எதிர்நீச்சல்: உயிர் பிழைத்த சக்தி சொன்ன விஷயம்! அதிர்ச்சியில் ஜனனி! குணசேகரன் கதை இனி அவ்வளவுதானா?
சென்னை : 'எதிர்நீச்சல்' சீரியல்ல, இப்போ போயிட்டு இருக்குற ஃப்ளாஷ் பேக் இருக்கு பாருங்க... சும்மா அடிச்சுத் தூக்குது! குணசேகரன் இப்ப வில்லத்தனம் பண்ணுறதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், சின்ன வயசுலயே அவர் செஞ்சக் கொடூரமான வேலை இப்போ குடும்பத்தைக் கதிகலங்க வச்சுட்டு இருக்கு!

கதறி அழுத நந்தினி
தனுஷ்கோடிக்கு பல எதிர்ப்புகளைத் தாண்டி போன சக்தி, அங்க ஒரு சாமியாரை சந்திச்சு 'தேவகி' பத்தின ரகசியத்தை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டார்! ஆதி முத்து நேபாளத்துல இருந்து வந்த தேவகியை சொத்துக்கு ஆசைப்பட்டு ஏமாத்தி கல்யாணம் பண்ணி இருக்கார். அவருக்கு ஏற்கனவேத் திருமணம் ஆனது தெரியாம தேவகி ஒரு பையனையும் பெத்து இருக்காங்க.
குணசேகரனின் மிரட்டல்
இந்த விஷயம் தெரிஞ்சதும், குணசேகரன், "ரெண்டு பேரையும் கொன்னுடுவேன்! இந்த ஊரை விட்டுக் கிளம்புங்க!"ன்னு மிரட்டி இருக்கான். ஆனா, தேவகி அங்கேயேத் தங்கி இருக்கவும், அவளைக் கொலை செய்ய ஆட்களை அனுப்பி இருக்கான். உயிருக்கு பயந்து தேவகி தன் பையனோட ஓடி, சாமியார் கிட்டப் போய்ச் சேர்ந்திருக்கா. ஆதி முத்து உடல்நிலை சரியில்லாம இறந்த பிறகு, குணசேகரன் மொத்தக் குடும்பப் பொறுப்பையும் ஏத்துக்கிட்டு, தேவகி கதையை முடிக்கத் திட்டம் போடுறான். ஆதி முத்து கூட வாழ்ந்த வீட்டை பார்க்க வந்த தேவகியைப் பிடிக்க, "என் பையனை மட்டும் வாரிசா ஏத்துக்கோங்க"ன்னு கேட்க, அவளைக் குத்திக் கொலை பண்ணிருக்கான்!
நந்தினியின் கண்ணீர்
இந்த கொடுமையை எல்லாம் கேள்விப்பட்ட நந்தினி, "இப்படிச் சம்பாதிச்ச ஒருத்தனோட பணத்துல தான் என் பிள்ளைங்க வளர்ந்தாங்களா? நினைச்சாவே உடம்பெல்லாம் கூசுது!"ன்னு அழுதுப் புலம்புறா. ஜனனி என்ன சொல்றதுன்னே தெரியாம வாயடைச்சுப் போயிட்டா.
ராணா மிஸ்ஸிங்
குணசேகரன் அடியாள் கிட்ட இருந்து எப்படியோ தப்பிச்சுப் போன தேவகியின் பையன் ராணா எங்க இருக்கான்னு சக்தி கேட்க, சாமியார் ஒரு ஷாக் கொடுத்திருக்கார்: "நான் ராணாவைப் படிக்க ஹாஸ்டல்ல சேர்த்தேன். ஆனா, அவன் என்ன நினைச்சானோ தெரியலை, அங்கிருந்து ஓடிப் போயிட்டான்"ன்னு சாமியார் சொல்ல, சக்தி ரொம்பவே அதிர்ச்சி அடைஞ்சுட்டு, ஊருக்குக் கிளம்புறான்.
ஆதி குணசேகரன் பிளான்
இந்த நேரத்துல, ஆதி குணசேகரனுக்கு ராமேஸ்வரத்துல இருந்து ஒரு போன் வந்திருக்கு!. அடியாள் போன் பண்ணி, "ஒரு சின்னப் பிரச்சனை ஆகிடுச்சு! சக்தி நம்ம ஆளுங்கள அடிச்சு விரட்டிட்டுச் சாமியார் கூடத் தப்பிச்சுப் போயிட்டான்!"ன்னு சொல்லி இருக்கான். இதைக் கேட்டு டென்ஷன் ஆன குணசேகரன், "உன்னை மாதிரி அரைவேக்காட்டுப் பயலுகள நம்புனா இப்படித்தான் கோட்டை விட்டுட்டு நிக்கணும்! நீ என்ன பண்ணுவியோ தெரியாது, அவனைப் புடிச்சு மடக்கி, அவன் கையில என்னென்ன இருக்கோ, அத்தனையும் புடுங்கிட்டு, அவனை அடிச்சு விரட்டி விடு! இதுல ஏதாவதுத் தப்பு நடந்துச்சோ, நானே இராமேஸ்வரம் வந்து, உன்னை வெட்டி கடல்லப் போட்டுருவேன்!"ன்னு மிரட்டி ஆர்டர் போட்டு இருக்கான்!
அன்புக்கரசியின் வெறித்தனம்
வீட்டுக்குள்ளயும் டென்ஷன் குறையல! அன்புக்கரசி திரும்ப வீட்டுக்கு வந்ததும், தர்ஷினி வாசல்லயே மறிச்சுப் பேசுறா.
"உனக்கு கடைசியா வார்னிங் கொடுக்குறேன்! மரியாதையா நீயே இங்க இருந்து ஓடிரு, இல்லைன்னா பெரிய பிரச்சனை ஆகிடும்!"ன்னு மிரட்ட, அதுக்கு அன்புக்கரசி, "பிரச்சனையை நீ இனிமேதான் பண்ணுவேன்னு சொல்ற; ஆனா, நான் பொறந்ததுல இருந்தே பிரச்சனையோடதான் வாழ்ந்துட்டு இருக்கேன்! அதனால, இதுக்காகலாம் பயந்து என்னால ஓட முடியாது! உன்னால முடிஞ்சத நீ பாத்துக்கோ!"ன்னுச் சவால் விட்டுட்டு உள்ள போறா.
ஜனனிக்கு சவால்
ஜனனி பார்த்து முறைக்கும்போது, அன்புக்கரசி, "இப்படியே முறைச்சுட்டு நிக்காம, அடுத்து ஏதாச்சும் பண்ணுங்க, ஒர்க் அவுட் ஆகுதான்னுப் பார்ப்போம்!"ன்னு சேலஞ் பண்ணிட்டு உள்ள போறா!இதற்கு நடுவுல, போன்ல பேசின சக்தி, "இங்க பெரிய விஷயம் நடந்திருக்கு, நேர்ல வந்து எல்லாம் சொல்றேன்"ன்னு ஜனனி கிட்ட சொல்ல, அவளும் அழுதுக்கிட்டே "எமர்ஜென்சின்னா எனக்குக் கால் பண்ணு!"ன்னு கவலைப்படுறா!
இப்போ எல்லாப பிரச்சனையும் ஊருக்கு வரப்போகுது! குணசேகரனுக்கு பெரிய ஷாக் காத்துட்டு இருக்குது. ஆனாலும் இனி என்ன நடக்க போகுதுன்னு பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications