கத்துக்கிட்ட எல்லாமே மறந்துடுச்சு.. உற்றுப்பார்த்தும் ஆள் அடையாளம் தெரியல, பாவம் பானுப்ரியா: பிரபலம்
சென்னை: நடிகர்கள் அல்லது நடிகைகள் என யாராக இருந்தாலும், சினிமாவில் தொடர்ந்து பிசியாக இருந்துவிட்டு, திடீரென படவாய்ப்புகள் குறைந்துவிட்டால், வீட்டிற்குள்ளேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுவிடும். இது கிட்டத்தட்ட அந்தமான் ஜெயிலில் அடைந்து கிடப்பது மாதிரியாகும்.. அந்த அளவுக்கு மன அழுத்தத்தை சம்பந்தப்பட்டவர்களுக்கு தந்துவிடும். பீல்டு அவுட் ஆனவர்களுக்கு, பெரும்பாலும் மன இறுக்கம் வந்துவிடுகிறது. அந்தவகையில், பிரபல நடிகையும் பானுப்ரியாவும் வீட்டிலேயே முடங்கிவிட்டார் என்று பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.
Aagayam cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப், "சைதை தமிழரசி கேரக்டரில் மேடையில் சோடா பாட்டிலை சுழற்றிக் கொண்டே வசனம் பேசி அனைவரையும் திகைக்க வைத்தவர் பானுப்பிரியா.. ஆனால், இன்று சாதாரணமாக பேசுவதற்கே திணறுகிறார்.. மறதிநோயால் அவதிப்படுகிறார்.

படவாய்ப்புகள் குறைவு
பரபரப்பாக இருந்துவிட்டு, திடீரென ஒரே அறையில் அடைந்துவிடுவது சிரமமான விஷயம்.. இது மனதில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.. அன்று 90கள் காலகட்டத்தில், ஒருமுறை ஜெய்சங்கர், "ஏம்ப்பா, படம் இருந்தால் ஏதாவது சொல்லுங்க, நடிக்கிறேன், வீட்டிலேயே குடிச்சே செத்துருவேன் போல" என்றார்..
சினிமா வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் எத்தனையோ நடிகர், நடிகைகள், இதற்காகவே வெளியில் வர மாட்டார்கள்.. இரவு நேரத்தில்தான், 10 மணிக்கு மேல், பொதுமக்களுக்கு அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வேறு மாதிரியான உடைகளை அணிந்துதான் சினிமா, ஓட்டல்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது..
கண்ணழகி நடிகை
அதுபோல, கண்ணழகி என்று அனைவராலும் போற்றப்பட்டவர் பானுப்ரியா.. திருமணம் முடிந்து 10 வருடங்களுக்கு பிறகு தம்பதிக்குள் பிரிவு வந்துவிட்டது. விவாகரத்துக்கு பிறகு மன உளைச்சலும் பானுப்பிரியாவுக்கு ஏற்பட்டது. 5 வருடங்கள் கழித்து பிரிந்து போன கணவரும் மாரடைப்பால் இறந்துவிட்டார்.. 2 சீரியல்களிலும், சில படங்களிலும் நடித்தார்.. ஆனாலும், மறதியில் தவிக்கிறார்.
இன்று யாராவது அவரிடம் பேசினால், கண்களை அகல விரித்து, நீங்களா? யாரு? என்பதுபோல யோசித்து, பிறகு அவர்களை நினைவுக்கு கொண்டு வருகிறார்.. பழைய நண்பர்கள், தன்னுடன் நடித்த நடிகர், நடிகைகளுடன் தொடர்ந்து பேசிக்கொண்டே வந்திருந்தால், இப்படியொரு பாதிப்பு வந்திருக்காது..
மன அழுத்தம்
தன்னுடைய நண்பர்களுடன் பழைய நினைவுகள் கலந்து பேசும்போது, மன இறுக்கம் வந்திருக்காது.. பேச முடியாத அளவுக்கு இன்று வளர்ந்துள்ள இந்த சூழலும் அன்றே தவிர்க்கப்பட்டிருக்கும். அப்படியே பானுப்ரியா பேசினாலும், தன்னிடம் பேசும் நபர், யாரென்று தெரியாமல் சில நொடிகள் மறந்துவிடுகிறார்.. கணவரின் விவாகரத்து, அவரது இறப்பு, தனிமை, பட வாய்ப்புகள் குறைவு, வீட்டிலேயே அடைந்து கிடப்பது போன்ற காரணங்களால், இப்படியான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம்.
இன்று ஒரு நடிகை சேலை அணிந்துகொண்டு, 3 சரணம் கொண்ட தனிப்பாடலில் நடித்தால், அதை எத்தனை பேர் ரசித்து பார்ப்பார்களோ தெரியாது. ஆனால், பானுப்பிரியா "மாலையில் யாரோ" என்ற சோலோ பாட்டு 3 சரணம் கொண்டது. அதில், பீச்சோரத்தில் சேலையில் அழகுடன் நடித்திருந்தார்.. கேமராமேனும் அழகியலுடன் அந்த பாடலை ரசித்து எடுத்திருந்தார்.. அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டானது" என்று தெரிவித்துள்ளார்.
பானுப்பிரியா பேச்சு
சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பானுப்ரியா குறித்து பேசும்போது, "நேரம் தவறாமை, காலம் தவறாமை போன்றவற்றில் நல்ல பெயரை பெற்றவர் பானுப்பிரியா.. சொந்த படம், ரியல் எஸ்டேட், தம்பியை ஹீரோவாக வைத்து படம் எடுத்து, மொத்த சொத்துக்களும் போய்விட்டது. கடைசியில் நினைவாற்றலும் போய்விட்டது. இதனால் டயலாக் பேச முடியாமல் அவமானப்பட்டுள்ளார்..
"இந்தம்மாகூட ஏன் எங்களை நடிக்க வெக்கறீங்க? ஒன்னு அவங்களை மாத்துங்க, அல்லது எங்களை மாத்துங்க" என்று சூட்டிங்கில் இருந்தவர்கள் சொல்ல, பானுப்பிரியா அதைக்கேட்டு கண்ணீரோடு வெளியேறினார்.
அன்றைய காலங்களில் தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம்வந்து, இன்று அனைத்தையும் இழந்து அனாதையாக நிற்கிறார் பானுப்பிரியா.. சினிமாவில் எத்தனையோ நடிகைகள் பாவம்.. நடிகைகள் சாவித்திரி பாவம், சில்க் பாவம், ஷோபா பாவம், பானுப்பிரியாவும் பாவம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தெலுங்கு சேனலுக்கு ஒரு பேட்டியில் "2 வருடங்களாக ஞாபக மறதியால் அவதிப்படுகிறேன்.. நினைவாற்றல் குறைபாடு காரணமாக ஒரு வருடத்தில் இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே நடிக்க முடிகிறது . இப்போதெல்லாம் எனக்கு உடல்நிலை அவ்வளவு சரியில்லை. கற்றுக்கொண்ட விஷயங்களை எல்லாம் மறந்துவிடுகிறேன். இனி எனக்கு நடனத்தில் ஆர்வம் இல்லை. வீட்டில்கூட நடனம் பயிற்சி செய்வதில்லை" என்று கூறியிருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications