எதிர்நீச்சல்: ஈஸ்வரி கேட்ட கேள்வியால் தலைகுனிந்த குணசேகரன்! மாற்றம் வருமா? கதிர் கோபத்தில் இருக்காரு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய எபிசோடு வெளியாகி இருக்கிறது. அதில் ஞானம் பிசினஸ் தொடங்குகிறேன் என்று ஏமாற்றமடைந்திருக்கும் நிலையில் அது பற்றி விசாலாட்சி அவமானப்படுத்த ஈஸ்வரி குணசேகரனிடம் கேள்வி கேட்கிறார். இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் இப்போது இருக்கும் பிரச்சனைகள் முடிவடைவதற்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எப்போது தான் இந்த சீரியலில் பெண்கள் எதிர்நீச்சல் அடிப்பார்கள் என்பதும் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் குணசேகரன் ஜெயித்துக்கொண்டே இருக்க பெண்கள் மட்டும் அல்லாமல் இப்போது அவர்களுடைய கணவன்மார்களும் தோற்றுப் போய் நிற்கிறார்கள்.

குணசேகரனை ஜெயித்துக் காட்டுகிறோம் என்று வீர வசனம் பேசி கடைசியில் ஜனனி தான் பல்பு வாங்கிக் கொண்டிருப்பார். ஆனால் இப்போது ஜனனியை தொடர்ந்து வீட்டில் இருக்கும் எல்லோரும் அப்படியே இருக்கின்றனர். நேற்றைய எபிசோடில் கூட குணசேகரனிடம் நாங்கள் தனியாக பிசினஸ் தொடங்கி வென்று காட்டுகிறோம் என்று சபதம் போட்ட ஞானம் கரிகாலனை நம்பி ஏமாற்றம் அடைந்திருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்தே ஞானம் கருவாட்டு பிசினஸில் இறங்க வேண்டாம் என்று ரேணுகா சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனாலும் நேற்று கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகைகளுக்கு பேமெண்ட் கொடுக்க வேண்டும் என்று தன்னுடைய காதில் போட்டு இருந்த கம்மலை கூட கழட்டி கொடுத்து நீ மட்டுமல்ல நானும் ஏமாளி என்று நிரூபித்து இருக்கிறார். இதை இன்னொரு வகையிலும் பார்க்கலாம். தன்னுடைய கணவருக்காக விருப்பமே இல்லை என்றாலும் ரேணுகா செய்த உதவியாக எடுத்துக் கொண்டாலும் இது தவறு தான்.
தனக்கு ஞானம் பிசினஸ் செய்வது விருப்பமில்லை என்றால் எதனால் இந்த பிசினஸ் சரிப்பட்டு வராது என்பதை சரியாக ரேணுகா எடுத்துச் சொல்லவே இல்லை. அதுபோல எல்லாரும் எதிர்பார்த்தபடியே கரிகாலனால் திறப்பு விழா அன்றே குணசேகரன் முன்பு ஞானம் ஏமாற்றப்பட்டு இருக்கிறார். இப்படியான நிலையில் தோற்றுப் போன ஞானத்தை கன்னத்தில் ரேணுகா அடித்து எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் வழக்கம் போல எதிர்நீச்சல் பெண்கள் எல்லோரும் வாசலில் லைனில் உட்கார்ந்து இருக்கின்றனர். அப்போது அங்கு வரும் விசாலாட்சி இந்த வீட்டை விட்டு போறேன்னு சொன்னீங்க மறுபடியும் எதற்காக இங்கே வந்து உட்கார்ந்திருக்கீங்க என்று அவமானப்படுத்த அதற்கு நந்தினி இந்த வீட்டில் இருந்து சாதித்துக் காட்டுவோம் என்று தான் நாங்கள் வந்திருக்கிறோம் என்று பேசிக் கொண்டிருக்கும் போது வீரம் வந்தது போல ஈஸ்வரி குணசேகரனிடம் சென்று நான் உங்களிடம் தனியா பேசணும் என்று சொல்கிறார்.
அதற்கு குணசேகரன் தனியா பேச என்ன இருக்கு? அதான் நேற்று அவ்வளவு பேசுனியே இன்னைக்கு என்ன வந்து பேச போற என்று பேச அதற்கு ஈஸ்வரி எதையோ பேசிக் கொண்டிருக்க குணசேகரன் பதில் எதுவும் பேசாமல் தலையை குனிந்தபடி இருக்கிறார். மறுபக்கத்தில் ஞானம் காரில் அழுது கொண்டே இருக்கிறார். நான் அந்த மனுஷன் சொன்ன மாதிரியே இந்த முறையும் ஏமாந்து போயிட்டேனே...
எனக்கு வாழ்றதுக்கே தகுதி இல்ல. நான் மூளை இல்லாதவனா என்று புலம்பி கொண்டிருக்கிறார். அதை பார்த்து கோபமான கதிர் அந்த கரிகாலன் மட்டும் என் கையில் கிடைச்சா அவ்வளவுதான். கொன்னு போட்டு விடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications