. பிறகு தான் புரிந்தது. ஆனால் இப்போது அந்த சீரியல் இரண்டாம் பாகம் வந்தாலும் எனக்கு சந்தோசம் தான் என் கூறி இருக்கிறார்.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications