எதிர்நீச்சலுக்கு என்ன ஆச்சு..? இது மோசமான செயல்.. சொன்னது ஒன்னு செய்றது ஒன்னா? இதை மாற்றினால் நல்லது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் சமீபகாலமாக வசனத்தில் அதிகமான மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆரம்பத்தில் இந்த சீரியலில் வெற்றிக்கு காரணமே வசனம் தான். ஆனால் அதில் சில நாட்களாகவே இப்போது அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

 ethirneechal serial has been using a lot of bad words in its dialogues

அதிலும் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜான்சி ராணி பேசிய வார்த்தைக் குறித்து பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் இந்த அளவிற்கு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்து டிஆர்பியில் முதல் இடத்தை பிடிப்பதற்கு காரணமே அந்த சீரியலில் கதை வேகமும், வசனமும் தான். இந்த சீரியலின் வசனகர்த்தாவாக நடிகை ஸ்ரீவித்யா இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே கோலங்கள் சீரியலில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் வசனகர்த்தாவாக இருந்து வருகிறார்.

ஆரம்பத்தில் இவர்தான் இந்த சீரியலுக்கான வசனத்தை எழுதுகிறார் என்று தெரிய வந்தபோது அதிகமான ரசிகர்கள் பாராட்டி வந்தனர். ஆனால் சமீப காலமாகவே இந்த சீரியலில் அதிகமான மோசமான வார்த்தைகள் பயன்படுத்தி வருகின்றனர். எதிர்நீச்சல் சீரியல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பல தரப்பட்டவர்களும் இரவு நேரத்தில் ஒன்றாக இருந்து பார்க்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் மத்தியிலும் கூட இந்த சீரியல் பிரபலம் அடைந்திருக்கிறது.

ஆனால் இந்த சீரியலில் சமீபத்தில் பொத்து, மூடு, மூதேவி, நீ என்ன பத்தினியா...? என்றும் இன்னும் இதில் குறிப்பிட முடியாத சில வார்த்தைகளையும் அடிக்கடி பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.இது பலரை அதிர்ச்சியடைய வைத்து வருகிறது. இந்த சீரியலில் மட்டும் தான் இப்படி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினால் அப்படி இல்லைதான்.

ஆனால் பல சீரியல்களில் கள்ளக்காதல்களும் தவறான முன்னுதாரணங்களும் காட்டிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அந்த சீரியல்களை எல்லாம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் பார்ப்பதில்லை.இந்த எதிர்நீச்சல் சீரியலை தான் அதிகமான ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

ஆனால் அதில் ஏன் வசனங்கள் இவ்வளவு மோசமாக இப்போ இருக்கிறது என்று தெரியவில்லை. ஆரம்பத்தில் அமைதியாகவே இருந்த அப்பத்தா தான் பட்டம்மாள் பிஏ என்று தன்னை பற்றி கம்பீரமாக பேசியிருந்தது பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அதுபோலத்தான் பொங்கல் விழாவில் ஈஸ்வரி பேசியதும் பலருடைய மனதை கவர்ந்தது.

அதையெல்லாம் பார்க்கும் போது இப்படி எல்லாம் கூட வசனம் எழுத முடியுமா? என்று பலரையும் யோசிக்க வைத்து இருந்தனர். அதிகமான ரசிகர்களுக்கு மோட்டிவேஷன் கொடுக்கும் விதமாக தான் அப்போது வசனங்கள் இருந்தது. ஆனால் இப்போது சில நாட்களாகவே வீட்டிற்குள் இருக்கும் பெண்களை கதிர், விசாலாட்சி, ஞானம் ஏன் ஜான்சி ராணி கரிகாலன் கூட அபத்தமாக திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் வீட்டில் வேலை பார்த்துக் கொண்டு ஹவுஸ் வைப்பாக இருக்கும் பெண்களைப் பார்த்து இப்படித்தானே பேசுவார்கள்..?

ஆனால் பெண்கள் தங்களுடைய சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்வதற்காக பெண்கள் போராடி வெளியே வருகிறார்கள் என்பது போல் தான் கதை என்று சொல்லிவிட்டு, இப்போது என்ன தான் பேசினாலும் வீட்டு பெண்கள் வீட்டு கிச்சனுக்குள் இருந்து அழுது கொண்டும், இல்லை என்றால் மாடியில் மொத்த மாநாடு போட்டு அழுது கொண்டும் தான் இருக்கிறார்களே தவிர எதுவுமே செயல்முறையில் வெற்றி அவர்களுக்கு கிடைக்கவே இல்லை.

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் கூட ஜான்சி ராணி "புள்ளை பெக்கறப்ப புருஷனை நினைத்து பெத்திருக்க மாட்டா" என்று பேசுகிறார். இது எவ்வளவு மோசமான வசனம். இதை சீரியலில் பார்த்துக் கொண்டிருக்கும் போது வீட்டில் இருக்கும் குழந்தை இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால் என்ன ஆகும்..? இதை ஏன் புரிந்து கொள்ளாமல் இப்படி எல்லாம் வசனத்தை வைத்து வருகிறார்கள் என்று தான் தெரியவில்லை. இனிவரும் எபிசோட்டுகளிலாவது இந்த மாதிரி மோசமான வார்த்தைகளை தவிர்த்தால் எதிர்நீச்சல் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஏற்கனவே நடிகர் மாரிமுத்துவின் மரணத்திற்கு பிறகு இந்த சீரியலில் கதை வேறு விதமாக பயணித்து வருகிறது. இந்த நிலையில் இந்த மாதிரி மோசமான வசனங்களால் சீரியலின் பெயர் கெட்டுப் போய்விடும் தற்போது வெளியான ப்ரோமோவில் கூட இந்த மாதிரி மோசமான வசனத்தை குறித்து பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+