மீண்டும் வீட்டிற்கு வந்த விசாலாட்சி.. கரிகாலனை பாடாய்ப்படுத்தும் மாமியார்.. எதிர்பாராத திருப்பம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் வந்த பிறகு குணசேகரன் மட்டுமல்லாமல் மொத்த குடும்பமும் ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.
ஜீவானந்தத்திடமிருந்து இனி குணசேகரன் எப்படி சொத்துக்களை திரும்ப பெற போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கிறது.
இந்த நிலையில் காசிக்கு போயிருந்த குணசேகரனின் அம்மா மீண்டும் வீட்டிற்கு வந்து கரிகாலனை அடுத்தடுத்து வேலை சொல்லி பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல் நகர புறங்களிலும் இந்த சீரியலுக்கு அமோகமான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் இந்த சீரியலில் குறித்து தொடர்ச்சியாக பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

நடிகர்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகர்களும் கூட எதிர்நீச்சல் சீரியலின் கதை குறித்தும் எதிர்நீச்சல் நடிகர்கள் குறித்தும் பாராட்டிக் கொண்டிருப்பதால், சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் இந்த சீரியல் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் இப்போது அடுத்தடுத்த எதிர்ப்பாராத திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் சற்று எதிர்பாக்காத வகையில் நடந்து முடிந்தது.
அதைத்தொடர்ந்து இப்போது குணசேகரனின் சொத்துக்களை ஜீவானந்தம் தன்னுடைய பெயருக்கு மாற்றி அடுத்த அதிர்ச்சியை குடும்பத்திற்கு கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் ஆதிரையின் திருமணம் முடிவடைந்ததும் மனது சரியில்லை என்று காசிக்கு சென்று இருந்த விசாலாட்சி இப்போது மீண்டும் வீட்டிற்கு திரும்பி இருக்கிறார்.

இனி விசாலாட்சி வரும் எபிசோடு நாளை ஒளிபரப்பாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் கரிகாலனோடு விசாலாட்சி எடுத்த ரீல்ஸ் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் விசாலாட்சியாக நடிக்கும் சத்யபிரியா அவர் நடித்த லேசா லேசா திரைப்படத்தில் இருந்து சுடு தண்ணீர் வைக்க சொன்னேன் வச்சியா? என்று கேட்க,
அதற்கு கரிகாலன் சுடுதண்ணி வைக்க போது தானே சிப்ஸ் வாங்கிட்டு வர சொன்னிங்க.. என்று சொல்ல, அதற்கு சத்யபிரியா அடுத்தடுத்து வெளியே வேலை சொல்வது போன்றும், அதற்கு குடையைப் பிடித்துக் கொண்டு கரிகாலன் எந்த வேலையும் செய்யவில்லை என்பதை போன்றும் அந்த ரீல்ஸ் வீடியோவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications