எதிர்நீச்சல் ஜான்சி ராணி யார் தெரியுமா? இவருக்குள் இத்தனை திறமையா? வயதை கேட்டா நம்ப முடியாது!
எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணியாக நடிக்கும் காயத்ரி கிருஷ்ணன் பற்றி பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணி கேரக்டரில் தொகுப்பாளர் காயத்ரி கிருஷ்ணன் நடித்து வருகிறார்.
காயத்ரி கிருஷ்ணன் ஏற்கனவே திருநங்கைகள் பற்றி PhD பட்டம் பெற்றிருக்கிறாராம்.
மாடலிங்கில் கலக்கி தற்போது எதிர்நீச்சலில் ஜான்சி ராணியாக கலக்கிக் கொண்டிருக்கும் காயத்ரி கிருஷ்ணனுக்கு 60 வயது தாண்டி விட்டதாம்.

கரிகாலனின் அம்மா
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் சமீபத்தில் அறிமுகமான ஜான்சி ராணியை யாரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது. இந்த சீரியலில் விறுவிறுப்புக்கு காரணமாக இருக்கும் குணசேகரனுக்கு டப் கொடுக்கும் ஒரு கேரக்டராக ஜான்சி ராணி அறிமுகம் ஆகி இருக்கிறார். கரிகாலனின் அம்மாவாக அறிமுகம் ஆகி இருக்கும் ஜான்சி ராணியின் நிஜப்பெயர் காயத்ரி கிருஷ்ணன் தான். இவர் இதற்கு முன்பு சமீபத்தில் வெளியான அயலி வெப் சீரிஸில் மைதிலியின் அம்மாவாக நடித்திருப்பார். அது மட்டுமல்லாமல் நடிகர் சிம்பு நடித்த பெரிய அளவில் வெற்றி பெற்ற வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்திலும் சிறு வேடத்தில் காயத்ரி கிருஷ்ணன் நடித்திருக்கிறார்.

தெரியாத இன்னொரு முகம்
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி, ரேணுகா, சக்தி, நந்தினி, ஈஸ்வரி என பலர் திட்டி தீர்த்தாலும் அதை கண்டு கொள்ளாத ஒரு துறுதுறுப்பான கேரக்டராகவும் அடுத்து என்ன செய்யப் போகிறார்? இவர் என்ன பிளான் வைத்து இருக்கிறார் என்று யாருக்கும் தெரிந்து கொள்ள முடியாமல் தன்னுடைய இன்னொரு முகத்தை இதுவரைக்கும் காட்டாமல் ஜான்சி ராணி இருந்து வருகிறார். ஜான்சி ராணி இந்த சீரியலில் அறிமுகமான பிறகு அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டு இருந்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.இன்னும் ஜான்சிரானியை பற்றி முழுவதும் குணசேகரனுக்கு தெரிந்த பிறகு இனி என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்வதற்கும் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

ஆசைப்பட்ட படிப்பு
இந்த நிலையில் ஜான்சிராணியாக நடிக்கும் காயத்ரி கிருஷ்ணன் தொகுப்பாளராக பல வருடங்களாக பணிபுரிந்து வருகிறாராம். அது மட்டுமல்லாமல் சிறுவயதிலிருந்தே இவருக்கு படிப்புகள் டாக்டர் பட்டம் பெற வேண்டும் என்று அதிகமான ஆசை இருந்ததால்தான் இவர் திருமணத்திற்கு பிறகும் பிஹெச்டி பட்டம் பெற்று இருக்கிறார். அதுவும் பி ஹெச் டி யில் திருநங்கைகளின் வாழ்க்கைகளை குறித்து அவர் ரிசர்ச் செய்திருக்கிறார். அந்த வகையில் அதிகமான திருநங்கைகள் இவருக்கு பழக்கமாக இருக்கிறார்கள். திருநங்கைகளின் வலியையும் புரிந்து கொள்ள இந்த படிப்பால் தான் புரிந்து கொள்ள முடிகிறது என்று கூறி இருக்கிறார்.

டாக்டர் பட்டம்
இவர் லயோலா காலேஜில் தான் படித்து இருக்கிறார். இவர் எம்.பீல் படிக்கும் போது வயது கம்மியாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். அதைத்தொடர்ந்து போராடி எம்பில் சேர்ந்து எம்.பில் எடுத்த அதே கெய்ட் தான் இவரை பிஎச்டி படிப்பதற்கும் எடுத்துக் கொண்டாராம்.அந்த டைமில் ஆறு மாசம் பிஹெச்டி படித்துக் கொண்டிருக்கும் போது, தான் இவர் கர்ப்பமாக ஆகிவிட்டாராம். ஏற்கனவே எம்ஃபில் படித்து கொண்டிருக்கும் போது முதல் குழந்தை பிறந்ததாம். அடுத்த வருடமே இரண்டாவது குழந்தைக்கும் இவர் கர்ப்பமாகிவிட்டாராம். இவர் கர்ப்பமாக இருந்தாலும் அந்த காலகட்டத்தில் வீட்டிலிருந்து நோட்ஸ் எடுத்து படித்து விட்டாராம்.

உருவ கேலி
அதுமட்டுமல்லாமல் பல மாடலிங்கில் கலந்துகொண்டு வெற்றி பெற்று இருக்கிறாராம். ஆனாலும் இவருக்கு ஆரம்பத்தில் அதிகமான திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆர்வத்தில் காரணமாக ஆடிஷன் கலந்து கொள்ளும்போது பல உருவ கேலிகள் நடந்திருக்கிறது. இவர் குண்டாக இருக்கிறார் என்று போகும் இடங்களில் எல்லாம் இவரை ரிஜெக்ட் செய்து இருக்கிறார்கள். ஆனால் அதைப் பற்றி எனக்கு இப்போதும் கவலை இல்லை. ஆரோக்கியமாக இருப்பதுதான் முக்கியம். உருவ கேலியை பற்றி கவலை இல்லை ஒல்லியாக இருந்தால்தான் அழகு என்று பலரும் இப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறி இருக்கிறார். இவர் திருநங்கைகளை பற்றி டேட்டா கலெக்ட் பண்ண போகும்போது கூட பலர் இவரிடம் ரேட் பேசி இருக்கிறார்களாம் அதையெல்லாம் மறக்கவே முடியாது என்று பகிர்ந்து இருக்கிறார்.

அடுத்து அரசியல் தானாம்
அது மட்டுமல்லாமல் இன்னும் சில காலங்களுக்குள் தனக்கு அரசியலில் சேர்வதற்கு ஆசை இருக்கிறது என்றும் அரசியலில் மூலமாக திருநங்கைகளுக்கு மற்றும் எளியோருக்கு உதவ வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அதுதான் என்னுடைய விருப்பம் என்றும் கூறியிருக்கிறார். எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணியாக நடிக்கும் போது பலரும் ஜான்சி ராணியை எலெக்ஷனில் நிறுத்துங்க நாங்க ஓட்டு போடுகிறோம் என்று கூறுகிறார்கள். இது சந்தோஷமாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications