அதான் சீரியலை முடிக்க போறோமே இப்போ சந்தோஷமா? ஆதங்கப்பட்ட எதிர்நீச்சல் நடிகை.. ரசிகர் கேட்ட கேள்வி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் வரும் ஜூன் 8-ம் தேதியோடு முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த சீரியல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த ரசிகருக்கு இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சத்யபிரியா கொடுத்த பதில் தான் இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வகையில் சன் டிவியில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியல் பெரிய அளவில் சின்ன திரையில் புரட்சியை ஏற்படுத்தியது. சீரியல் இதுவரைக்கும் பார்க்காத ஆண்கள் கூட இந்த சீரியலை விரும்பி பார்க்கத் தொடங்கினர். இதனாலேயே இணையத்தில் இந்த சீரியலுக்கு அதிகமான பாராட்டுகளும் குவிந்து வந்தது.

ஆனால் இந்த சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு சீரியல் கதை வேறு விதமாக பயணிக்க தொடங்கியது. புதியது புதியதாக பல கேரக்டர்கள் சீரியலில் அறிமுகப்படுத்தப்பட்டனர். அதனால் சீரியலில் தொடர்ச்சி இல்லாமல் இருக்கிறது என்பது ரசிகர்களின் அதிர்ச்சியாக இருந்தது. அதோடு சீரியலின் கதையும் பல மாதங்களாகவே இழுத்து கொண்டு இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் வெளியானது. அதோடு அதை உறுதி செய்யும் வகையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ச்சியாக இந்த சீரியலில் நடிக்கும் போது எடுத்த புகைப்படங்களையும் தங்களுடைய மெமரிகளாக பலர் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகை சத்யபிரியா அதாவது எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் சீரியல் முடிவடைய போகிறதா என்று கேட்ட கேள்விக்கு ஆமாம் என்று சொல்லி இருந்தார். அதுபோல லேட்டஸ்ட் ஆக ஒரு பதிவு ஒன்று வெளியாகி இருக்கிறது. அது எதிர்நீச்சல் சீரியல் முடிவடைய போகிறது என்ற போஸ்ட் தான்.
அந்த பதிவுக்கு கீழே athivik2311 என்ற ஐடியில் இருந்து, "பட்டம்மாள், மாரிமுத்து கதாபாத்திரம் இல்லாத சீரியல் நிஜமாவே நல்லாவே இல்ல. செம மொக்க சீரியல்.. ஆரம்பத்துல இருந்த விறுவிறுப்பு அந்த மாரிமுத்து சிஸ்டர் மேரேஜ்க்கு அப்புறம் சுத்தமா இல்ல" என்று ஒரு கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதற்கு சத்யபிரியா, "அதான் முடிக்கிறோமே சந்தோஷமா?" என்று ஆதங்கத்தோடு பதில் கொடுத்திருக்கிறார்.

இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. அதே நேரத்தில் எதிர்நீச்சல் சீரியல் முடிவு குறித்து இந்த சீரியலின் தீவிரமான ரசிகர்கள் பீல் பண்ணி வருவதையும் பார்க்க முடிகிறது. ஆனாலும் எதற்காக இந்த சீரியல் இவ்வளவு சீக்கிரமாக முடிவுக்கு வரப்போகிறது என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது. கடந்த வாரத்தில் இந்த சீரியல் டி ஆர் பி யில் ஐந்தாவது இடத்திற்கு போனது காரணமா? என்று கேட்கப்பட்டாலும் இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் டிஆர்பியை பெரிதாக கருத்தில் கொள்வது கிடையாது.
ஆனால் வேற ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று தெரிகிறது. ஆனால் அது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. ஆனாலும் இந்த சீரியல் முடிவடைந்ததும் இதைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் வரப்போகிறதா இல்லையா என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கும் நிலையில் அது குறித்து பொறுத்து இருந்து பார்ப்போம். இந்த சீரியல் முடிவு குறித்து உங்களுடைய கருத்து என்ன? அதே நேரத்தில் நடிகை சத்யபிரியா கோபப்பட்டது சரிதானா? என்ற கருத்தை சொல்லிட்டு போங்க.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications