"அப்பா இறந்த நேரத்தில் கூட” மனம் திறந்த எதிர்நீச்சல் குணசேகரன்... இவருக்குள் இப்படி ஒரு கேரக்டரா?
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் அனைவரையும் மிரட்டும் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் மாரிமுத்து அந்த சீரியலில் தனக்கு காரியமாக வேண்டும் என்றால் அழுது நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் தன்னுடைய கேரக்டர் என்ன என்பதை பற்றி முதன்முறையாக மனம் திறந்து பேசி இருக்கிறார்.
நிஜ வாழ்க்கைக்கு சீரியலுக்கும் அதிகமாக வித்தியாசம் இருப்பதாகவும் தற்போது இந்த சீரியலை பார்த்துவிட்டு நேரில் கூட பலர் தன்னை திட்டுகிறார்கள் என்று பல உண்மைகளை பகிர்ந்து இருக்கிறார்.

கேரக்டரை ரசிக்கும் ரசிகர்கள்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் குறுகிய காலத்தில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விட்டது. இந்த சீரியலில் கதாநாயகனுக்கும் நாயகிக்கும் இருக்கும் ரசிகர்களையும், எதிர்பார்ப்பையும் விடவும் ஆதி குணசேகரன் ஆக அனைவரையும் மிரட்டி கொண்டிருக்கும் மாரிமுத்துவுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. ஒரு சில ரசிகர்கள் மாரிமுத்து கேரக்டர் சரியானதாக தான் இருக்கிறார் என்று கருத்து கூறி வருகின்றனர். தன்னுடைய தம்பிகளின் மீது சிறுவயதிலிருந்தே வைத்திருக்கும் பாசம் மற்றும் தன்னுடைய சொந்த உழைப்பினால் இன்று இவ்வளவு பெரிய இடத்தில் இருக்கும் ஒரு மனிதன் தன்னுடைய தம்பிகள் பிரிந்து விடக் கூடாது என்பதற்காக தான் இப்படி நடந்து கொண்டிருக்கிறார் என்று இவருக்கு ஆதரவாக சில பேசிக் கொண்டிருக்கின்றனர்.

நிஜ வாழ்க்கை சம்பவங்கள்
அதே நேரத்தில் மாரிமுத்து திரைப்படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடத்திலும் நடித்துவிட்டு நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று முதல்முறையாக எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் ஆக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த சீரியலில் இவருடைய நடிப்பை பார்த்து நிஜ வாழ்க்கையில் பலர் இவருடன் நேரில் கூட திட்டுகிறார்களாம். எதிரே இவர் வந்தாலே இந்த வழி வேண்டாம் என்று சிலர் திரும்பிப் போய் விடுகிறார்களாம். அதை பார்க்கும்போது தனக்கு சிரிப்பு வருவதாக இவர் கூறியிருக்கிறார்.

அட இதுதான் நிஜமாம்
சீரியலில் நடிப்பதை அப்படியே நம்பிக்கொண்டிருக்கும் ரசிகர்களிடம் நான் நிஜத்தில் அப்படிப்பட்டவன் இல்லை என்று எப்படி சொல்வது? இது என்னுடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக தான் நான் இதை நினைக்கிறேன் என்று மனம் விட்டு பேசி இருக்கிறார். அதுபோல தனக்கு அழுவதற்கே தெரியாது என்று குண்டை தூக்கி போட்டு இருக்கிறார். இந்த சீரியலில் இவர் ஆனா, ஊனா என்றால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து தம்பிகளை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார். எந்த ஒரு சின்ன பிரச்சனை என்றாலும் இவர் புலம்பலும் சாமி போட்டோ முன்பு நின்று அழுவதும் பலமுறை பார்த்திருந்த ரசிகர்களுக்கு இவர் எனக்கு அழுவதே தெரியாது என்று சொன்னால் அதிர்ச்சியாக தானே இருக்கும்.

அந்த நேரத்திலும் அழுகை வரலையே
ஆனால் உண்மையில் நிஜத்தில் மாரிமுத்துவிற்கு அழுவதற்கே தெரியாதாம். அவருடைய அப்பா இறந்த நேரத்தில் கூட அவருக்கு அழுகை வரவில்லையாம். மனதிற்குள்ளே நெருடல் இருந்தாலும் வயதாகி விட்டது இனி அவர் வந்த வாழ்க்கையை வாழ்ந்தாகிவிட்டது இனி எல்லோரும் ஒருநாள் பொய்தானே ஆகவேண்டும் என்று உண்மை நிலையை அறிந்து அதற்கு தகுந்த மாதிரி தான் நடந்து கொள்வாராம். ஆனால் சீரியலில் இவரை அழ வைப்பதற்காக கிளிசரினை ஊற்றி ஊற்றி தான் அழ வைத்துக் கொண்டிருக்கிறார்களாம். கடவுளே இல்லை என்று சொல்லும் இவர் நிஜ வாழ்க்கைக்கு தகுந்த மாதிரி எதார்த்தத்தை மட்டும் தான் நம்புவதாகவும் அதனால் தனக்கு கண்ணீரே வராது என்று கூறி இருக்கிறார்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications