எதிர்நீச்சல்: வீட்டிற்கு மீண்டும் வந்த ஆதிரை.. குணசேகரனுக்கு கிடைத்த அவமானம்.. பரபரப்பின் உச்சம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை மறு வீட்டிற்கு கரிகாலனோடு குணசேகரன் வீட்டிற்கு வந்திருக்கும் நிலையில் வாசலில் வைத்தே குணசேகரன் ஆதிரையை காக்க வைக்கிறார்.
பிறகு ஆதிரைக்கு எல்லாம் முறைப்படி செய்ய வேண்டும் என்று குணசேகரன் கூறியதை கேட்டு நந்தினியும் ரேணுகவும் கடுப்பாகி கேள்வி கேட்கின்றனர்.
நந்தினி ரேணுகாவை குணசேகரன் அவமானப்படுத்துவதை பார்த்து ரேணுகாவின் மகள் குணசேகரனை கேள்வி கேட்டு அவமானப்படுத்துகிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமணம் யாரும் எதிர்பார்க்காத விதமாக நடந்து இருக்கும் நிலையில் இன்று வெளியான பிரமோவில் குணசேகரன் வீட்டிற்கு ஆதிரை மறு வீட்டிற்கு வருகிறார்.
ஆதிரையை நந்தினி, ரேணுகா, ஜனனி மூவரும் சென்று சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டிற்கு வர வைத்திருக்கின்றனர். அதே நேரத்தில் அருணுக்கு ஆக்சிடென்ட் ஆன விஷயத்தை பற்றி நேற்றைய எபிசோடில் நந்தினி கூறியதை கேட்டு ஆதிரை அதிர்ச்சியாக இருக்கிறார். இந்த நிலையில் இனி என்ன முடிவெடுக்க போகிறார் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அதே நேரத்தில் ஜனனி மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களும் குணசேகரனை பழிவாங்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் வீட்டிற்கு வந்த ஆதுரையை வாசலில் நிற்க வைத்த குணசேகரன் வீட்டு மருமகளை ஆரத்தி எடுக்க சொல்லி சொன்னதும் நந்தினி கோபப்படுகிறார். ஆமா கல்யாணம் மட்டும் முறைப்படி நடந்துட்டு இதுல ஆரத்தி தான் குறை என்று சொல்ல குணசேகரன் கோபம் ஆகிறார்.

அதே நேரத்தில் வீட்டில் இருக்கும் மருமகளை குணசேகரன் திட்டுவது பார்த்து ரேணுகாவின் மகள் கேள்வி கேட்கிறார். அதற்கு குணசேகரன் உனக்கு இதெல்லாம் யாரு சொல்லி தந்தா என்று கேட்க? அதற்கு அந்த குழந்தை இதை யாரும் எனக்கு சொல்லி தரல. நீங்க பேசுறதை பார்த்து இப்படி யாரிடமும் பண்ண கூடாதுன்னு நானா தெரிஞ்சுக்கிட்டதுதான் என்று முகத்தடி கொடுக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பெரும் பரபரப்பும் சண்டையும் இருப்பது கன்ஃபார்ம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications