எதிர்நீச்சல்: குணசேகரனுக்கு கரிகாலன் வச்ச ஆப்பு.. பாயிண்டை பிடிச்ச நந்தினி.. இவ்ளோ மாறிட்டாங்க
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மே 13ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று வெளியான ப்ரோமோவில் ஞானத்தை வைத்து குணசேகரனை அவமானப்படுத்தி இருக்கிறார். மறுபக்கத்தில் ஞானத்தை ஏமாற்றிக்கொண்டு ஓடிப்போன கரிகாலன் வீட்டிற்கு மீண்டும் வருகிறார் என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவின் அம்மா கொடுத்த பணத்தை வைத்து ஞானம் கருவாட்டு கடை வைத்து பிசினஸ் பண்ண போறேன் என்று மொத்த பணத்தையும் கரிகாலனை நம்பி கொடுக்க கரிகாலன் கடைசியில் கடத்தல் பொருளை கொண்டு வந்து வைத்து ஞானம் மற்றும் மொத்த குடும்பத்தையும் ஏமாற்றி விட்டார்.

இதனால் ரேணுகா ஞானத்தை அடித்து இருக்கிறார். ஞானம் நான் அண்ணன் சொல்ற மாதிரி ஒன்னுக்கும் உருப்படாதவனாக தான் இருக்கிறேன். எனக்கு எதையும் செய்ய முடியாது என்று புலம்பி கொண்டு இருக்க, குணசேகரன் என்னை எதிர்த்து உங்க யாராலும் ஜெயிக்கவே முடியாது. நீங்க தோற்றுக் கொண்டுதான் இருப்பீங்க என்று மீண்டும் அசம்பாவிதமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் நந்தினியின் அப்பா தாராவுக்கு காது குத்த வேண்டும் என்று சொல்லி குணசேகரனிடம் ஏற்கனவே அனுமதி கேட்டிருந்தார். அதற்கு குணசேகரன் அவமானப்படுத்தி திட்டி இருந்தார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் தாராவிற்க்கு காதுகுத்து ஃபங்ஷன் வைப்பதற்காக இன்விடேஷன் ரெடி ஆகி வந்திருக்கிறது.

அதை குணசேகரனிடம் கொடுத்து பெரியவருக்கு அடுத்ததாக நீங்கதானே மாமா இருக்கீங்க. நீங்க தான் இதை படிச்சு பாக்கணும். அவரு இதை படிக்கலைனா போகட்டும் ஆனால் நீங்க இதை படிச்சு பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க என்று சொல்ல குணசேகரன் அதிர்ச்சியாகி கோபத்தில் நிற்கிறார். அடுத்த கட்டத்தில் குணசேகரன் என்னால் இந்த ஃபங்ஷனுக்கு எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது.

நந்தினி என்னை நம்பி என்கிட்ட லெட்டர் கொடுத்துச்சு. ஆனால் என்கிட்ட இப்போ எந்த பணமும் இல்லையே என்று கதறி அழுது கொண்டு இருக்க அதை கேட்டு கிச்சனில் இருந்தபடியே ரேணுகாவும் அழுது கொண்டிருக்கிறார். அதற்கு சக்தி உன்கிட்ட பணம் இல்லன்னா என்ன அண்ணே நாம மூணு பேரும் ஒற்றுமையாய் இருக்கோம். அது போதும் என்று ஞானத்திற்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்.
நீயா நானாவா இல்லை சொல்வதெல்லாம் உண்மையின் சாயலா? ஏன் இப்படி? கோபிநாத்துக்கு குவியும் கேள்வி
அதைத் தொடர்ந்து ஞானத்திடம் பணத்தை ஏமாற்றிக் கொண்டு ஓடிப்போன கரிகாலன் மீண்டும் வீட்டிற்குள் வருகிறார். இதனால் கரிகாலனிடம் இருந்து ஞானம் பணத்தை வாங்குவாரா? அல்லது கரிகாலன் இப்படி செய்ததற்கு காரணம் குணசேகரன் தான் என்று கரிகாலன் எதுவும் குண்டை தூக்கி போட போகிறாரா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications