சக்தியை கன்னத்தில் அடித்த “கரிகாலன்”.. ஆதிரை கேட்ட கேள்வி.. எதிர்நீச்சலில் இனி கதை இதுதானா..?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் சக்தி மற்றும் கரிகாலன் சூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீரியலில் ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடந்து முடிந்தது. ஆனால் திருமணத்திற்கு பிறகு அடுத்தடுத்த டுவிஸ்ட் வந்து கொண்டிருக்கிறது.

ஆதிரை கரிகாலனிடம் நான் இப்போதும் அருணை தான் காதலிக்கிறேன் என்று சொல்லியதால் கரிகாலன் அழுது கொண்டே இருக்கிறார்.
அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யூகிக்க முடியாத வகையில் தான் எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் சமூகமாக வரவேற்பு பெற்று கொண்டிருக்கிறது. அதிலும் சமீபத்தில் ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆதிரை காதலித்த அருண் கடைசி நேரத்தில் திருமணத்திற்கு வராமல் இருந்ததால் குணசேகரிடம் மாட்டிக் கொண்ட ஆதிரைக்கு நடுத்தெருவில் வைத்து அவருக்கு விருப்பமே இல்லாமல் கரிகாலனோடு குணசேகரன் திருமணத்தை முடித்து வைத்து விட்டார்.

அதைத்தொடர்ந்து குணசேகரன் ஆதிரைக்கு விருப்பமில்லாமல் முதல் இரவுக்கு ஏற்பாடு செய்து வைத்திருக்க ஆதிரை முதலில் மறுத்தாலும் பிறகு சுயமாக யோசித்து ஒரு பிளான் போட்டு கரிகாலனை பிளாக்மெயில் செய்து அவரிடமிருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது. காரணம் பட்டமாளின் சொத்தில் பாதி ஜீவானந்தம் பெயருக்கு மாறிவிட்டது. இனி ஜீவானந்தம் குணசேகரனிடம் நேரடியாக மோத போகிறாரா? அல்லது ஜனனி குணசேகரனோடு சேர்ந்து ஜீவானந்தத்திடம் மோத போகிறாரா? என்று யோசிக்க முடியாத வகையில் இருக்கிறது.
அதே நேரத்தில் சீரியலில் கதை என்னதான் வேகமாக போய்க் கொண்டிருந்தாலும் சூட்டிங் ஸ்பாட்டில் இந்த சீரியல் நடிகர்கள் செய்யும் லூட்டி இணையத்தில் அடிக்கடி வைரலாகி கொண்டிருக்கிறது. அனைத்து நடிகர்களுமே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் நிலையில் தாங்கள் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் ரீல்ஸ் வீடியோக்களை அவ்வபோது தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவிட்டு வருவது வழக்கம்.

இந்த மாதிரி தான் தற்போது இந்த சீரியலில் சக்தி கேரக்டரில் நடிக்கும் சபரியும் கரிகாலன் கேரக்டரில் நடிக்கும் விமல் குமாரும் ரீல்ஸ் வீடியோ ஒன்றை எடுத்து இருக்கின்றனர். அதில் சக்தி வடிவேலுவாகவும், கரிகாலன் நடிகர் முரளியாகவும் அதில் பேசியிருக்கின்றனர். அப்பொழுது அந்த ரீல்ஸ் வீடியோவில் நான் யாருன்னு உனக்கு தெரியாது என்று முரளி சொல்வது போல இருக்கும். அதையே வடிவேலு ஆமா நான் யாருன்னு உனக்கு தெரியாதுன்னு சொல்லுவார். அதற்கு முரளி வடிவேலுவின் கன்னத்தில் ஒரு அடி வைத்து நான் யாருனு உனக்கும் தெரியாது என்று வார்னிங் கொடுப்பார்.
அந்த ரீல்ஸ் வீடியோவில் வருவது போன்று காருக்குள் இருந்தபடியே கரிகாலன் மற்றும் சக்தி இருவரும் அட்ராசிட்டி செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது ரீல்ஸ் வீடியோவில் வருவது போல கரிகாலன் சக்தி கன்னத்தில் ஓங்கி அடித்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக வலம் வருகிறது. அது போல இன்னொரு ரீல்ஸ் வீடியோவில் கரிகாலனும், ஆதிரையும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது ஆதிரை நான் ஏன் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும் ஏதாவது ஒரு ரீசன் சொல்லு என்று கேட்க, அதற்கு கரிகாலன் நீ அழகா இருக்க, சோகத்தில் கூட ரொம்ப அழகா இருக்க, நீ ரொம்ப பொறுமையா இருக்க, உனக்கு கோபமே வர மாட்டேங்குது என்று ஒவ்வொன்றாக சொல்லி கொண்டு இருக்க, அதற்கு ஆதிரை ஆப்போசிட் ஆகவே பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு நீ ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு ஒரு ரீசன் சொல்லு என்று கரிகாலன் கேட்க, அதற்கு ஒரு ரீசன் இல்ல 100 ரீசன் இருக்கு என்று ஆதிரை சொல்கிறார்.
அதையே கேப்ஷன் ஆக கொடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதிரையும் போஸ்ட் பண்ணி இருக்க இந்த வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. அதிகமான ரசிகர்கள் இந்த வீடியோவில் மட்டுமல்லாமல் சீரியலிலும் கரிகாலன் நடிப்பு வேற லெவல் என்று பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் இதுவரைக்கும் நான்கு நாட்களுக்கு தான் குணசேகரன் தன்னுடைய வீட்டு மருமகள்களுக்கு கெடு வைத்திருந்தார்.
இந்த நிலையில் இனி விரைவில் பட்டம்மாளின் ஷேர் ஜீவானந்தம் என்கிற பெயருக்கு மாறி இருக்கிறது என்று தெரியப்போகிறது. அப்போதுதான் ஆட்டம் இன்னும் வேகமாக சூடு பிடிக்க போகிறது. ஜீவானந்தத்திடம் இருந்து குணசேகரன் மீதமுள்ள சொத்தையும் காப்பாற்ற போகிறாரா? அல்லது பறிகொடுக்கப் போகிறாரா? என்ன மாதிரி பிளான் போடப் போகிறார் என்று இனிவரும் எபிசோட்டில் பார்க்கலாம்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications