எதிர்நீச்சல் தெலுங்கிலும் முடிவுக்கு வந்தது.. ஆனால் கிளைமேக்ஸ் தான் அதிரடி! வித்தியாசமான யோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் கடந்த ஜூன் 8ஆம் தேதியோடு முடிவுக்கு வந்தது. இந்த சீரியல் தெலுங்கிலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பாகி வந்த நிலையில் தமிழில் முடிவடைந்ததை தொடர்ந்து தெலுங்கிலும் சீரியல் முடிவடைந்து இருக்கிறது. ஆனால் தமிழ் கிளைமாக்ஸ் போல அல்லாமல் தெலுங்கில் வேற கிளைமேக்ஸ் வைக்கப்பட்டிருக்கிறது அது பற்றி பார்க்கலாம்.

இயக்குனர் திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்கு காரணம் இந்த சீரியல் தொடங்கிய ஒரு சில வாரங்களிலேயே மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் கதையில் வேகம் இருந்தது. அது போல எதார்த்த வாழ்க்கையோடு இணைந்து இந்த சீரியலின் கதை இருந்ததாலே இந்த சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.

Television Ethirneechal Serial

இதுவரைக்கும் சீரியலே பார்க்காத ஆண்கள் கூட இந்த சீரியலை விரும்பி பார்க்க தொடங்கிவிட்டனர். சீரியலில் வில்லனாக குணசேகரன் இருந்தாலும் அவர்தான் பல ஆண்களின் கேரக்டரின் பிரதிபலிப்பாக இருந்தார். அதனாலேயே அவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகி விட்டனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு சீரியலின் கதை வேறு விதமாக மாற்றப்பட்டது.

அதிலும் கடந்த சில மாதங்களாக இந்த சீரியலின் கதையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் தொய்வு காரணமாக இந்த சீரியல் குறித்து மக்கள் மத்தியில் நெகட்டிவாக பேசப்பட்டது. இந்த நிலையில் சீரியல் தரப்பினருக்கு சேனல் தரப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக சீரியல் திடீரென்று முடிவுக்கு வந்தது. அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியல் தெலுங்கில் உப்பென்னா என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பாகி வந்த நிலையில் அந்த சீரியலும் முடிவுக்கு வந்திருக்கிறது.

ஆனால் கிளைமேக்ஸ் தான் தமிழை போல இல்லாமல் வேறுவிதமாக வைத்திருக்கிறார்கள். இயக்குனர் திருச்செல்வம் இயக்கிய சீரியல்கள் சிலது ஏற்கனவே தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டிருந்ததால் எதிர்நீச்சல் சீரியலும் தொடங்கப்பட்ட இரண்டு மாதத்தில் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழில் எப்படி எதிர்நீச்சல் சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்துவிட்டார்களோ அதுபோல தெலுங்கில் உப்பென்னா சீரியலுக்கும் அதிகமான ரசிகர்கள் சேர்ந்தனர்.

Television Ethirneechal Serial

தமிழில் எதிர்நீச்சல் சீரியல் 740 எபிசோடுகளுடன் முடிவடைந்த நிலையில் தெலுங்கில் இந்த வாரத்துடன் இந்த சீரியல் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால் தமிழில் வைக்கப்பட்ட கிளைமாக்ஸ் தெலுங்கில் வைக்கப்படவில்லை. தமிழ் எதிர்நீச்சலில் குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு எதிர்நீச்சல் பெண்களிடம் அப்பத்தா, இதுபோல நீங்கள் வாழ்க்கையில் பல குணசேகரனை பார்க்க வேண்டியது இருக்கும்.

அதற்கெல்லாம் தயங்கி நிற்காமல் நீங்கள் முன்னேறி போய் கொண்டே இருக்க வேண்டும். உங்களுக்கு தடைகளாக வருபவர்களுக்கு நீங்கள் உங்கள் சாதனைகளால் பதில் சொல்லுங்கள் என்று சொல்லி இருப்பார். சில மாதங்களுக்கு முன்பு ஞானம் மற்றும் கதிர் தங்களுடைய மனைவிமார்களை புரிந்து கொண்டு அவர்கள் பக்கத்தில் நின்று இருப்பார்கள். ஆனால் கிளைமாக்ஸில் அண்ணனுக்கு சப்போர்ட்டாக மீண்டும் வில்லன்களாக மாறியிருப்பார்கள்.

Television Ethirneechal Serial

ஆனால் தெலுங்கில் குணசேகரன் கேரக்டர் உட்பட வீட்டில் இருக்கும் அனைத்து ஆண்களும் மனைவிமார்களை புரிந்து கொண்டு அவர்களின் கனவுக்கு துணையாக இருப்பது போன்று கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறது. உப்பென்னா வீட்டு பெண்கள் எல்லோரும் வேலைக்கு போகும்போது அவர்களுடைய கணவர்மார்கள் மற்றும் மாமியார் உட்பட எல்லோரும் டாட்டா காட்டி வேலைக்கு அனுப்பி வைப்பது போல அந்த சீரியலின் கிளைமேக்ஸ் வைத்திருக்கின்றனர்.

இதனால் இந்த கிளைமேக்ஸ்க்கு அதிகமான பாராட்டு கிடைத்து வருகிறது. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களும் கூட உப்பென்னா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியை பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+