குணசேகரனுக்கு நான் வில்லன் தான்.. ஆனால் மாரிமுத்து இறந்த அன்று மதியம் நடந்தது தெரியுமா?.. SKR எமோஷனல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் ஆக நடித்து வந்த மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருந்தார்.
நல்லா இருந்த மனிதன் திடீரென்று இறந்து விட்டார் என்ற செய்தியை கேட்டு ரசிகர்களும், அவரோடு நடித்த நடிகர்களும் பல பிரபலங்களும் நடிகர் மாரிமுத்து இறப்பு குறித்து தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

அதுபோல நடிகர் மாரிமுத்துவோடு நெருங்கி பழகிய பலர் அவர் பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவுக்கு வில்லனாக இருக்கும் எஸ் கே ஆர் மாரிமுத்து பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ட்ரெண்டிங் ஸ்டார் ஆக பிரபலமாகி கொண்டிருந்த நடிகர் மாரிமுத்து திடீரென்று மரணம் அடைந்தது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இருக்கிறது. ஆனாலும் இதையும் கடந்து தான் போக வேண்டும் என்று பலர் மனதை தைரியப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். அதே நேரத்தில் மாரிமுத்து தங்களிடம் பேசியது மற்றும் அவருடைய குணநலன்கள் பற்றி அவருடைய நண்பர்களும் பல நடிகர்களும் தொடர்ச்சியாக பல தகவல்களை பேசி வருகின்றனர். அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் எஸ் கே ஆர் தற்போது மாரிமுத்து பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
அந்த வகையில், மாரிமுத்து சார் போன்று நடிப்பில் வெறித்தனமாக இருக்கும் நபரை நான் பார்த்ததில்லை. முதல் முறையாக நான் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கிறேன். இதற்கு முன்பு எனக்கு நடிப்பு அனுபவம் கிடையாது. ஆனால் நான் மாரிமுத்து சாரை பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன் அதனால் இந்த சீரியலில் நடிக்கும் போது பல தகவல்களை நான் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்வேன். அவரும் எந்த விஷயமாக இருந்தாலும் கொஞ்சம் கூட மனம் கோணாமல் எல்லாவற்றையும் சொல்லித் தருவார்.
சீரியலின் கதைப்படி நான்தான் அவருக்கு வில்லன். ஆனால் நான் செய்யும் சின்ன சின்ன தவறுகளையயும், கவனக் குறைவுகளை கூட சுட்டிக்காட்டி இதை இப்படி செய்ங்க சார். இன்னும் சிறப்பாக இருக்கும் உங்கள் கண் அசைவு பார்வை அழகாக இருக்கிறது. அதனால் அதை இப்படி பாருங்கள், கண்ணாடியை உங்கள் கண்ணில் சரியாக மாட்டுங்கள். அப்போதான் நீங்கள் மிரட்டலாக தெரிவிங்க என்று பல விஷயங்களை சொல்லிக் கொண்டே இருப்பார்.
அதுபோல நான் டப்பிங் பேசுவதற்கு முதலில் பயந்தேன். வேண்டாம் வேற யாரையாவது வைத்து பேசிக்கொள்ளலாம் என்று இயக்குனரிடம் சொன்ன போது, இல்லை நீங்களே பேசுங்கள் உங்களுடைய குரல் சரியாக இருக்கிறது என்று எனக்கு தைரியம் கொடுத்தது மாரிமுத்து சார் தான். நான் முதல் நாள் டப்பிங் பேசிவிட்டு முடித்து விட்டேன். ஆனால் அதற்கு பிறகு தான் மாரிமுத்து சார் வந்தார் அவர் வந்த பிறகு அவர் பேசுவதை கொஞ்சம் பார்க்கலாம் என்று இருந்தேன். அப்புறம் தான் எனக்கு தெரிந்தது. டப்பிங் பேசும்போது கூட அவர் முழு சாட் எடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது.
டைரக்டர் கூட இது போதும் என்று சொன்னால் வேண்டாம் இன்னும் கொஞ்சம் மாற்றி பேசுகிறேன் என்று இவராகவே பேசுவார். அதைப் பார்த்து நான் வியந்து போயிருந்தேன். மாரிமுத்து சார் இறந்து போய்விட்டார் என்று சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை. பலர் எனக்கு போன் செய்து கேட்டார்கள் என்னுடைய மனைவி அன்னைக்கு மதியம் சாப்பிடவே இல்லை. அன்று முழுக்க என்னுடைய மனைவியும் அழுது கொண்டே இருந்தார். அந்த அளவிற்கு மாரிமுத்து சாரருடைய நடிப்பு என்னுடைய மனைவிக்கும், என்னுடைய குடும்பத்திற்கும் பிடிக்கும்.
இனி நான் யாரோடு சண்டை போட போகிறேன்? என்று எனக்கு தெரியவில்லை. சீரியலில் நாங்கள் கதைப்படி சண்டை போட்டுக் கொண்டாலும் அவர் பேசும் வசனத்தை பார்த்து நான் அடுத்த நிமிடமே சிரித்துக் கொண்டிருப்பேன். அவ்வளவு அழகாக அவர் பேசுவார். ஒவ்வொரு இடத்திலும் அவர் செய்யும் செயலை பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம் என்று நடிகர் மாரிமுத்து பற்றி பல தகவல்களை எமோஷனல் கலந்து எதிர்நீச்சல் எஸ்கேஆர் பேசியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications