பழைய பாடலுக்கு நந்தினியோடு ஆட்டம் போடும் கதிர்.. ரேணுகா சொன்ன வார்த்தை.. பரபரப்பில் எதிர்நீச்சல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ஹரிப்ரியா சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
அவருக்கு ஜோடியாக கதிர் கேரக்டரில் நடிக்கும் விபுராமனோடு பழைய பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார்.
சீரியலில் கணவன் மனைவியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவர்கள் இருவருடைய காமினேஷன் டான்ஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பரவி வருகிறது.

சன் டிவியில் அதிகமான ரசிகர்களால் பார்க்கப்படும் சீரியல்களில் எதிர்நீச்சல் சீரியலும் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் தற்போது ரசிகர்களின் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்து வருகிறார்கள். அந்த வரிசையில் ஏற்கனவே சின்ன திரையில் கொடி கட்டி பல வருடங்களாக பறந்து கொண்டிருக்கும் நடிகையாக ஹரிப்பிரியா இந்த சீரியலில் நந்தினி கேரக்டரில் நடித்து வருகிறார்.

நந்தினியின் கணவர் கதிர் கேரக்டரில் நடிகர் விபுரமன் நடித்து வருகிறார். இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த சீரியலில் கதிர் கேரக்டரில் மல்லுவேட்டி மைனராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். அடிக்கடி நந்தினியை திட்டிக் கொண்டிருக்கும் இவர் குடித்துவிட்டு ரகளை செய்யும்போது நந்தினி இடம் அடி வாங்க தவறுவதே இல்லை.
தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமணம் நடக்குமா? நடக்காதா? என்ற பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் நேற்று எபிசோடில் மண்டபத்திற்கு வந்த கதிரை பார்த்து நந்தினி அதிர்ச்சியாகி இருப்பார். நந்தினியின் அப்பா மற்றும் வீட்டில் இருக்கும் அனைவருடைய முன்னிலையில் சரக்கு பாட்டிலை எடுத்துக்கொண்டு கதிர் ரூமிற்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில் இன்று என்ன பிரச்சனை செய்யப் போகிறாரோ என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில் " பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா" எனும் பழைய பாடலுக்கு நந்தினி மற்றும் கதிர் இருவரும் ஆட்டம் போட்டு இருக்கின்றனர். தற்போது அந்த வீடியோவை நந்தினி வெளியிட அதை ரேணுகாவும் பாராட்ட, தற்போது சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. திருமணம் நடக்குமா இல்லையா என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது மண்டபத்திலேயே இவர்கள் போட்ட ஆட்டத்தை பார்த்து என்ன சொல்வது என்று பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications