எதிர்நீச்சல் சீரியலில் இரண்டாவது பாகமா? அதுவும் சன் டிவியில் இல்லையா? இனி இவருக்கு தான் முக்கியமா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் கடந்த ஜூன் 8-ம் தேதி முடிவுக்கு வந்திருந்த நிலையில் இந்த சீரியலில் இரண்டாவது பாகம் வெளியாக இருக்கிறது என்ற தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் இரண்டாவது பாகம் சன் டிவியில் ஒளிபரப்பாகவில்லை என்றும் கூறப்படுகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரைம் டைம் சீரியலுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருக்கிறது. அதற்கு மேலும் வலுசேர்க்கும் விதத்தில் இயக்குனர் திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் சீரியல் சன் டிவியில் தொடங்கப்படும் போது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது. கோலங்கள் சீரியலுக்குப் பிறகு திருச்செல்வம் ஒரு சில சீரியல்களை இயக்கியிருந்தார்.

ஆனால் அது கோலங்கள் சீரியல் அளவிற்கு பிரபலமாகவில்லை. ஆனால் எதிர்நீச்சல் சீரியல் டைட்டில் பாடல் முதல் நாள் எபிசோடு வரை எல்லாமே ரசிகர்களை கவரும் விதத்தில் எதார்த்தமாக அமைந்தது ரசிகர்களை அதிகமாக ஈர்த்துவிட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் ஆரம்பத்திலேயே மற்ற சேனல் தரப்பினரை பொறாமைப்பட வைக்கும் அளவிற்கு இந்த சீரியல் பட்டிதொட்டி எல்லாம் அதிகமாக பேசப்பட்டு வந்தது.
ஆனால் யார் கண்ணுபட்டதோ என்று தெரியவில்லை இந்த சீரியலில் வில்லனாக இருந்தாலும் கதாநாயகன் ரேஞ்சில் குணசேகரன் கேரக்டரில் மாரிமுத்து வாழ்ந்து வந்த நிலையில் அவருடைய திடீர் இறப்பு சின்னத்திரை ரசிகர்களையும் சீரியல் தரப்பினரையும் அதிக அளவில் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. அதற்குப் பிறகு சீரியல் தரப்பினர் சீரியலில் பல்வேறு மாற்றங்களை செய்து பார்த்தனர்.
ஆனால் ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு படிப்படியாக குறைய தொடங்கி விட்டது. இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் ஜூன் மாதத்தின் தொடக்கத்திலேயே இந்த சீரியல் முடிவடைய போகும் செய்திகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. பிறகு ஜூன் 8-ம் தேதியோடு இந்த சீரியல் முடிவடைந்ததும் சீரியலில் நடித்த நடிகர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய வருத்தங்களை சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த சீரியலின் இரண்டாவது பாகம் தொடங்குமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருந்தனர். இந்த நிலையில் இந்த சீரியலில் இரண்டாவது பாகம் விரைவில் தொடங்கப் போவதாக செய்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதோடு இயக்குனர் திருச்செல்வத்திடம் மற்றொரு சேனலில் இருந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. முதல் பாகம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிலையில் திடீரென அந்த சீரியல் முடிவுக்கு வரும்படி சேனல் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதால் தான் சீரியல் முடிவு அடையப்பட்டது என்றும் அதனால் இரண்டாவது பாகம் வேற சேனலில் ஒளிபரப்பாகலாம் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இரண்டாவது பாகத்தில் சக்தி மற்றும் ஜனனிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதை இருக்கும் என்றும் அதில் கூறியிருக்கிறது. ஆனால் இந்த செய்திகள் உண்மையா? இல்லையா? என்று அதிகாரப்பூர்வமாக திருச்செல்வம் தரப்பிலிருந்து அறிவிக்கப்படவில்லை.
எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்ததும் திருச்செல்வம் தன்னுடைய மகளின் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடித்திருக்கிறார். இந்த நிலையில் இரண்டாவது பாகம் தொடங்கப் போகிறாரா? இல்லையா? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications