எதிர்நீச்சல் "டாப்” டிஆர்பிக்கு காரணம் இதுதான்.. கடைசியில் இப்படியா..!? சீக்கிரம் "அதை” செய்யணும்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியல் கடந்த வாரத்தில் ஆதிரையின் திருமணத்தின் காரணமாக டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
இதுவரைக்கும் இல்லாத வகையில் முதல் முறையாக முதலிடத்தை பிடித்து இருக்கும் இந்த சீரியல் அணியினருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் இது தொடர வேண்டும் என்றால் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் ரசிகர்கள் விருப்பங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

சன் டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த சீரியல் என்று எதிர் நீச்சலுக்கு அதிகமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள். காரணம் பிற சீரியல்களை போல இல்லாமல் இங்கே பெண் அடிமைத்தனத்துக்கு எதிரான போராட்டங்களும் அதைப் பற்றிய விழிப்புணர்வுகளும் இருந்து வருவது தான்.
இந்த நிலையில் சில மாத காலமாகவே ஆதிரை திருமண பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடைசி நேரத்தில் ஆதிரை கழுத்தில் கரிகாலன் தாலி கட்டியது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அந்த ப்ரோமோ யாரும் எதிர்பார்க்காத வகையில் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்து வந்தது. அது போல அந்த எபிசோடும் டிஆர்பி யில கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் முதலிடத்தை பிடித்திருக்கிறது.
அதற்கு காரணம் ஒன்று பல பேர் ஆசைப்பட்ட மாதிரி ஆதிரைக்கு கரிகாலன் தாலி கட்டி விட்டார் என்பதாக இருந்தாலும் இன்னொன்று ஆதிரை அந்த தாலியை கழட்டி வீசிவிட்டு அருணை திருமணம் செய்து கொள்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பார்த்தபடி கடைசியில் முடிவு அமையவில்லை என்பது பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அந்த எபிசோடு முடிந்து சில நாட்கள் ஆன பிறகும் அதிலிருந்து மீளாமல் அது பற்றி கமெண்டுகளில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது அதுபோல ஆதிரை திருமணம் முடிந்ததும் சீரியல் விறுவிறுப்பு அதிகரித்து இருக்கிறது. ஆதிரையின் திருமணத்தில் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்தது போல, அதை தொடர்ந்து இப்போ டிஆர்பியில் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதில் சீரியல் குழுவினர் கவனமாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதனால் தான் வேக வேகமாக பட்டமாள் ஷேர் பற்றிய பேச்சை எடுக்க தொடங்கி இருக்கின்றனர். அதே நேரத்தில் ஜனனியும் வீட்டை விட்டு சக்தியோடு வெளியேறி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் சக்தி ஜனனிக்கு முழு சப்போர்ட் இனி நான் கொடுப்பேன் என்று தைரியம் கொடுத்திருக்கும் நிலையில், ஜனனியை மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்று ஆடிட்டர் குணசேகரிடம் கூறியிருப்பதால் இனி குணசேகரன் என்ன மாதிரியான நாடகம் போடப்போகிறார்? சக்தி மீண்டும் வீட்டுக்குள் வருவாரா? இல்லையா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
அதே நேரத்தில் ஜீவானந்தம் பட்டம்மாள் கைரேகை எடுத்திருப்பதால் அதை குறித்த ரகசியமும் சீக்கிரமாக வெளியே வந்தால் இன்னும் இந்த சீரியல் சூடு பிடிக்கும். இதே முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பது தான் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனாலும் பொருத்திருந்து பார்ப்போம் அதை எப்படி போகப்போகிறது என்பதை...
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications