எதிர்நீச்சலில் அடுத்தடுத்து காணாமல் போகும் கேரக்டர்கள்.. அத்தனையும் இதற்காகத்தானா? மாறப்போகும் கதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் இரவு 9:30 மணிக்கு எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று டிஆர்பி யில் முதல் இடத்தில் இருந்து வரும் நிலையில் இந்த சீரியலில் அடுத்தடுத்து பல கேரக்டர்கள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றனர்.

Ethirneechal Serial The characters disappearing one after another is it all for this?

அதே நேரத்தில் இன்னும் ஒரு சில தினங்களில் சீரியலின் கதை இன்னும் வேகம் எடுக்கப் போகிறது என்று தெரிகிறது. அது பற்றி விரிவாக பார்ப்போம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது சின்னத்திரை வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் கதை பெண்களின் அடிமைத்தனத்திலிருந்து அவர்கள் எப்படி நீச்சல் போட்டு வெளியே வருகிறார்கள் என்பது பற்றியதாக இருந்தது. அதே நேரத்தில் இந்த சீரியலில் வில்லனாக குணசேகரன் கேரக்டரில் நடிகர் மாரிமுத்து நடித்து வந்தார்.

அவருடைய பெர்ஃபார்மன்ஸ் மற்றும் பேச்சுத்திறமை தனித்துவம் காரணமாக அனைத்து ரசிகர்களும் வீட்டில் ஒருவர் போல பார்க்கத் தொடங்கி விட்டனர். சின்னத்திரை வரலாற்றிலேயே முதல்முறையாக வில்லனை ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் செய்தது இந்த சீரியலில் மட்டும் தான். இந்த சீரியலில் கதாநாயகி அமைதியின் சொரூபமாக அடிக்கடி பிளான் போட்டுக் கொண்டிருப்பார் ஆனால் எல்லாமே பல்பு கிடைத்துக் கொண்டிருந்தது. இதுவும் ரசிகர்களுக்கு குணசேகரன் மீது தனி மரியாதை உருவாக காரணமாக மாறிவிட்டது.

Ethirneechal Serial The characters disappearing one after another is it all for this?

பொதுவாக ரசிகர்களின் மத்தியில் ஹீரோ தான் ஜெயிக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கும். ஆனால் எதிர்நீச்சல் சீரியலில் தான் ஒவ்வொரு முறையும் வில்லன் ஜெயிப்பதை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். வில்லன் கஷ்டப்பட்டதை கூட தாங்க முடியாமல் பீல் பண்ணிய நிகழ்வும் உண்டு .அதாவது ஜீவானந்தம் கம்பெனியிலிருந்து குணசேகரனை குண்டு கட்டாக தூக்கி வெளியே போட்ட போது பலர் மீம்ஸ்கள் வெளியீட்டு குணசேகரனுக்கு தான் சப்போர்ட் செய்து கொண்டிருந்தனர்.

இப்படி இருக்கும் இந்த சீரியலில் இப்போது பல கேரக்டர்கள் அடுத்தடுத்து காணாமல் போய்க்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் எபிசோட்டில் இப்போது சண்டை சச்சரவுகள் தான் அதிகமாக இருக்கிறது. குணசேகரன் ஆக நடித்து வந்த நடிகர் மாரிமுத்து திடீரென்று மாரடைப்பால் காலமானார். இது ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதிலிருந்து ரசிகர்களின் மனதை மாற்ற சீரியல் தரப்பினர் கதையில் வேகம் வைத்திருக்கின்றனர்.

Ethirneechal Serial The characters disappearing one after another is it all for this?

அதாவது குணசேகரன் ஈஸ்வரி மற்றும் தன்னுடைய குழந்தைகள் பேசியதை கேட்டு கோபத்தில் கடிதம் எழுதி வைத்து தன்னுடைய சொத்தையும் தன்னுடைய தம்பி பெயருக்கு மாற்றி விட்டு வீட்டை விட்டு கிளம்பி போனது போன்று காட்சி வைத்திருக்கின்றனர். அதே நேரத்தில் குணசேகரன் ஆக இனி யார் வருவார் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது. இந்த நிலையில் குணசேகரன் பிளான்படி கோவில் திருவிழாவை நடத்தி அதில் பட்டம்மாள் மற்றும் ஜீவானந்தத்தை போட்டு தள்ள வேண்டும் என்று தன்னுடைய தம்பிகளுக்கு கட்டளை போட்டு இருக்கிறார்.

அதே நேரத்தில் சில தினங்களாக எதிர்நீச்சல் சீரியலில் பட்டம்மாள் கேரக்டர் எங்கே போனார் என்று தெரியவில்லை. ஏற்கனவே நந்தினி கேட்டரிங் பிசினஸ் செய்வது வீட்டில் தெரிய வந்தபோது அங்கு ஜனனியும் காணவில்லை. ஜனணியும் இரண்டு நாள் எபிசோட்டில் காணாமல் போயி கடைசி நேரத்தில் வந்து ஆஜராகி இருந்தார். அதுபோல இப்போது சில தினங்களாகவே சக்தியும் எங்கே போனார் என்று தெரியவில்லை. வீட்டில் இவ்வளவு பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும்போது சக்தி எங்கே போனார் என்பதை தேட வேண்டியது இருக்கிறது.

Ethirneechal Serial The characters disappearing one after another is it all for this?

காரணம் குணசேகரனை பார்க்க போயிட்டு திரும்பி வந்த ஞானமும் கதிரும் வீட்டில் பெண்களை பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஒரு பக்கம் விசாலாட்சி தன்னுடைய மகன் வீட்டை விட்டு போவதற்கு காரணம் மருமகள்கள் தான் என்று அவர்களை கடுமையான வார்த்தைகளால் வசைப்பாடிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் இந்த வீட்டில் 40% ஷேர் வைத்துக்கொண்டு கம்பீரமாக சுற்றிக் கொண்டிருந்த அப்பத்தா எங்கே போனார் என்பது கேள்விக்குறி.

அதே நேரத்தில் பலரும் எதிர்நீச்சல் சீரியலில் இப்போது சண்டை சச்சரவுகளும் கத்தல்களும் தான் அதிகமாக இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். இதற்கு காரணம் வீட்டு பெண்கள் தன்னுடைய புருஷனாலும், மாமியாராலும் அதிகமான பிரச்சனைகளை அனுபவித்து இனி அதிலிருந்து யாருடைய துணையும் இல்லாமல் வெளியே வருவது தான் அடுத்த வார கதையில் தொடங்க இருக்கிறது என்று தெரிகிறது.

இதுவரைக்கும் எத்தனையோ கொடுமைகளை எதிர்நீச்சல் குடும்பப் பெண்கள் அனுபவித்து இருந்தாலும் இப்போது உடல் அளவிலும், மனதளவிலும் அதிகமான அசிங்கத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இதுவெல்லாம் இனி தேவை இல்லை என்று மொத்தமாக தூக்கி போட்டு தைரியமாக முடிவெடுக்க போகிறார்கள். ஏற்கனவே தாரா மற்றும் தர்ஷினி கூட நீங்கள் இந்த வீட்டை விட்டு வெளியே போங்கள் அப்போதுதான் இவர்களுக்கு உங்களுடைய அருமை தெரியும் என்று கூறி இருக்கின்றனர். இன்னும் ஒரு சில நாட்களில் அதுதான் நடக்கப் போகிறது.

ஈஸ்வரியை தொடர்ந்து மாட்டிய ரேணுகா.. பட்டம்மாள் சாவு பற்றி பேசிய கதிர்.. அடித்து துரத்திய ஞானம்

எல்லாவற்றுக்கும் அப்பாத்தாவும் ஜனனியும் வழிநடத்துவார்கள் என்று ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா மூவரும் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில் இனி அப்பத்தாவிற்கு பிரச்சனை வரும்போதுதான் நம்மை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று இவர்கள் முடிவெடுக்க போகிறார்கள். அத்தோடு இந்த சீரியல் இன்னும் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்ப்போம் கதை எப்படி பயணிக்க போகிறது என்பதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+