எதிர்நீச்சல்: குணசேகரின் அண்ணன் பற்றிய ரகசியத்தை உடைத்த விசாலாட்சி.. வீட்டை விட்டு கிளம்பிய கதிர்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் குணசேகரனின் அண்ணன் பற்றி முதல் முறையாக விசாலாட்சி பேசியிருக்கிறார்.
அதைக் கேட்டு கதிரும், ஞானமும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். அதைத் தொடர்ந்து குணசேகரனை தேடுவதற்காக கதிரும் ஞானமும் வீட்டை விட்டு கிளம்ப விசாலாட்சி தடுக்கிறார்.

அதற்கு கதிர் விசாலாட்சியை திட்டுகிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்த நிலையில் நேற்று எபிசோடில் விசாலாட்சி, கதிர், ஞானம் மூவரும் எங்கே போனார் என்று தெரிந்து கொள்வதற்காக ஜோதிடரிடம் குணசேகரனின் ஜாதகம் எழுதிய ஓலை சுவடியை கொண்டு சென்றிருந்தனர். அப்போது அவர் பார்த்துவிட்டு குணசேகரன் விசாலாட்சிக்கு இரண்டாவதாக தான் பிறந்திருக்க வேண்டும். அவரோடு பிறந்தவர்கள் மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி என்று சொல்ல அதைக் கேட்டு கதிரும், ஞானமும் அதிர்ச்சி அடைந்திருந்தனர்.

அப்படி இல்லை என்று கதிரும் ஞானமும் சொல்ல, இல்லை அதை உங்க அம்மா வாயால சொல்லட்டும் என்று ஜோதிடர் சொல்ல, அதற்கு ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான். குணசேகரனுக்கு முன்பு ஒரு ஆம்பள புள்ள பிறந்து ஹாஸ்பிடல் இறந்து போச்சு என்று சொல்லி, இந்த விஷயம் குணசேகரனுக்கு கூட தெரியாது அதை நாங்கள் பெருசு படுத்தல என்று விசாலாட்சி சொல்கிறார்.
அதைத் தொடர்ந்து குணசேகரன் எங்கே இருக்கிறார் என்பது போன்ற ஒரு சில விஷயங்களை ஜோதிடர் சொல்ல அதைக் கேட்டுவிட்டு வீட்டிற்கு மூவரும் வருகின்றர். வீட்டில் ஜான்சி ராணி, நந்தினி ஓட பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து அங்கே வழக்கம் போல சண்டை போட்டுவிட்டு கதிர் பேக்கை கையில் தூக்கிக்கொண்டு குணசேகரனை தேடி போக போறேன் என்று சொல்கிறார்.

அதைக் கேட்டு அதிர்ச்சியான விசாலாட்சி யப்பா என்னை தேடக்கூடாதுன்னு குணசேகரன் சொல்லிட்டு போயிருக்கான். அப்போ நம்ம தேடி போறது தெரிஞ்சா அவன் என்ன முடிவு எடுக்க போறான்னு தெரியலையே என்று சொல்ல, அதற்கு கதிர், உன்ன பற்றி அண்ணன் சொல்ற மாதிரி தான் எனக்கு சிந்தனை வருது நீ தான் உண்மையில் எங்களை பெத்தியா என்று எனக்கே கேள்வி வருகிறது.
ஒருத்தன் வீட்டை விட்டு கோவிச்சுட்டு போனா அவன் வர்ற வரைக்கும் வரட்டும் என்று நீ அமர்ந்து இருப்பியா? என்று திட்டி விட்டு, கதிரும் ஞானமும் கிளம்புகின்றனர். அப்போது ஞானம் ஆமா கதிர் சொல்றது சரிதான். அண்ணா எங்கு இருந்தாலும் எப்படியும் கதிரிடம் பேசி விடுவார். ஆனால் இப்போ அதுவும் செய்யவில்லை. அதனால் எங்களுக்கு பயமாக இருக்கிறது. கதிர் சொன்ன மாதிரி நாங்க தேடி பாக்க போறோம் என்று வீட்டை விட்டு கிளம்பி போகின்றனர். இந்த நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications