அந்தப்புரம் அம்பலம்.. கேசட் கடையில் உச்ச நடிகரிடம் சிக்கிய விஐபி மகள்.. கண் சிவந்த எம்ஜிஆர்: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1985ல் ப்ளூ பிலிம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு, நண்பர் திவாகரோடு சேர்த்து கைது செய்யப்பட்டவர் நடிகர் சுமன்.. பல சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. பிறகு, நண்பர் திவாகர் தான் அந்த தவறை செய்தார் என்று கோர்ட்டில் பல முன்னணி வக்கீல்கள் ஆஜராகி, வழக்கில் சுமனுக்கு எந்த தொடர்புமில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை ஆனார்.. இந்நிலையில், நடிகர் சுமன் யார்? அவருக்கு என்ன நடந்தது? என்பது குறித்த மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சுமனின் தாய், எத்திராஜ் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர்.. இவர்களது பூர்வீகம் கர்நாடக மாநிலத்திலுள்ள துளு. திரைப்படத் துறையில் ஆர்வம் காரணமாக, நடனம், சமஸ்கிருதம், கராத்தே முறையாக பயின்றவர் சுமன்.. ஆறரை அடி உயரம் கொண்ட ஆஜானுபானு உருவம் கொண்டவர்.

Television Actor Suman MGR

சினிமா கம்பெனிக்கு காரை வாடகைக்கு விடும் நபர் மூலம், ஒரு படத்தில் போலீஸ் அதிகாரியாக சிறிய வேடத்தில் அறிமுகமானார் சுமன். ஆனால், 1978-ல் நடித்த கருணை இல்லம் படம்தான் சுமனை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியது. பிறகு, வீட்டுக்கு வீடு வாசற்படி என்ற படத்தில் 2 நாயகர்களில் ஒருவராக நடித்தார்.

தெலுங்கில் சூப்பர் ஹிட் படங்கள்

தொடர்ந்து பல வெற்றி படங்களுக்கு பிறகு 1982-,ல் தெலுங்கில் அறிமுகமானார். தெலுங்கிலும் கொடி கட்டி பறந்தார்.. இதற்கு பிறகுதான் ஒரு பெரிய சறுக்கல் அவருக்கு வந்தது. 2 படங்கள் ஹிட் ஆகிவிட்டாலே, எதை வேண்டுமானாலும் நாம் செய்யலாம், நம்மை யாருமே கேட்க முடியாது என்ற மமதை சுமனுக்கும் வந்துவிட்டது.

அன்றைய தினம் ஆடியோ, வீடியோ கேசட்டுகள்தான் மிகவும் ஃபேமஸ்.. ஆழ்வார்பேட்டையில் சுமனின் பள்ளி நண்பர், கேசட் கடை ஒன்றை வைத்திருந்தார்.. ஆழ்வார்பேட்டை ஏரியா, இயல்பாகவே வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியாகும்.. கேசட் வாங்க வரும் பணக்கார வீட்டு பிள்ளைகள் நன்றாக பழக்கமானதுமே, அவர்களுக்கு நீலப்படம் உள்ளிட்டவைகளை, சுமனின் நண்பர் விற்பனை செய்வார்.

கேசட் கடைகள்

இந்த கடைக்கு ஆடியோ கேசட்டுகளை வாங்க வரும் பணக்கார வீட்டு இளம்பெண்களுக்கு, கூல் டிரிங்ஸ்ஸில் மயக்க மருந்து கலந்து தந்து குடிக்க வைத்துவிடுவார்கள்.. அந்த கடையின் உள்அறையிலேயே படுக்கை வசதியுடன் கூடிய இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு அப்பெண்களை வைத்து ஆபாச வீடியோக்கள் எடுத்துள்ளனர்.

மயங்கும் பெண்கள் மட்டுமல்லாமல், தங்களுக்கு மயங்காத பெண்களையும் மயங்கவைத்து உள்ளே அழைத்து சென்று, நீலப்படம் எடுத்துவிடுவார்கள் சுமனும், அவரது நண்பரும்.

இப்படி பல பெண்கள் அந்த கடையில் அன்று சூறையாடப்பட்டார்கள்.. வேட்டையாடப்பட்டார்கள்.. சிதைக்கப்பட்டார்கள்.. பெரிய வீட்டு பெண்கள், என்பதால் இதை வெளியே யாரும் சொல்ல முன்வரவில்லை. காவல்துறை உயர் அதிகாரிகளின் பெண்களும் சிதைக்கப்பட்டதாக செய்திகள் அப்போது கசிந்தது.

கொந்தளித்த எம்ஜிஆர்

அந்த வகையில், எம்ஜிஆருக்கு வேண்டிய தொழிலபதிபர், இவர் மருத்துவ கல்லூரி உரிமையாளரும்கூட.. அந்த குடும்பத்தை சேர்ந்த பெண்ணும் இதில் சுமனிடம் சிக்கினார். இந்த தகவல் எம்ஜிஆருக்கு போனதுமே கொந்தளித்து போனார்.. "யாராக இருந்தாலும் கைது செய்து சிறையிலடையுங்கள்" என்று உத்தரவிட்டார் முதலமைச்சர் எம்ஜிஆர்.

இதையடுத்து, சுமனின் பெற்றோர் இருவருமே எம்ஜிஆர் காலில் விழுந்து கதறி, மகனை காப்பாற்ற சொன்னார்கள்.. "உங்களை போல பல பெண்களின் பெற்றோர்கள் என் காலில் விழுந்து கொண்டிருக்கிறார்கள்.. அந்த பெற்றோர்களுக்கு என்ன பதில் சொல்வேன்? தவறு செய்தவர் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்" என்றார். அதன்படியே, உச்ச நடிகராக இருந்த சுமனை கைது செய்து ஜெயிலில் அடைத்தார் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர்..

ஏவிஎம்மில் ஷூட்டிங்

சுமனின் பெற்றோர், நீதிமன்றத்தில் பிரபலமான வழக்கறிஞர்களை நியமிக்கிறார்கள், தொடர்ந்து எம்ஜிஆரை சந்தித்து கெஞ்சி கொண்டேயிருந்தார்கள்.. 6 மாத காலம் சிறைக்கு பிறகு, கண்டிஷன் பெயிலில் விடுவிக்கப்பட்டார் சுமன்..

காரணம், சுமனை நம்பி பல கோடிகளை கொட்டி , படம் எடுக்க முடியாமல் காத்திருந்த தயாரிப்பாளர்கள் நஷ்டம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக, இந்த முடிவை எடுத்தார் எம்ஜிஆர். அதன்படி ஏவிஎம் ஸ்டுடியோவில், நின்று போன தெலுங்கு படங்கள் மீண்டும் சுமனை வைத்து எடுக்கப்பட்டன" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+