குணால் குப்புற விழுந்த கள்ளக்காதல் கதை.. யாரந்த ஹீரோயின்? மறக்க முடியாத காதலர் தினம் குணால்: பிரபலம்
சென்னை: தமிழ் சினிமாவில் இப்போதும் கொண்டாடப்படும் படமாக உள்ளது காதலர் தினம்.. இந்த படத்தில் ஹீரோவாக குணால் நடித்திருந்தார்.. மும்பையை சேர்ந்த குணால், மாடலிங் துறையில் பணியாற்றி, சினிமா துறைக்குள் வந்தார். வருஷமெல்லாம் வசந்தம், புன்னகை தேசம், அற்புதம், திருடிய இதயத்தை என பல படங்கள் நடித்தார்.. மும்பையை சேர்ந்த அனுராதா என்பவரை திருமணம் செய்துகொண்டார், குழந்தைகளும் உள்ளார்கள். ஆனால் சில பிரச்சனைகளால் இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தனர்.. 2008-ல் திடீரென குணால் இறந்துவிட்டார். இதுகுறித்து பத்திரிகையாளர் சபிதா ஜோசப் பேட்டி தந்துள்ளார்.
Realone யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சபிதா ஜோசப், திருமணமான குணால், சினிமாவில் நடிக்க வந்தார்.. காதலர் தினம் படம் சூப்பர் ஹிட்டானது.. அதற்கு காரணம், ஏஆர் ரஹ்மான் இசை, பிசி ஸ்ரீராம் கேமரலா, டைரக்டர் கதிர் போன்றோரின் உழைப்புதான், அந்த படத்தின் சக்சஸுக்கு காரணம்.,

அடுத்ததாக வெளியான, "பார்வை ஒன்றே போதும்" படம் சுமாராக ஓடியது.. அதற்குபிறகு படங்கள் வந்தாலும், அந்த அளவுக்கு ஓடவில்லை. அதனால், பெரிய ஹீரோவாக குணால் வளர முடியவில்லை. அதனால் அவருக்கு பிசினஸ் வேல்யூ இல்லை.. ரசிகர்களிடம் ஒருவித வரவேற்பு இருந்தாலும், பெரிய அளவில் மார்க்கெட்டிங் குணாலுக்கு கிடைக்கவில்லை.
படவாய்ப்புகள் குறைந்தது
பட வாய்ப்புகளும் மெல்ல குறைந்ததால் மும்பைக்கே கிளம்பி விட்டார்.. பிறகு எடிட்டிங் துறைக்குள் நுழைந்தார்.. அங்கேயும் தொழில் போட்டிகள் அதிகமாக இருந்தன.. அங்கேயும் நடிகராகவும் பிரகாசிக்க முடியவில்லை.. அதனால், நண்பர்களுடன் சேர்ந்து படம் எடுக்க முடிவு செய்தார்கள்.. அந்த படத்தில் குணாலே ஹீரோவாக நடித்து, டைரக்ஷன் செய்ய முடிவானது.. அந்த படத்துக்கு புதுமுகம் ஹீரோயினை அறிமுகப்படுத்த முடிவு செய்தார் குணால்.
அந்த ஹீரோயினுக்கு நடிப்பு கற்று தருவதாக சொல்லி, குணாலுக்கு அவருடன் நெருக்கம் ஏற்பட்டுவிட்டது. ஏற்கனவே குணால் பல பெண்களுடன் சுற்றி திரிகிறார் என்று குணாலின் மனைவி பிரச்சனை செய்து கொண்டிருந்தார்.. இப்போது புது ஹீரோயினுடன் ஊர் சுற்றுவதை கேள்விப்பட்டதும், மீண்டும் குணாலுக்கு அட்வைஸ் தந்தார்.
அப்பார்ட்மென்ட்டில் தங்கினார்
"நடிப்பு கற்று தருகிறேன் என்ற சாக்கில் ஹீரோயினுடன் நெருங்கி பேச வேண்டாம் , அதுவே வாழ்க்கையில் பெரிய பாதிப்பை தந்துவிடும், ஹீரோ இமேஜ் போய்விடும்" என்று சொல்லியிருக்கிறார். இது தொடர்பாகவே தம்பதிக்குள் உரசல் அதிகமாகி கொண்டே வந்தது. ஆனால், குணால் மனைவியின் பேச்சை கேட்கவில்லை.. அந்த புதுமுக ஹீரோயின் தங்கியிருந்த அப்பார்ட்மென்ட்டுக்கே அடிக்கடி செல்ல ஆரம்பித்துவிட்டார்.
இந்த விஷயம் மீண்டும் மனைவிக்கு தெரிந்ததையடுத்து, புது ஹீரோயின் தங்கியிருந்த அப்பார்ட்மென்டுக்கே தேடி வந்து சத்தம் போட்டார்.. அடுத்தவர் குடும்பத்தை கெடுக்க வேண்டாம் என்றும் கூறினார். இதற்கு பிறகு, குணால் அப்பாவுக்கும் விஷயம் தெரிந்து மகனை சத்தம் போட்டார்...
ஆனால் குணாலோ, மனைவியை பிரிந்து ஹீரோயினுடனேயே அந்த அப்பார்ட்மென்ட்டில் வாழ்வது என்று முடிவெடுத்து, நிரந்தரமாக அங்கே தங்க துவங்கினார்..
புது ஹீரோயினுடன் தகராறு
திருமணமே செய்யாமல் ஒரே வீட்டில் தங்கியிருந்ததாலும், மனைவி அடிக்கடி தன்னுடைய வீட்டுக்கு வந்து தகராறு செய்து கொண்டிருந்ததாலும், ஒருகட்டத்தில், ஹீரோயினுக்கும் குணாலுக்கும் பிரச்சனை வெடித்தது..
"ஒன்று என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள், அல்லது மனைவியுடன் சேர்ந்து வாழுங்கள்.. எந்தவித அங்கீகாரமும் தராமல், வீட்டில் வந்து தங்கியிருக்க வேண்டாம்.. மனைவி இங்கே வந்து சண்டை போட்டு, அப்பார்ட்மென்ட்டில் என்னுடைய பெயர் கெட்டுவிட்டது. இருவரில் ஒருவர் யார் என்று முடிவு செய்யுங்கள்" என்று சொன்னார்..
இதனால், இவர்களுக்குள் பயங்கரமான வாக்குவாதம் வெடித்தது.. அந்த காரசார சண்டையில், ஹீரோயின் அழுதுகொண்டே பாத்ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டார். பாத்ரூமுக்குள்ளும் சென்று விக்கி விக்கி அழுதுள்ளார்..
குணால் எடுத்த முடிவு
ஏற்கனவே படவாய்ப்புகள் இல்லாமல் மன உளைச்சலில் இருந்த குணால், மனைவியின் டார்ச்சர், புதுமுக ஹீரோயினின் திருமண டார்ச்சர் என அனைத்துமே சேர்ந்து, அப்போதே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.. அந்த ஹீரோயினின் துப்பட்டாவிலேயே தூக்கு மாட்டி இறந்துவிட்டார்..
ஒரு மணி நேரம் கழித்து பாத்ரூமிலிருந்து அந்த பெண் வெளியே வந்து பார்த்தபோதுதான், குணால் ஹாலில் உள்ள ஃபேனில் இறந்துகிடந்தது தெரியவந்தது. நாக்கெல்லாம் வெளியே வந்துவிட்டிருந்தது.. உடனே அப்பார்ட்மென்ட்டில் தகவல் சொல்லி, போலீஸ் விசாரணை நடந்து, சிபிஐ வரை சென்றது.
அந்தவகையில் பெண் விவகாரத்தில் குணால் இறந்துவிட்டார்.. ஆனாலும், மனைவி இருக்கும்போது, தொழிலை கவனிக்காமல் இன்னொரு பெண்ணுடன் வாழ ஆசைப்பட்டதுதான் குணாலை காலி செய்துவிட்டது" என்று கூறியிருக்கிறார்.
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications