எதிர்நீச்சலின் இறுதி வாரம்.. மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த நந்தினி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரத்தோடு முடிவடைய இருக்கும் நிலையில் இன்றைய எபிசோடு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரனுக்காக கதிர் மற்றும் ஞானம் வீட்டு பெண்களிடம் பொய் சொல்ல சொல்கின்றனர். ஆனால் அதற்கு நந்தினி பதிலடி கொடுத்து அவமானப்படுத்துகிறார்.
அந்த வகையில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியல் வரும் ஜூன் ஏழாம் தேதி, இந்த வாரத்தோடு முடிவுக்கு வர இருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் இந்த சீரியலில் முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது. ஆனாலும் சீரியல் முடிவு குறித்து யூகிக்க முடியாத வகையில் தான் கதை பயணித்துக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே எதிர்நீச்சல் பெண்கள் எப்போது நீச்சல் போடுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் எதிர்நீச்சல் பெண்களுக்கு மட்டும் தினமும் பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டே இருந்தது. அதிலும் சமீபத்தில் இரண்டு மாதங்களாக இந்த சீரியலில் பெரிய அளவில் சுவாரசியமாக கதை முன்னேறவில்லை. ஒவ்வொரு பிரச்சனைகளும் உடனுக்குடன் முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் இந்த சீரியல் தரப்பினர் இந்த வாரத்தோடு சீரியலைக் முடிவுக்கு கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து சீரியலில் நடிக்கும் நடிகர்களும் அதிகாரப்பூர்வமாக சீரியலில் இறுதி நாள் சூட்டிங் முடிவடைந்து விட்டது என்று தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அதில் ஜெயிலில் இருக்கும் குணசேகரனை பார்ப்பதற்காக கதிர், ஞானம், தர்ஷன் மூன்று பேரும் போயிருக்கும் நிலையில் மூன்று பேரையும் பார்க்க குணசேகரன் என்ன மன்னிச்சிருங்கபா.. நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும். நான் எவ்வளவோ பிரச்சனை பண்ணி இருக்கிறேன். இனி நான் ஜெயிலில் இருந்து வெளியே வருவேனா என்று கூட எனக்கு தெரியாது.
ஆனால் என்னுடைய தம்பிங்க எல்லாரும் தலை நிமிர்ந்து நிற்கணும் என்று கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்க குணசேகரின் நிலைமையை பார்த்து பதறிப்போன கதிரும் ஞானமும் அவரை வெளியே எடுக்க வேண்டும் என்று எல்லாம் முயற்சிகளும் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதோடு வீட்டில் வந்து வீட்டில் இருக்கும் பெண்களிடம் குணசேகரன் பற்றி போலீஸ் விசாரித்தால் எங்களுக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிவிட வேண்டும் என்று ஞானம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு ரேணுகா அதெல்லாம் எங்களால் முடியாது .நாங்க பொய் சொல்ல மாட்டோம் என்று அதிரடியாக சொல்ல ஞானம் ரேணுகாவை அடிக்க கை ஓங்குகிறார். அந்த நேரத்தில் வரும் நந்தினி நிறுத்துங்க என்று சொல்லி குணசேகரன் பற்றி கோபமாக பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்திருக்கும் நிலையில் இனி தம்பிமார்கள் எல்லோரும் அண்ணனுக்கு ஆதரவாக பழையபடி வீட்டு பெண்களை எதிர்த்து நிற்பார்களா? என்ற கேள்விகள் எழுகிறது. மீண்டும் ஞானமும் கதிரும் மாறிவிட்டதால் இனி இவர்களை எதிர்த்து இருக்கும் நான்கு நாள் எபிசோட்டில் எப்படி எதிர்நீச்சல் பெண்கள் நீச்சல் போட போகிறார்கள்? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications