Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு தலை காதல்.. பலமுறை பட்ட அவமானம்.. உருக்கமாக மனம் திறந்த எதிர்நீச்சல் கரிகாலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் கரிகாலன் கேரக்டரில் நடிகர் விமல் குமார் நடித்து வருகிறார்.

விஜே ஆகவும், ஆர்ஜே வாகவும், வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட் ஆகவும், ஸ்கிரிப்ட் ரைட்டர், ஷோ ப்ரொடியூசர் ஆகவும் இருந்து வரும் விமல் குமார் முதல்முறையாக எதிர்நீச்சல் சீரியலால் நடிகராகவும் கலக்கி வருகிறார்.

Ethirneechal serial Karikalan has told about his cinema life hardships

இந்த நிலையில் விமல் குமார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் எதிர்நீச்சல் சீரியலில் தன்னுடைய கேரக்டர் என பல தகவல்களை பேசி இருக்கிறார். அது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் பல வருடங்களாக இந்த இடத்திற்கு வருவதற்கு கஷ்டப்பட்டு இருக்கிறேன். கரிகாலனா மக்களோட சப்போர்ட் கிடைக்கும் போது அது இதயத்துக்குள்ள புல்லாங்குழல் வாசிக்கிற மாதிரியான ஒரு உணர்வை கொடுக்கிறது என்று கூறியிருக்கிறார்.

அதோடு இந்த எதிர்நீச்சல் சீரியலில் ஒரு தலை காதலோடு நான் இருக்கிற மாதிரி இருக்கும். கதைப்படி இப்ப ஆதிரை யாரை திருமணம் செய்ய போறாங்க என்று தான் அனைவருடைய எதிர்பார்ப்பும் இருக்கும். ஆனால் அது பற்றி என்கிட்ட கேட்காதுங்க. என்கிட்ட அதுக்கு பதில் இல்ல. ஆனால் ஆடியன்ஸ் பல்ஸ் என்னவென்று இயக்குனருக்கு நல்லா தெரியும். அதனால அவர் மட்டும்தான் அடுத்து என்ன ஆகப்போகிறது என்று முடிவெடுக்க கூடியவர் என்று கூறி இருக்கிறார்.

அதோடு நான் நிறைய இயக்குனர்களை இதுவரைக்கும் சந்தித்து இருக்கிறேன். ஆனால் நட்புங்கிறது வேற, சினிமாங்கறது வேற, நீங்க ஒரு இயக்குனரை சந்திக்க போகலாம், பேசலாம். அவங்க கூட மணிக்கணக்காக பேசிக் கொண்டு இருக்கலாம். ஆனா வாய்ப்பு பற்றி கேட்கும் போது அது என் மைண்ட்ல ஸ்பார்க் ஆகும் தம்பி அந்த கேரக்டர் உன்னை டிமாண்ட் பண்ணனும்னு வெளிப்படையாகவே சொல்லிடுவாங்க.

இந்த கேரக்டருக்கு இவன் பொருத்தமா இருப்பான் என்று இயக்குனருக்கு தோணுனா மட்டும்தான் நமக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்படி கிடைச்ச வாய்ப்பை சரியா பயன்படுத்தணும். நான் அதிகமான நேரத்தில்தான் நூலகத்தில் தான் இருப்பேன். புத்தகம் வாசிப்பது எனக்கு ரொம்ப பிடித்தது. அதனால் தான் நான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். நாம பார்த்து வியந்த பல பிரபலங்களுடைய பயோகிராபியை படிச்சு மோட்டிவேஷன் ஆகி இருக்கிறேன்.

அதிகமான தேடல்கள் இருக்கின்றது. அந்த தேடல்களால் கிடைத்த அனுபவத்தால் தான் கரிகாலன் நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஒருமுறை ஆடிசனுக்காக வடபழனிக்கு போயிருந்தேன். அங்கு ஒரு ஆடிஷனில் ஒரு போட்டோவை என்கிட்ட காட்டி இதுல இருக்குற மாதிரி முடி வெட்டிட்டு வாங்கன்னு சொன்னாங்க. நானும் போய் வெட்டிட்டு வந்தேன், ஆனால் அடுத்த நாலும் போகும்போது இன்னும் கொஞ்சம் வெட்டிடுவாங்கன்னு சொன்னாங்க, நான் அதையும் செய்தேன் ஆனா அடுத்தது போகும்போது தாடியை கொஞ்சம் ஷார்ப் ஆக்கிட்டு வாங்கன்னு சொன்னாங்க. மூணு முறை முடி வெட்டிட்டு போனேன்.

ஆனா மூனாவது முறையா நான் போனப்ப அங்க யாரும் இல்ல நானும் அவங்க வருவாங்கன்னு ரொம்ப நேரம் அங்கேயே காத்திருந்தேன். அப்போ அந்த இடத்துக்கு ஓனர் என்கிட்ட வந்து என்ன வேணும் யாரு என்னன்னு விசாரிச்சாரு, பிறகு அவங்க போயிட்டாங்க என்று சொல்லி அப்போ அவர் உங்கள அவங்க செலக்ட் பண்ணவில்லை என்ற தெரியலையா என்று கேட்டார்.

நான் அந்த ஆடிஷனில் சந்தித்த நபர்களை இப்ப வரைக்கும் எங்கேயும் பார்த்ததில்லை. ஆனால் அன்று எனக்கு ரொம்பவே ஒரு மாதிரி இருந்தது. ரூமுக்கு வந்து தண்ணீர் குடிச்சிட்டு தூங்கிட்டேன். ஒவ்வொரு நாள் விடியலும் புது விடியல் தான். கவலைகள் எல்லாம் ஒரு நாளைக்கு மட்டும் தான். அடுத்த நாள் புது ஓட்டம் ஆரம்பித்து விடும். இப்படி நீளமான இரவுகள். கவலையான இரவுகள் எல்லாம் என் வாழ்க்கையிலும் இருக்கு. அதெல்லாம் என் டைரி பக்கங்களிலும் இருக்கு என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பீல் பண்ணி கருத்து வெளியிட்டு வருகிறார்கள்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+