Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஐபி மகனுக்கு இடுப்பில் வேட்டியே நிக்கல.. நடிகரின் மகளா இப்படி? ஆன்லைன் கேமை பிரகாஷ் ராஜ் யோசிக்கல?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டில் எத்தனையோ பேர் தண்ணி அடிச்சிட்டு கூத்தடிக்கிறான். அநியாயம் பண்றான்.. ஆனால் சினிமாக்காரன் யாராவது தண்ணி அடிச்சிட்டான்னு தெரிந்தால், அன்னைக்கு அதுதான் தேசிய பிரச்சனையாகி விடுகிறது. போதை கலாசாரம் என்பது தவறுதான்.. நடிகர் போதைப் பொருள் விவகாரத்தில் கைதானால் தீவிரவாதி போல் சித்தரிக்கப்படுகிறார்கள். எனவே சினிமாக்காரர்கள் உஷாராக இருக்க வேண்டும். சின்ன தவறு செய்தாலும் தேசத் துரோகம் போல் காட்டி விடுவார்கள் என்று சமீபத்தில் இயக்குநர் பேரரசு பேசியிருந்தார். இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.

பேரரசு சொல்லும் கருத்திலிருந்து முற்றிலும் நான் வேறுபடுகிறேன்.. போதைப்பொருள் விவகாரத்தில் ஸ்ரீகாந்த் கைதானதுதான் பரபரப்பு செய்தியானது.. மாஸ் மீடியாவான சினிமாவில் பிரபலமான நடிகர் ஸ்ரீகாந்த் கைது என்றதும், மீடியாக்கள் கேமராவுடன் அங்கு செல்வார்கள்.. பிரபலமானவரின் தம்பி என்பதால் கிருஷ்ணா சம்பந்தப்பட்ட செய்திகளை படிக்க செய்வார்கள்.. இதை தவிர்க்கவும் முடியாது, தடுக்கவும் முடியாது.

Television actors daughter prakash raj

ஆனால், போதைப்பொருளை விற்ற பிரசாந்த், பிரதீப், போன்றோர் மீது இவ்வளவு வெளிச்சம் படவில்லை.. காரணம் இவர்களை மக்களுக்கு தெரியாது.. இது சாதாரண விஷயம்.. இதை பேரரசு பெரிதாக பேசியிருக்க வேண்டியதில்லை.

பொறுப்புணர்ச்சி வேண்டும்

அதுமட்டுமல்ல, பிரபல நடிகர்களை, ரோல் மாடலாக எடுத்து பின்பற்றக்கூடிய ஒரு கூட்டமே இங்கு உள்ளது. எனவே, பிரபல நடிகர்களுக்கும் பொறுப்புணர்ச்சி இருக்கிறதுதானே?

இன்று உச்சபட்ச நடிகர்கள் பெரும்பாலும், போதைப்பொருள் கடத்தலை, விரட்டி பிடிக்கக்கூடிய படங்களில்தான் நடிக்கிறார்கள்.. ஆனால், இதற்கு கொஞ்சமும் சம்பந்தமேயில்லாமல், சில நடிகர்கள், சொந்த வாழ்க்கையில் போதையையே பயன்படுத்திக்கொண்டு, ஏதாவது கிளப்களிலும், பார்களிலும் நேரத்தை செலவிடுவது சரியா? நீங்கள் திரையில் நடிப்பதை, நடிப்பு என்றுகூட தெரியாமல், நிஜமாகவே உங்களை ரசிகர்கள் நம்புகிறார்கள்.

சிகரெட், மது குடிப்பது என்பது பலரும் செய்யக்கூடியதுதான். ஆனால், இது பொதுவெளிக்கு வரும்போதுதான் சிக்கலாகிறது..

இயக்குநரின் மகன்

சில வருடங்களுக்கு முன்பு, ஒரு இயக்குநரின் மகன், குடிபோதையில் காரை ஓட்டிச்சென்று, எங்கேயோ போய் இடித்து, இதை பார்க்க கூட்டம் சேர்ந்துவிட்டது.. அந்த நபருக்கு, இடுப்பில் வேட்டியே நிற்காமல் அவிழ்ந்து அவிழ்ந்து விழுந்தது.. அந்த அளவுக்கு போதையில் இருந்தார்.. இந்த நிலைமையை ஏற்படுத்தியது யார்?

நடிகர் சல்மான்கார், குடித்துவிட்டு காரை ஓட்டி பிளாட்பாரத்தில் தூங்கி கொண்டிருந்த மக்களை கொன்றார்.. இங்குள்ள பிரபல நடிகரின் மகளும் குடித்துவிட்டு, காரை ஓட்டி பிளாட்பாரத்தில் இருந்தவர்கள் மீது ஏற்றிக் கொன்றார்.. அந்த கேஸ் என்ன ஆனது என்றே இதுவரை தெரியவில்லை.. யூடியூபர் இர்பான் கார், பெருங்களத்தூரில் விபத்தை சந்தித்ததே? இப்படி பிரபலமானவர்களின் செயல்கள், பேச்சுப்பொருளாகத்தானே வரும்?

பிரகாஷ் ராஜ் கூடவா?

ஆன்லைன் விளையாட்டிலும், பிரபலங்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள்.. கோடிகளில் பணத்தை தந்துவிட்டால், எந்த விளம்பரத்திலும் நடிக்கலாம் என்று நினைத்து விடுவார்கள்.. பணம் கண்ணுக்கு தெரிகிறதே தவிர, தவறான விளம்பரம் என்பது தெரிவதில்லையே ஏன்?

பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.. எத்தனையோ நல்ல கருத்துக்களை சொல்லும் பிரகாஷ் ராஜூக்கு இது தவறான விளம்பரம் என்று தெரியாதா?

தங்களது அபிமான நடிகர்களே இப்படி தவறான விளம்பரத்தில் நடித்தால், சாதாரண ரசிகனின் மனநிலை எப்படியிருக்கும்? விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்களின் தூண்டுதலின்பேரில் தாங்களும் அப்படியே ஆன்லைன் சூதாட்டத்தை பயன்படுத்துகிறார்கள்..

உள்ளே தூக்கி வைக்க வேண்டும்

காந்திஜி, நேரு, சுபாஷ் சந்திர போஸ், காமராஜர், பசும்பொன் தேவர் போன்றோரை ரோல் மாடலாக எடுக்காமல், நடிகர்களை ரோல் மாடல்களாக எடுக்கிறார்கள்.. அப்படியானால் நிலைமை என்னாகும்? நடிகர்கள் என்ன செய்தாலும் அது சரியென்று பார்வை ரசிகர்களுக்கு உள்ளது. அப்படியிருக்கும் போது, கோடிகளை வாங்கிக்கொண்ட தவறான விளம்பரங்களில் நடிக்கலாமா? தெரிந்தே தவறு செய்யலாமா?

இப்போது சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த பிரகாஷ்ராஜ் உட்பட 29 நடிகர்களுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், கைது செய்து உள்ளே வைத்திருக்க வேண்டும். அப்போதுதான், முன்னுதாரணமாக இதனை நினைத்து, வேறு எந்த பிரபலங்களும் தவறான விளம்பரங்களில் நடிக்க முன்வரமாட்டார்கள்" என்று காட்டமாக கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+