பிரபல நடிகை ஆல்யா மானசா சொன்னதை கேட்டீங்களா? பிள்ளையார் கோயில் வாசலில்.. அதுதான் சஞ்சய் மனசு.. வாவ்
சென்னை: நட்சத்திர தம்பதிகளான சஞ்சய், ஆல்யா மானசா இருவரும் சேனல் ஒன்றுக்கு தந்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. அதில், இந்துவாக இருந்த தான், எவ்வாறு இஸ்லாம் மதத்துக்கு மனம்விரும்பி மாறியதாக ஆல்யா மானசா கூறியிருக்கிறார்.
Galatta யூயூப் சேனலுக்கு பிரபல சீரியல் நடிகர்களும் தம்பதிகளுமான சஞ்சய், ஆல்யா மானசா பேட்டி ஒன்றை தந்துள்ளனர்.. நடிகை ஷகீலா கேள்விகளை கேட்க, நிறைய விஷயங்களை இந்த தம்பதியினர் மனம் திறந்து பேசியிருக்கிறார்கள்.

அந்தவகையில், ஆல்யா மானசா பேசும்போது, "நாங்கள் இருவருமே வேற வேற மதம் என்பது தெரியும்.. ஆனால், மத ரீதியான பிரச்சனை வரும் என்று பெரிதாக தெரியல.. ஆனால் தன்னுடைய மதத்துக்கு வந்துவிடும்படி என்று சஞ்சய் கட்டாயப்படுத்தவேயிலலை..
கட்டாயப்படுத்தவில்லை: ரிஜிஸ்திரர் கல்யாணம் செய்ய சான்றுகள் தேவைப்படும், குழந்தைகளின் எதிர்காலம் இதெல்லாம் யோசித்துதான், நான் முஸ்லிமாக மாறுகிறேன் என்று சொன்னேன். மற்றபடி என்னை யாருமே மதம் மாறுபடி கட்டாயப்படுத்தவில்லை.
அப்படின்னா முஸ்லிமாக மாறிவிட்டு, நெற்றியில் பொட்டு வைக்கலாமா என்று நிறைய பேர் கேட்கிறார்கள்.. சினிமா ஷூட்டிங்குக்காக அப்படி வைக்க வேண்டியிருக்கிறது.. மேலும் சிலர், உங்களை கல்யாணப்படுத்தி மதம் மாற வெச்சிட்டாங்களா? என்று கேட்கிறார்கள்.. கண்டிப்பாக கிடையாது.. நானேதான் மதம் மாறினேன்.
திருமணம்: நான் ஒரு இந்துவாக வளர்ந்தேன்.. எனக்கு விநாயகர் ரொம்ப பிடிக்கும். விநாயகர் சாமியை கும்பிட்டுவிட்டுதான் எந்த காரியத்தையும் செய்வேன். 11 தோப்புக்கரணம் போட்டால் அந்த பிரச்சனை தீர்ந்து விடும் என்றும் நினைப்பேன்.. இதெல்லாம் தெரிந்தும்கூட, சஞ்சய் ஒருமுறை கோயில் வாசலில் நிறுத்தி, "உனக்கு பிடிச்ச சாமியை கும்பிட்டு வா" என்றார்.. அந்த அளவுக்கு என் மனதை அவர் புரிந்து கொண்டிருக்கிறார்.. இதெல்லாம்தான் நான் முஸ்லிமாக காரணம் என்றார்.
தொடர்ந்து சஞ்சய் பேசும்போது, "சோஷியல் மீடியாவில் நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரும்.. நான் அதை கடந்து போயிடுவேன்.. ஆனால், ஆல்யாதான் அதை பார்த்து மனசு ஒடிஞ்சு போயிடுவா.. அதனால் நான் இன்ஸ்டாவில் கமெண்ட் செக்ஷனையே க்ளோஸ் வெச்சிட்டேன்..
விமர்சனங்கள்: அதேபோல, நான் ஒரு கார் வாங்குகிறேன் என்றால், அதை என்னை சார்ந்தவர்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். அதுக்காக ஒரு போஸ்ட் போடுகிறேன் என்றால், அதை பார்த்துவிட்டு சிலர், அதெல்லாம் எங்களுக்கு ஈஸியா கிடைச்சதா நினைச்சுக்கறாங்க.. தேவையில்லாமல் விமர்சிக்கிறார்கள்.. ஆனால், இதுக்கு பின்னாடி எவ்வளவு வலி உள்ளது எங்களுக்குதான் தெரியும்..
அதேபோல, ரோட்டில் ஆடற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டே என்பார்கள்.. எதை பற்றியும் நான் கேர் செய்ததில்லை.. அனைத்தையும் கடந்து சென்றுவிடுவேன்.. இப்படி எங்களை பேசுவதால், அவர்களுக்கு மனசு சந்தோஷப்படுகிறது என்றால் சரி" என்றெல்லாம் அந்த பேட்டியில் இருவரும் பேசியிருக்கிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications