மனம் மாறி குடும்பத்தோடு சேர்ந்த கதிர், ஞானம்.. எதிர்நீச்சல் சீரியலில் இனி நடக்கப் போவது இதுதானா?
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அதில் கடற்கரையில் எதிர்நீச்சல் குடும்பத்தினர் அனைவரும் குதூகலமாக அனைவரும் வலம் வருகின்றனர்.
எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதை குறித்தும் காணலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இப்போது என்ன நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மனதிலும் எழுந்து இருக்கிறது. இதுவரைக்கும் 40% ஷேர் வைத்திருந்த அப்பத்தாவிடம் கையெழுத்து வாங்கிய குணசேகரனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி இனி தான் கிடைக்க இருக்கிறதாம்.
சொத்துக்களை தன்னுடைய பெயருக்கு மாற்றி விட வேண்டும் என்று குணசேகரன் சூழ்ச்சிகரமாக ஆதிரையின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் அதை புரிந்து கொண்ட அப்பத்தா அவருக்கே தெரியாமல் ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தி வந்த நிலையில், திடீரென்று அப்பத்தா கண் இமைக்கும் நேரத்தில் குணசேகரன் அப்பத்தாவிற்கே தெரியாமல் புது ஆட்டத்தை ஆடி மண்டபத்தில் கலவரப்படுத்தி விட்டார்.
கதிரை கையெழுத்து போட வைத்து சொத்தை கொடுப்பது போல கொடுக்க வைத்து பின்பு அவர் குடித்துவிட்டு கையெழுத்து போட்டதாக செட் பண்ணி அதற்கு சான்றிதழ்களையும் ரெடிய பண்ணிவிட்டார். இந்த நிலையில் இனி சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க, தற்போது இந்த சீரியலில் நடிகர்கள் காயாக ஜாலியாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றனர்.

ஆதிரையின் திருமணம் நடக்குமா? இல்லையா? என்றும் இனி அப்பத்தா என்ன செய்து வைத்திருக்கிறார் அது எப்படி வெளியே தெரியவரும் என்றெல்லாம் ரசிகர்கள் ஒரு பக்கம் தவித்துக் கொண்டிருக்க இந்த சீரியல் குடும்பத்தினர் அனைவரும் கடற்கரையில் சூட்டிங் இல்லாத நேரத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்து இருக்கின்றனர். அதில் கதிரும் நந்தினியும் ஜாலியாக நடந்து கொண்டுவர அவர்களுக்கு இடையே ஆதிரை ஓடி வந்து சேர்ந்துவிட, பிறகு ஞானம் வந்து சேர்ந்துவிட கூடவே ரேணுகாவும் வந்து விடுகிறார்.
மொத்த குடும்பமும் இதுபோல சொந்தம் தந்ததால் இறைவா வா நன்றி சொல்கிறேன் என்கிற பாடலுக்கு ரீலீஸ் வீடியோ வெளியிட இதை பார்த்த ரசிகர்கள் சீரியலில் எப்போதும் முறைத்துக் கொண்டும் வேட்டியை மடித்துக் கொண்டு பிரச்சனை செய்து கொண்டிருக்கும் கதிரா இப்படி குடும்பத்தோடு குதூகலமாக இருப்பது என்று ஆச்சரியப்பட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் சீக்கிரமாக ஆஸ்பிட்டல் சீனை முடித்துவிட்டு ஆதிரைக்கு திருமணம் நடக்குமா? இல்லையா? என்பதையும் தெரியப்படுத்தினால் இந்த சீரியல் விறுவிறுப்பு இன்னும் கூடும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications