அம்மா, மகள் ஒரே நேரத்தில் கர்ப்பம்.. இருவரையும் கல்யாணம் செய்த யூடியூபர்! குவியும் வாழ்த்து: பிரபலம்
சென்னை: அம்மாவும் மகளும் ஒரே இளைஞரை திருமணம் செய்துள்ளனர்.. இவர்கள் 3 பேரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். அம்மாவும் மகளும் இப்போது கர்ப்பமாக இருக்கிறார்கள். இப்படியொரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.. இது தொடர்பான செய்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது. இதுகுறித்துதான், மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
King Voice என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "சில சமயங்களில் எதிர்பாராத விஷயங்கள் நடப்பதுண்டு.. முன்பெல்லாம் நம்முடைய கிராமங்களில், அம்மாவுக்கும், மகளுக்கும் ஒரே நேரத்தில் பிரசவம் நடக்கும்.. இது இயல்பான விஷயமாக இருந்தது.. ஆனால், அமெரிக்காவில் வேறு ஒரு சம்பவம் நடந்துள்ளது..
ஒரு யூடியூபர், தன்னிடம் பணியாற்றும் பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்.. ஆனால், சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.. அந்த யூடியூபர் பெயர் நிக் யார்டி.. இவருக்கு 3.2 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள். இவர் ஜமைக்காவை சேர்ந்தவர் என்றாலும், அமெரிக்காவில் தற்போது வசித்து வருகிறார்..

யூடியூபர் தனிக்குடித்தனம்
ஆரம்பத்தில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த நிக் யார்டி, போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறைக்கு சென்றிருக்கிறார்.. பிறகு ஜாமீனில் வெளியாகி, யூடியூப் தொழிலை தொடங்கியிருக்கிறார்.. இவருடைய யூடியூப் சேனலில் டானி மற்றும் அவரது மகள் ஜேட் ஆகிய இருவரும் பணியாற்றி வந்துள்ளனர்.. இதில் அம்மாவுக்கு தெரியாமல் மகளிடமும், மகளுக்கு தெரியாமல் அம்மாவிடமும் பழகி வந்துள்ளார் நிக் யார்டி..
இறுதியில், 29 வயதான நிக் யார்டி, 44 வயதான டானி மற்றும் 22 வயதான ஜேட் என இருவருடனும் இணைந்து வாழ முடிவெடுத்துவிட்டார்.. அதன்படி, 3 பேருமே ஒரே வீட்டில் தற்போது வசித்து வருகிறார்கள்.. இந்நிலையில்தான், அம்மா, மகள் இருவருமே கர்ப்பமாகிவிட்டார்கள்.. இதை தன்னுடைய யூடியூப் சேனலிலேயே நிக் யார்டி அறிவித்திருக்கிறார் .
3 பேருக்கும் வாழ்த்து குவிகிறது
ஆரம்பத்தில் 3 பேரையுமே கரித்து கொட்டிக் கொண்டிருந்த நேயர்கள், இந்த மகிழ்ச்சி தகவலை கேட்டதுமே, 3 பேரையும் வாழ்த்தி கொண்டிருக்கிறார்களாம்.. ஆனால், யூடியூப்பில் வேலைக்கு சேர்ந்தபோது, அம்மா, மகள் இருவரும் சாதாரண ஊழியர்கள்போலத்தான் இருந்தார்களாம்.. நாளடைவில்தான், நிக் யார்டி இவர்களிடம் நெருங்கி பழகினாராம்.
இது தொடர்பாக 22 வயதான ஜேட் சொல்லும்போது, "நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம்.. எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை.. அம்மா , மகள் என்பதை மறந்து, நாங்கள் இருவருமே இப்போது, "அம்மா" ஆகியிருக்கிறோம் என்பதை நினைத்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விரைவில் எங்கள் 2 பேருக்கும் குழந்தை பிறக்க போகிறது. அப்போதும் எங்களது குழந்தைகளுடன் ஒரே வீட்டில் அனைவரும் சந்தோஷமாக வாழ்வோம் என்று சொல்லி உள்ளார்"..
அமெரிக்காவில் சகஜம்
இந்த செய்தி உண்மையானது.. அமெரிக்காவில் இதெல்லாம் சகஜம் என்றாலும், இந்த செய்தி அங்கு மிகவும் வைரலாகி வருகிறது.. " என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.
முன்னதாக இதுகுறித்து, 44 வயதான அம்மா டானி செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "நானும் எனது மகளும் நிக்கின் குழந்தைகளை சுமந்து கொண்டு உள்ளோம். விரைவில் எங்களுக்கு குழந்தைகள் பிறக்க உள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் 3 பேருமே பிரபலமாக வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்தோம்" என்று விளக்கம் தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications