எதிர்நீச்சல் சொதப்பல்.. கதாநாயகிகளின் கண்களுக்கு “இது” கூட தெரியலையா? இதை கவனிச்சிருக்கலாமே?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பியின் அடிப்படையில் டாப் 10 இடத்தில் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது.

தொடர்ச்சியாக இந்த சீரியலில் அடுத்தடுத்த பல திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது.

Ethirneechal Serial we will see in detail what happened in yesterdays episode

அதே நேரத்தில் இந்த சீரியலில் சில சொதப்பல்களும் நேற்றைய எபிசோடில் நடந்தது அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சின்னத்திரையில் அதிகமான ரசிகர்களால் உச்சரிக்கப்படும் சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் உருமாறிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல் ஆரம்பத்திலிருந்ததை விடவும் இப்போது நாட்கள் செல்ல செல்ல அதிகப்படியான ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் பலருக்கும் இருக்கிறது.

அதுபோல எதிர்நீச்சல் சீரியல் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருவதால் பலரால் இந்த சீரியல் பார்க்க முடியவில்லை என்று கூறி வருகின்றனர். குறிப்பாக இந்த சீரியல் நகரப்புறங்களில் அதிகமான டிஆர்பியை பெற்று வருகிறது. அதே நேரத்தில் கிராமப்புறங்களில் டிஆர்பியில் பின்தங்கி இருப்பதற்கு காரணம் இதுவும் கூட தான். காரணம் கிராமப்புறத்தில் அதிகமாக யாரும் ஒன்பது மணிக்கு பிறகு டிவி பார்ப்பதில்லை.

அதனால் தான் இந்த வாரத்தில் கூட நகர்ப்புறத்தில் டாப் 10 இடத்தில் எதிர்நீச்சல் சீரியல்தான் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இப்படியாக அதிகமான வரவேற்பு பெற்று வரும் எதிர்நீச்சல் சீரியலில் சில சொதப்பல் நேற்றைய எபிசோட்டில் நடந்தது. அது குறித்து விரிவாக பார்க்கலாம். குணசேகரன் ஜீவானந்தம் பட்டமாளின் சொத்துக்களை தன்னுடைய பெயருக்கு மாற்றியதால் நெஞ்சுவலி வந்து ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன போது தனக்கு ஒரு கையும் காலும் விளங்கவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் அதற்கு பிறகு நன்றாகத் தான் நடந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் இதுவரைக்கும் ஒரு கை மட்டும் செயல்படாத மாதிரி நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் குணசேகரன் கை நன்றாகத்தான் இருக்கிறது என்பது கதிருக்கு மட்டுமே தெரியும். ஆனால் நேற்றைய எபிசோடில் அப்பத்தாவை காணாமல் குணசேகரன் தேடிக் கொண்டிருக்கும்போது அனைவரிடமும் அவர் செயல்படவில்லை என்று சொன்ன கையை நீட்டி நீட்டி பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் வீட்டில் இருப்பவர்கள் யாரும் இதை பற்றி யோசிக்கவும் இல்லை அது குறித்து கேள்வி கேட்கவும் இல்லை.

குணசேகரன் அப்பத்தாவை தேடிக் கொண்டிருக்கும்போது ஞானம் குணசேகரன் பின்னாடியே போய்க்கொண்டிருக்கிறார். ஆனால் அவரும் இதை கவனிக்கவில்லை. அதுபோல குணசேகரன் கேள்விகளுக்கு நந்தினி மற்றும் ரேணுகா இருவரும் கவுண்டர் கொடுக்கின்றனர். ஆனால் அவர்களும் இதைக் கண்டு கொள்ளவில்லை. இதற்கெல்லாம் ஹைலைட் கதாநாயகி ஜனனி இடமும் குணசேகரன் கையை நீட்டி பேசுகிறார். ஆனால் ஜனனியும் அது குறித்து பேசவே இல்லை.

அப்பத்தா கோமாவில் இருந்து முழித்தது பற்றி சீரியலில் கதை வேகம் எடுக்க வைத்த இயக்குனர் குணசேகரன் கை செயல்படாது என்பதை மறந்து விட்டார அல்லது "நடிப்பு அரக்கன்" குணசேகரன் தன்னுடைய கை செயல்படாது என்று நடித்துக் கொண்டிருப்பதை மறந்து விட்டாரா? என்பது தெரியவில்லை. ஆனால் இதை கண்டிப்பாக ரசிகர்கள் கவனித்து இருப்பார்கள். பார்க்கவில்லை என்றால் நேற்றைய எபிசோடு பார்த்தால் புரியும்.

அதுபோல நேற்றைய எபிசோடில் வீட்டு வாசலில் சக்தி மற்றும் ஈஸ்வரி தனித்தனியாக ஒவ்வொரு பக்கத்தில் நின்று கொண்டிருப்பார். வீட்டிற்குள் குணசேகரனுக்கும் ஜனனிக்கும் வாக்குவாதம் நடக்கும் போது கூட தாங்கள் நின்ற இடத்தை விட்டு நகராமல் நின்று கொண்டிருந்தனர். (ஒரே இடத்தில் அவர்கள் நிற்பது போன்று காட்டப்பட்டது) காலையில் நிற்க தொடங்கியவர்கள் இரவு வரைக்கும் அதிலேயே நின்று கொண்டிருந்தார்கள் என்பதும் சீரியல் பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும்.

இதுவரைக்கும் ஈஸ்வரிதான் ஒழுங்காக சூட்டிற்கு வருவதில்லை அதனால் அவரை தனியாக ஷார்ட் எடுத்து அவர் சீரியலில் இருப்பது போன்றே காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் நேற்று சக்திக்கும் அந்த நிலைமைதான் என்பது எபிசோட்டில் அபத்தமாக தெரிந்தது

அதுபோல அம்மை போட்டிருந்த சக்தியை கவனித்துக் கொண்ட ஈஸ்வரி நேற்று அவ்வளவு கலவரம் நடக்கும் போதும் வீட்டிற்குள் வராமல் இருந்த நிலையில் கடைசியில் ஜனனி நந்தினி மற்றும் ரேணுகாவோடு கிச்சனில் பேசிக் கொண்டிருக்கும் போது வீட்டிற்குள் வந்து அவர்களுடன் பேச்சு கொடுக்கிறார். இதனால் ஈஸ்வரி பல நாள்களுக்கு பிறகு நேத்துதான் சூட்டிங்கு வந்திருந்தாரா? என்றும் கேள்வி எழுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+