ஈஸ்வரியை தொடர்ந்து மாட்டிய ரேணுகா.. பட்டம்மாள் சாவு பற்றி பேசிய கதிர்.. அடித்து துரத்திய ஞானம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 29ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் குணசேகரனை நினைத்து விசாலாட்சி அழுது கொண்டு இருக்க பட்டமாளை பற்றி கதிர் உளறி விடுகிறார்.

அதே நேரத்தில் ரேணுகா, ஞானத்திடம் மாட்டி விடுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் கதை வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்க்க முடியாத வகையில் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அடுத்த குணசேகரன் யார் அவர் வருவாரா? இல்லையா? என்பது போன்ற கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இருக்கிறது.
குணசேகரன் வீட்டை விட்டு வெளியே போன பிறகு வீட்டில் கதிர், ஞானம், விசாலாட்சி மூன்று பேரும் மொத்தமாக மாறி இருக்கின்றனர். கதிர் குணசேகரனின் கேரக்டரில் பல மடங்காக பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே நந்தினி கேட்டரிங் சர்வீஸ் செய்து கொண்டிருப்பது வீட்டிற்கு தெரிய வந்திருந்தது.

அது போன்று நேற்றைய எபிசோடில் ஈஸ்வரி காலேஜ் வேலை பார்ப்பதும் தெரிய வந்திருந்த நிலையில், வீட்டு மருமகள்களை விசாலாட்சி கடுமையான வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் குணசேகரன் இருக்கும் இடத்தை பற்றி ஜீவானந்தம் தனக்கு தெரிந்த விஷயங்களை சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது இன்றைய எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் விசாலாட்சி "குணசேகரனை பார்க்காமலே கண்ணை மூடிருவேன்னு பயமா இருக்குடா" என்று சொல்ல, அதற்கு கதிர் "பெரிய தல நீ எல்லாம் கிடையாது. அந்த பட்டம்மாள் தான் மண்டைய போட போகுறா" என்று கெத்தாக சொல்கிறார். அதைத் தொடர்ந்து ரேணுகா தலைமுடியை பிடித்து மாடியில் இருந்து ஞானம் தரதரவென்று கீழே இழுத்துக் கொண்டு வந்து அப்படியே ஓடிவிடு என்று விரட்டுகிறார். அதற்கு ரேணுகா சத்தியமா இதுக்கெல்லாம் நீ அனுபவிப்படா என்று கதறி அழுகிறார்.

அதைத்தொடர்ந்து ஜான்சி ராணி அண்ணன் மட்டும் வீட்டுக்கு வந்து மறு தாலிய கட்ட வைக்கட்டும். அதுக்கு பிறகு நடக்கிறதை பாரு என்று சொல்ல, அதற்கு கரிகாலன் "அவா தான் நம்ம வழிக்கு வர மாட்டுக்காலே" என்று சொல்கிறார். அதற்கு ஜான்சி ராணி, "அப்புறம் பாத்துக்கலாம் டா அத" என்று சொல்லிக் கொண்டிருக்க இதையெல்லாம் கேட்டு ஜனனி அதிர்ச்சி அடைந்து நிற்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசொட்டில் என்ன பிரச்சனை வெடிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications