கடவுளையே ஏமாற்றும் குணசேகரன்.. ஜனனி இதை கூட கவனிக்கவில்லையா..? எதிர்நீச்சல் சொதப்பல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு நெஞ்சுவலி வந்த அதிர்ச்சியில் ஒரு கை மற்றும் கால் செயலிழந்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.
ஆனால் குணசேகரன் செய்யும் செயல்களை வைத்து இது உண்மையா இல்லையா என்று அந்த வீட்டில் இருப்பவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.
அதே நேரத்தில் கதாநாயகி ஜனனி எல்லா பிரச்சனைக்கும் பஞ்சாயத்து செய்யும் நிலையில் குணசேகரன் நடவடிக்கையில் இருக்கும் மாற்றத்தை குறித்து இத்தனை நாட்களாக பேசாமல் இருப்பது அதிசயமாக இருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம் வாங்க.

சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களால் பாராட்டப்படும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் மாறி இருக்கிறது. இந்த சீரியலின் கதைக்களத்தில் இருக்கும் வேகம் மற்றும் அடிக்கடி வரும் டுவிஸ்ட்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யூகிக்க முடியாத வகையில் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் கதையின் சுவாரசியத்திற்காக சில சொதப்பல்கள் இருக்கத்தான் செய்கிறது. அதை குறித்து பார்க்கலாம். ஏற்கனவே பட்டம்மாள் கோமாவில் இருக்கும் போது அவருடைய கைரேகையை எடுத்துக்கொண்டு போயி ஜீவானந்தம் பட்டம்மாள் பெயரில் இருக்கும் சொத்து 40% தன்னுடைய பெயருக்கு மாற்றி இருக்கிறார். இதுவே ஒரு பெரிய சொதப்பல். இது குறித்து படித்த மேதாவியாக இருக்கும் வீட்டு மருமகள்கள் யாரும் பேசாதது இன்னும் பெரிய வேடிக்கை.
அதுபோல அந்த வீட்டில் ஆடிட்டர் என்று ஒருவரை வைத்திருக்கிறார்கள் அவர் எல்லா விஷயமும் தலைக்கு மேலே போன பிறகுதான் வீட்டில் உள்ளவர்களிடம் வந்து அதிர்ச்சிகரமாக சொல்வது போன்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அடுத்த சொதப்பலும் எதிர்நீச்சல் சீரியலில் வந்துவிட்டது.
அது என்னனா குணசேகரன் தன்னுடைய சொத்தை ஜீவானந்தம் எடுத்து விட்டதால் அதிர்ச்சியில் நெஞ்சுவலியில் துடிக்கிறார். அப்போது வீட்டில் கார் எதுவும் இல்லாததால் பைக்கிலேயே கதிர் பைக்கை ஓட்ட குணசேகரனை நடுவில் வைத்து கரிகாலன் குணசேகரனை பிடித்துக் கொண்டு ஹாஸ்பிடல் கொண்டு சேர்க்கின்றனர்.

பிறகு டாக்டர்கள் அங்கு இருப்பவர்களிடம் குணசேகரனுக்கு ஒரு கை மற்றும் கால் செயலிழந்து விட்டது என்று கூறியிருக்கிறார்கள். இது பெரிய அதிர்ச்சி தான் ஆனாலும் இதுவரைக்கும் பக்கவாதம் வந்தவர்கள் யாருக்கும் கை மற்றும் கால் மட்டுமே செயல் இழந்ததாக தெரியவில்லை. வாயும் பேச முடியாமல் தான் இருக்கும். ஆனால் இந்த சீரியலில் குணசேகரனுக்கு வாயால் தான் கதை ஓடுகிறது என்பதை புரிந்து கொண்ட இயக்குனர் வாய் சரியாக இருப்பதாகவே காட்டிவிட்டார்.
சரி இதையும் கதைக்காக சொல்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அடுத்து நடந்தது தான் டுவிஸ்ட் ஒரு கால் செயல் இழந்த குணசேகரன் வீட்டிற்குள் நடந்து வருகிறார். இதை படித்த மருமகள்கள் யாருமே கேள்வி கேட்கவும் இல்லை சந்தேகப்படவும் இல்லை அது இன்னும் சிறப்பு. நந்தினிக்கு மட்டும் அவ்வபொழுது மூத்தார் நடிக்கிறாரோ என்று தோன்றுகிறது தவிர கால் செயல் இல்லாமல் இருக்கும்போது எப்படி நடக்க முடியும் என்ற லாஜிக்கை மறந்து விட்டார்கள்.
ஒருவேளை குணசேகரன் வீட்டு பெண்களை ஏமாற்றி அவர்களை ஜீவானந்தத்திற்கு எதிராக திருப்புவதற்காக இப்படி நடிக்கலாம் ஆனால் அதை வீட்டில் உள்ள பெண்கள் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது தான் கேள்வியாக வருகிறது. இது போன்ற சில சொதப்பல்களை இந்த சீரியலில் தவிர்த்து இருந்தால் இன்னும் சீரியல் வேகமாகவும், ஆர்வமும் அதிகரித்து டிஆர்பியில் முதல் இடத்தை தக்க வைத்து விடலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications