அறிவு கெட்ட முண்டமே.. சரிதாவுக்காக காத்திருந்த 2 விஐபி.. மிஸ்ஸான தேசிய விருது! மூன்றாம் பிறை ரகசியம்
சென்னை: இந்தி நடிகைகளையே மிஞ்சக்கூடிய அளவுக்கு நடிப்பை சரிதாவுக்கு பாலச்சந்தர் உருவாக்கி தந்திருந்தார்.. பாலச்சந்தர் என்ற பட்டறையில் நடிப்பு தீட்டப்பட்ட வைரமாக ஜொலித்தார் சரிதா.. ஆனால், பாலச்சந்தருக்கு கோபம் வந்துவிட்டால், அறிவுகெட்ட முண்டமே என்பதை சுருக்கி "அகெமு" என்றுதான் சரிதாவை திட்டுவார்" என்று தமிழா தமிழா பாண்டியன் கூறியிருக்கிறார்.
Behindwoods யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அதில், நடிகை சரிதாவின் நடிப்பு திறமை பற்றி பெருமைபட பேசியிருக்கிறார்..

சரிதாவின் இயற்பெயர் அபிலாஷா.. சினிமாவுக்காக பாலச்சந்தர் வைத்த பெயர்தான் சரிதா.. "மரோசரித்ரா" என்பதுதான் சரிதாவின் முதல் படம். இந்த முதல் படமே சரிதாவை மிகப்பெரிய உயரத்துக்கு கொண்டு சென்றது.
கல்யாண ஆல்பத்தில் சரிதா
தமிழ் மரோசரித்ரா மற்றும் தெலுங்கு மரோசரித்ரா, என இந்த இரண்டுமே காலத்தால் அழிக்க முடியாத காவியமாகும். கருப்பாக குண்டாக இருந்தால் நடிகையாக முடியாது என்ற கலைத்துறையின் தத்துவத்தை உடைத்த நடிகைதான் சரிதா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அத்தனை மொழிகளிலும், சரிதா நடித்த படங்கள் உச்சம் தொட்டவை.
பாலச்சந்தர் பல நல்ல படங்களை சரிதாவுக்கு தந்தார்.. ஹீரோயின் வேண்டுமென்றால், அன்றைய டைரக்டர்கள் கல்யாண ஆல்பங்களைதான் பார்ப்பார்கள். அப்படி ஒருநாள் தெலுங்கு நபரின் கல்யாண ஆல்பத்தை பார்த்தபோதுதான் சரிதாவின் போட்டோவை பார்த்து அவரை நடிக்க தேர்ந்தெடுத்தார். பாலச்சந்தர் தன்னுடைய 15 படங்களில் சரிதாவை நடிக்க வைத்தார்.. அந்த 15 படங்களுமே சூப்பர் ஹிட்..
தண்ணீர் தண்ணீர்
பல தேசிய விருதுகளையும் சரிதா பெற்றிருக்கிறார் என்றாலும், மேலும் பல விருதுகள் அவருக்கு கிடைத்திருக்க வேண்டியது. தென் மாவட்ட மக்களின் குடிநீர் வறட்சியை பற்றி பாலச்சந்தர் எடுத்த படம்தான் "தண்ணீர் தண்ணீர்".. குடிநீர் பிரச்சனையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது பற்றின படமாகும்.. இது ஒரு கம்யூனிஸ்ட் படம்.
குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி முதலமைச்சரிடம் தரப்படும் கோரிக்கை மனு, அவரது செயலாளரிடம வந்து, பிறகு அமைச்சர்களிடம் வந்து, பிறகு, எம்எல்ஏ, கலெக்டர், ஆர்டிஓ, கலெக்டர் என மாறி மாறி சென்று, கடைசியில் குப்பைத்தொட்டிக்கு அந்த மனு சென்றுவிடும். இந்த படத்தில் சரிதா மிக அருமையாக நடித்திருப்பார்.. தேசிய விருது வாங்குவதற்காகவே களம் அமைக்கப்பட்ட படம் தண்ணீர் தண்ணீர்.
மிஸ்ஸான தேசிய விருது
ஆனால், இந்தி நடிகைகள் ரேகா, உமா ரோஷன் போன்றவர்களின் படங்கள் இந்திய அளவில் வெளியாக்கூடியவையாக இருந்தன. அதனால், தேசிய விருது சரிதாவுக்கு கிடைக்கவில்லை.
எனினும், இந்தி நடிகைகளையே மிஞ்சக்கூடிய அளவுக்கு நடிப்பை சரிதாவுக்கு உருவாக்கி தந்தார் பாலச்சந்தர். அவருக்கு கோபம் வந்துவிட்டால், அறிவுகெட்ட முண்டமே என்பதை சுருக்கி "அகெமு" என்றுதான் சரிதாவை திட்டுவாராம். அப்படி பாலச்சந்தர் திட்டி, 2 முறை சரிதா மயக்கம் போட்டு விழுந்துட்டாராம்..
இரு ஜாம்பவான்கள்
அதேபோல மூன்றாம் பிறை படத்தில், சரிதா நடிக்க வேண்டும் என்று விரும்பி, காத்திருந்தார் பாலுமகேந்திரா.. ஆனால், குரு விஸ்வாசம் மிக்க சரிதா, அந்த நேரத்தில் பாலச்சந்தர் படத்தில் நடித்து கொண்டிருந்தால், பாலு மகேந்திரா படத்துக்கு கால்ஷீட் தர முடியவில்லை.
இதனால் படம் எடுப்பதும் தாமதமாகி கொண்டே இருந்ததால், சரிதாவுக்கு பதில் ஸ்ரீதேவியை மூன்றாம் பிறை படத்தில் ஒப்பந்தம் செய்தார் பாலுமகேந்திரா.. அப்படி சரிதா இதில் நடித்திருந்தால் தேசிய விருதினை நிச்சயம் பெற்றிருப்பார்.. நடிப்பிலும் ஸ்ரீதேவியை மிஞ்சியிருப்பார்.
அந்தவகையில், பாலச்சந்தர், பாலுமகேந்திரா என இரு ஜாம்பவான்களும், சரிதாவின் கால்ஷீட்டுக்காகவே காத்திருப்பார்களாம்.. அப்படியொரு நடிப்புலக நாயகி சரிதா என்று கூறியிருக்கிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications